பதிவெழுதி கன காலமாகிவிட்டது.ஓரிரு கேள்விகள் உள்ளது யாராவது பதில் தாருங்கள்.தூயாவினகேள்வியான ்
மொக்கைன்னா என்னா என்று கேட்டதற்கு படம் கீறி குறிப்பு கொடுத்து விளக்கோ விளக்கு என்று விளக்கியவர்கள் இதற்கும் கருணை காட்டவேண்டும்.
தமிழ் வலைப்பதிவில் சமீப காலமாக ஆணி பிடுங்குதல் என ஒரு சொற்தொடர் பிழங்குகிறது.அதனுடன் தொடரும் கருத்தை பார்க்கும்போது அதிக வேலைப்பழு என புரிந்துகொள்ளமுடிகிறது..இப்படியா வரும்?
ஏன் அதற்கு ஆணி பிடுங்கல் ஆணிக்கும் வேலைக்கும் என்ன தொடர்பு?
மற்றைய கேள்வி.
முன்னர் கவுண்டர் படங்களிலெல்லாம் ஒரு நாய்ப்பாசை இருக்கும்.இப்ப வடிவேலு காலத்திற்கு பின்னர்
நாதாரி என்ற சொல் அடிக்கடி வருகிறது.அப்படி என்றால் என்ன?முன்னர் இப்படி ஒரு சொல் கதையிலோ
பத்திரிகைகளிலோ கேள்விப்படவில்லை.இது எந்த வட்டாரப்பேச்சு?
இப்ப இது இரண்டும்தான் தலையாய கேள்வி மற்றையவை அப்பப்போ வரும்.
Read More...
Summary only...

அரச இயந்திரமொன்றுடன் இணைந்து செயல்படக்கூடிய நகைச்சுவையுணர்வுடன் கூடிய காலவரையறையற்ற வேலை ஒப்பந்தத்தில் வேலையாற்றக்கூடிய இளநிலை கணனிப்பொறியியலாளர்கள் தேவை.
நீங்கள் எந்த மொழிபேசுபவர்களாக இருந்தாலும் பரவாயில்லை.ஆனால் தமிழ்நெற் என்னும் இணைய ஊடகத்தை உடைத்து இயங்காமலிருக்கப் பண்ணவேண்டும்.
அவர்கள் மீண்டும் வேறு வழியில் இயங்கும்போது அதனையும் இயங்காமலிருக்கப் பண்ணவேண்டும்.
இதன் மூலம் உங்களது வேலைவாய்ப்பு எப்போதும் பிரகாசமாகவே இருக்கும்.
மேலும் பொழுது போகாவிட்டால் வழமையாக இலங்கை இராணுவம் தங்களுக்குள்ளேயே சுட்டுக்கொள்வதுபோல் அரச இராணுவத்தளத்தையே நீங்கள் hack பண்ணிக்கொள்ளலாம்.
உங்கள் அதிகப்பட்சமான வேலைப்பழுவாக கூகிளையே கக் பண்ண சொல்லி கேட்கப்படலாம்.அப்போது உங்கள் நகைச்சுவையுணர்வு உங்களுக்கு கை கொடுக்கும்.
Sri Lanka seeks hackers to down pro-Tiger websiteஇது பற்றி சிங்கள தமிழ் மக்கள் விவாதித்த கலந்துரையாடல் ஒன்று
Read More...
Summary only...

விடியக்காலை கருக்கலில் 3 மணி காட்சிக்கு முதல்நாள் இரவு 9 மணிக்கு எல்லாம் கியூவில் நின்று படம் பார்த்த இரசிக அனுபவங்கள் நிறையவே உண்டு.
அது அந்தக் காலம்
இப்ப என்னடாவெண்டால் காலம் மாறிப்போச்சு..ரெக்னிக்கல் பல கல் தூரம் முன்னேறிவிட்டது.
ஒன்லைன் புக்கிங் எண்டுறாங்கள் முதல் காட்சி எண்டுறாங்கள்.ஆனால
நாயுடு பாக்கிறார் தனுஸ் பாக்கிறார்.
இரசிகன் மட்டும் வழமைபோல் அண்ணாந்து பாக்கிறான்.
எல்லாவற்றையும் கபளீகரம செய்வதுபோல் இணையத்திலும் அந்தா வருது விரைந்து வருது என்று விளம்பரம் வேறு காட்டுறாங்கள்.இந்த திறத்திலை படத்தை தியேட்டரிலை போய் பாப்பம் எண்டால்
ஒரு 20 யூரோ வைத்தால் தான் சிவாசி படம் என்று அடம்பிடிக்கிறார்கள்.
கோடி கோடியாய் பணம் கொட்டி ஸ்பெயினில் மாடு பிடித்ததற்காக நான் ஏன் 20 யூரோ கொடுத்து பார்க்கவேண்டும்?
சந்திரமுகிக்கு எவ்வளவு பணம் செலவளித்தார்கள்?
ஏன் அது 800 நாட்கள் தாண்டி ஓடவில்லையா?அல்லது இது 800 கடந்து ஓடுமா?
இரஜினி நரைத்த தலையுடன் வந்தாலே கூட்டம் சேருமே..பிறகேன் இந்தச் செலவு?
சரி
நான் ஒருவன் மட்டும் தியேட்டருக்கு போவதானால் 20 யூரோ கொடுத்து பார்க்கலாம் வீட்டில் உள்ள
எல்லோரையும் அழைத்து சென்று இந்த விலைக்கு படம் பார்ப்பதானால் கடைசியில் மொட்டைதான்..(இரஜனி கூட படத்தில் மொட்டைதானாம்.)
பேசாமல் ஓஸியில் படம் க்ளியராகப் பார்ப்பதற்கு ஒரு வழி உண்டு.சத்யராசுக்கு பிடிக்காத வழி .
சண் ரீவியில் ரொப் 10 என்று கிட்டத்தட்ட படத்தில் 90 வீதமும் காட்டுவார்கள் .அப்போ பார்த்துக்கொள்வோம்.
படத்தில் சந்தேகம் வந்தால் இணையம் கைகொடுக்கட்டும்.
Read More...
Summary only...