Saturday, May 19, 2007

கோவை வலைப்பதிவர் பட்டறையில் கலந்து கொள்ள நீங்கள் தகுதி பெற்றவரா?

நீங்கள் வலை பதிந்து மாமாங்கம் ஆகியிருக்கலாம்.ஆனால் ஒழுங்காக வலை மேய்பவரா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிந்தால் நீங்கள் பாஸ்.

இது வேந்தன் டுயுட்டோரியலோ,சீமான் ரியூட்டரியோ அல்ல.

ஆனால் 99 வீதம் பாஸ் மார்க் நிச்சயம்.
பார்த்து பிட் அடித்து கூகிள் மூலமும் சரியான விடையை சொல்லலாம்.
தேர்வுத்தாளுக்காக பொலிசாரிடம் தடியடி வேண்டத்தேவையில்லை.


வினாத்தாள் இதோ.

கேள்விக்கு ஒரு விடையை மட்டுமே குறிக்கலாம்.


முதல் வினா

சிம்பு என்றால் ஞாபகம் வருவது யார்?
1.ரோசா வசந் 2. நமீதா

பூனை சிலசமயம் இவர் சொல்லும் கேட்கும்

1.சயந்தன் 2. எலி

மகரஇலைகுழைநாதனை அறிவீரோ?

1.டோண்டு 2.பாண்டியமன்னன்

பொட்டி வந்துடுச்சு என்பவர்

1.பயாஸ்கோப்பு சின்னக்குட்டி 2.எடிசன்

குறி சொல்பவர் யார்? (உதவி:-நீட்டலளவை குறைத்தலளவை)

1.ஸ்பாம் 2.வெங்கட்

பிசினாக ஒட்டிக்கொள்ளும் அசின் நினைவு இவர் மனதில்

1.டீசே 2.கானா பிரபா

வலைப்பதிவர் அகராதியில் இன்னமும் விளக்கம் கொடுக்கப்படாத சொல்

1.பாசிசம் 2.சாகசம்

தமிழ்மணத்தின் தற்சமய சுடுசொல்

1.கழுகு 2 தயாநிதிமாறன்

கலவரபூமி எனப்படுவது

1.இலங்கை 2.தமிழ்மணம்

பட்டை என்றால்

1.நாமம் 2.தண்ணி அடிப்பது 3.அது பெரிய தொழில்நுட்பம்

வலைப்பதிவர் சந்திப்பில் முக்கிய அம்சம்

1.தாகசாந்தி 2.போண்டா 3.மனம்விட்டுப்பேசுதல்


எந்த வலைப்பதிவில் இந்த வரிகள் வந்தன? சந்தர்ப்பம் கூறுக.

1 ஹிஹிஹி நான்லாம் ஒரு "வீக் டார்கெட்டுண்ணா" என்னை போயி ஹிஹி உங்களுக்கே அசிங்கமா இல்லை

2. இது எல்லாம் யாரு பண்ணுவான்னு கேக்குறவுங்க...கலர் பார்த்துட்டே கூட இது எல்லாம் பண்ணலாம்.

3.தமிழில் தான் ஏதாவது லூசுப் பாத்திரம் இருந்தால் கூப்பிடுங்கள் மீரா ஜாஸ்மினை.. என்று சொல்லி அவர் நடிப்பைச் சீரழிக்கின்றார்கள்.

4 அந்தக் கணத்தை எனக்கு எப்பிடி எழுதுறது எண்டு தெரியேல்லையண்ணா. என்ர அம்மா, அத்தை, அம்மம்மா, ஆனந்தன் அண்ணா.. ஐயோ என்னாலை கத்தக் கூட முடியேல்லையண்ணா.

5.விட்டுக்கு உள் புகைந்துகொண்டிருந்த புகை சிம்னி வழியாக இப்போது வந்திருக்கிறது அவ்வளவு தான்.

6.பொதுவாக எங்கட சனத்தின்ர செய்தி கடத்திற வேகம் அபாரமாயிருக்கும். ஆனா இந்த ஹெலி விசயம் பரவாதது எனக்கு ஆச்சரியமாத்தான் இருந்திச்சு. அதோட பயமும் வந்திட்டுது

7.சென்னை செந்தமிழ் கத்துக்கணுமா?

7."செற்றியுக்குள்ளை கிடந்து என்னத்தைப் பாக்கப்போறாய்? மோட்டிலை சிலந்தியும் நுள்ளானும் எப்பிடிப் பிடிபடப்போகுதெண்டோ?"

8.மேசராசிக்கார நேயர்களே இன்று மஞ்சள் துண்டு போட்டு வெளியில் செல்லுங்கள். இன்றும் கூவும் ஒரு கேவலமான வியாபார நிறுவனத்தை மாபெரும் அரசியல் இயக்கத்தோடு தொடர்பு படுத்துவது அவசியமா?

9.நாடு இருக்கிற இருப்பிலை நாய் நாலு நாள் லீவும் ஒரு நாள் போனசும் கேட்டதாம்

10.ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு கணினி இருக்கும் என்பது புது மொழி


இதில் முன்றில் ஒரு பாகத்திற்கு நீங்கள் விடையை சரியாக சொல்லியிருந்தால் நீங்கள்
தமிழ்மணத்தில் குடித்தனமமே நடாத்தலாம் .நீங்கள் பாஸ்.

Read More...

Friday, May 18, 2007

தமிழ்மணத்திற்கு ஒரு வேண்டுகோள்!

தமிழ்மணம் என்னதான் திரட்டியாக இருந்தாலும் வலைப்பதிவர்கள் இல்லாவிட்டால் இழுத்து பூட்டிவிட்டு போகவேண்டியதுதானே..எனவே வலைப்பதிவர்களின் பதிவை திரட்டுவதுதான் அதனுடைய முழுநோக்கமாக இருக்ககூடாது.

தமிழ்மணம் தான் நினைத்ததைத்தான் செய்யும்.இருப்பதானால் இருங்கள் இல்லெயெனில் விலகிப்போகலாம் என்று சர்வாதிகாரமாகவோ காரமாகவோ சொல்லலாம்.

வலைப்பதிவர்களுக்கு போக்கிடமா இல்லை.ஒன்றில்லாவிட்டால் இன்னொன்று.அதுதான் சந்திக்கு சந்தி இன்னொன்று என்றாயிற்றே..


எனது வேண்டுகோள் என்னவெனில்
பல வலைப்பதிவர்கள் இரவு பகலாக தமிழ்மணமே தஞ்சமென்று இருக்கிறோம்.எனவே சற்று ஆசுவாசமாக இருப்பதற்கு தமிழ்மண நிர்வாகத்தினர் படுப்பதற்கு பாயும் தலையணியும் போர்வையும்
தரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

நிர்வாகத்தினர் இதனை கவனத்தில் எடுக்கவேண்டும்.

Read More...

Wednesday, May 16, 2007

வெறிநாய் க்கு முடிவு கட்ட தெருநாய்களை அடித்துக் கொல்வது

பூனைப்பதிவு பன்றிப்பதிவு போல இது ஒரு நாய்ப்பதிவு.இதற்குள் யாரும் உள் குத்து தேடாதீர்கள்.

வெறிநாய் கடியில் இருந்து தப்பிக்க தெரு நாய்களை அடித்துக் கொல்வது சரியா, தவறா என்று கேட்டதற்கு Ôசரிதான்Õ என்று 72 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

தவறு என்பது 20 சதவீதம் பேரின் கருத்து. நாய்க்கடியில் இருந்து தப்ப, தெரு நாய்களை ஒழிப்பது சரியா, தவறா என்று தெரியவில்லை என்று 7 சதவீதம் பேர் கூறினர். ஒரு சதவீதத்தினர் கருத்து சொல்ல மறுத்து விட்டனர்.

நாய்க்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டது புதுவைக்காரர்கள் போலிருக்கிறது. அங்கே தெருநாய்களை அடித்துக் கொல்ல 85 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது மாநில சராசரியைவிட 13 சதவீதம் அதிகம். கோவையிலும் இதை 84 சதவீதம் பேர் ஆதரிக்கின்றனர். இப்படிச் சொன்னவர்கள் திருச்சி (78%), நெல்லை (75%), நாகர்கோவில்(72%), சென்னை, மதுரையில் தலா 71 சதவீதம்.

சேலத்தில் மிகக் குறைவாக 47 சதவீதத்தினர் இந்த கருத்தைக் கொண்டுள்ளனர். அங்கே தெரு நாய்களைக் கொல்வது தவறு என்போர் 40 சதவீதம். இது மாநில சராசரியைவிட 20 சதவீதம் அதிகம். தவறு என்பவர்கள் புதுச்சேரியில் மிகக் குறைவு. 8 சதவீதம் மட்டுமே. மதுரை (27%), நாகர்கோவில் (26%), நெல்லை (23%), திருச்சி (17%), சென்னையில் (16%), வேலூர் (14%).

வெறிநாய் கடியைத் தவிர்க்க தெருநாய்களைக் கொல்லலாமா என்று தெரியவில்லை என்று அதிகம்பேர் சொன்னது வேலூரில். 24 சதவீதத்தினர் இதைத் தெரிவித்தனர். அடுத்து சேலத்தில் 13 சதவீதம் பேர் இதைக் கூறினர். இதுபற்றி கருத்து தெரிவிக்க விரும்பாதவர்கள் சென்னையில்தான் அதிகம். 9 சதவீதம்.

தெருநாய்களைக் கொல்வது சரி என்றவர்களில் ஆண்கள் 71 சதவீதமும், பெண்கள் 72 சதவீதமும் உள்ளனர். கொல்வது தவறு என பெண்களைவிட (18%), ஆண்கள் (22%) அதிகம் பேர் தெரிவித்தனர்.

http://www.dinakaran.com/daily/2007/may/16/jannal.asp

Read More...

Monday, April 30, 2007

மீண்டும் suryanfm on net

சண்ணின் சூரியன் பண்பலை வானொலி இப்பொழுது இணையத்திலும் கேட்க கிடைக்கிறது.

Read More...