Friday, January 27, 2006

இதெல்லாம் 2 too much

காசி ஆடுன்னா ஆடவும் பாடுன்னா பாடவும் உக்காந்திரின்னா உக்காரவும் எழுந்திரின்னா எழுந்திரிக்கவும் இதென்னா தமிழ்மணமா?

அல்லது புளொக்கர் சேர்விசா? இப்படி எனக்கும் ஒரு சந்தேகம் இருந்ததுதான்..

ஆனால் தமிழ் மணத்தின் சேவை அவசியமானதாக இருந்தமையினால்,
தமிழ் மண வாசல் கதவை தட்ட ஆயுத்தமாகும்போது ஆடவும பாடவும் சொல்லும்போது தயார் என்பதை எழுதிக் கொடுத்திருந்தேன்.

பிடிக்காத பட்சத்தில் எந்தநேரத்திலும் கால வரையின்றி நான் வெளியேறிக்கொள்ள உரிமையும் எடுத்திருந்தேன்.

எனவே எனக்கு இந்த அடிக்கடி புதுப்பிக்கப்படும்
கொள்கை மாற்றங்கள் பெரிதாக பாதிப்பெதனையும் ஏற்படுத்தவில்லை.

ஆனால் ஒரு சில வலைப்பதிவாளர்களின் வலைப்பதிவுகள் மட்டுப்படுத்தப்பட்டபோது
மட்டும் மனம் சற்று சங்கடப்பட்டது.

அதற்காக வெளியேறி முரண்பாட்டை கூட்டம் கூட்டிசொல்ல தயாராகவில்லை.

இணையத்தின் சாத்தியம், பலம் பலவீனம் அவர்களுக்கு தெரியாததா?

அதன் விளைவு ரெக்னோர்டி வந்தது தேன்கூடு வந்தது.

ஆனாலும்

இணையத்தில் தமிழ் மணத்திற்கு ஈடாக தற்போதைக்கு இன்னொரு தமிழ் வலைப்பதிவுகள் திரட்டி வரவில்லை.

ஓரளவிற்கு தேன்கூடு தமிழ் மணத்தோடு முரண் படுபவர்களுக்கு மாற்று தளமாக அதை ஈடு செய்ய முனைகிறது.

நாளை தமிழ் மணம்போல் சட்டதிட்டங்கள் போட்டு தேன் கூடும் மாறும் பட்சத்தில் இன்னொருதளமாக இன்னொரு கூடுகூட உருவாகலாம்.எதுவும் இணையத்தில் நிரந்தரமுமில்லை. போட்டியில்லாமலுமில்லை.

இதேபோல் காசி தரும் அதே பட்டையை போட்டு பட்டையை கிளப்பலாம்.

நிற்க.

எந்தளவிற்கு தமிழ் மணத்தின் விளக்கணைக்கும் செயல்பாட்டுடன் இணக்கமில்லையோ அதை விட பல்மடங்கு இந்த டாய்லெட் சுவர் கிறுக்கிகளின் செயற்பாட்டிலும் எனக்கு உடன்பாடில்லை.

இது பற்றி ஏற்கனவே திருமதி உஷா இராமச்சந்திரன் வலைப்பதிவே வேண்டாம் என்று கருத்து தெரிவித்தபோது ஒரு பதிவு(முற்றுப்புள்ளி பிழை )போட்டுள்ளேன்.

மாற்று கருத்துக்களை முகமூடி போட்டு சொல்லலாம் தவறில்லை.

டேய் காசி என்றோ டேய் டோண்டு என்று கூட அழைக்கலாம் ..

ஆனால் அநோமதேயம் என்ற பெயரில் குடும்ப அங்கத்தவர்களை இழுப்பது எந்த வகையில் நியாயம்?

மாற்றுக்கருத்துக்கு அல்லது தங்கள் வாதத்திற்கு பலம் இல்லாதபோதே
இப்படியான வாதங்களை முன்வைக்கவேண்டி வருகிறது.

எனவே அநோமதேயங்கள் அடுத்தடுத்த பின்னூட்டங்களில் இதை கவனித்து வாதங்களை மட்டும் முன்வைக்க.

அந்த விதத்தில் தமிழ் மண நிர்வாகி(கள்) சொல்வது போல் எனது பின்னூட்டத்திலும் மட்டுப்படுத்தப்பட்ட பின்னூட்ட வசதியையே அனுமதித்துள்ளேன்.

நிற்க இது வேறு

வலைப்பதிவன் பின்னூட்டத்தில் திரு ப்ரகாஷ், குறித்த பின்னூட்டத்தின் பகுதியொன்று..

//இந்த சிக்கலை முழுவதுமாக தீர்த்துக் கட்ட, சில நண்பர்களின் உதவியுடன், தமிழகக் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவின் உதவி ஆய்வாளரிடம் முறையாகப் புகார் செய்யப்பட்டு, அது சிபிசிஐடியின் டிஐஜி ராங்கில் இருக்கும் பெண் காவல்துறை அதிகாரியிடம் ரெ·பர் செய்யப்பட்டுள்ளது. கமிஷனர் அலுவலகத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, ஒரு பத்திரிக்கை நிருபர் வந்து வேவு பார்த்தார். மொத்த விஷயத்தையும் ஜூவி மாதிரி பத்திரிக்கையிடம் சொல்லி, எக்ஸ்போஸ் செய்தால் என்ன என்று கூட யோசனை வந்தது. நாட் நௌ என்று உபதேசம் கிடைத்தது. காவல் துறை நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது.//


இதெல்லாம் சற்று ஓவர் .

வலைப்பதிவு முயற்சிகளை முறியடிக்கும் முயற்சியிது.

தாம் கண்காணிக்கப்படுகிறோம் என்ற உணர்வோடுதான் இனி ஒவ்வொரு வலைப்பதிவனும் வலைப்பதிவிடவேண்டும்.

என்னமோ போங்க சார்..

0 comments: