சண்டைக்கோழி- கிளம்ப்பிட்டாங்க.
மாட்டிக்கிட்டது நம்ம எஸ்.ராமகிருஸ்ணன்.துப்பட்டவாவை வீசி பெண் கவிஞர் ஆர்ப்பாட்டம்!
என்னடா ஏதோ எக்கச்சக்கவிவகாரம் போல என்று பத்திரிகையை புரட்டிப்பார்த்தால் ஓன்றுமே புதிதாக தெரியவில்லை.
பிரபஞ்சன் பெண் கவிஞருக்கு வக்காலத்து வேறு..
படத்தை பார்த்தவன் என்ற முறையில் எதுவுமே தவறாகத்தெரியவில்லை..
இதுக்கெல்லாம் ஒரு ஆர்ப்பாட்டம்...ஒரு பரபரப்பு ..விளம்பரம்...
என்னதான் நடந்தது ?
http://epaper.tamilmurasu.in/2006/jan/08/default.htm
இதுதான் அந்த பிரச்சனைக்குரிய வசனம்
மேலதிக விபரத்திற்கு
11 comments:
படம் பார்த்தபோதே இச்சந்தேகம் வந்தது. இதில் உள்நோக்கம் இருக்கா இல்லையா என்பதைப்பற்றிச் சொல்லத்தெரியவில்லை. ஆனால் இல்லையென்று ஒதுக்கிவிடவும் முடியாது. 'குட்டி ரேவதி' என்ற பெயர் பரவலாகப் பாவனையில் இருக்கும் பெயரா இல்லையா என்பதும் தெரியவில்லை. மணிரத்தினம் ஆய்த எழுத்தில் தேடிப்பொறுக்கி 'செல்வநாயகம்' என்ற பெயரை அரசியல்வாதிக்கு வைத்ததைப் போல அவ்வப்போது நாசுக்காக இப்படியான வேலைகள் நடக்கின்றன அல்லது நடப்பதாக நினைக்கிறேன்.
நானும் நினைத்தேன் ஏதாவது தகராறு வருமோ என..!
சன்னில் பார்க்கும்பொழுது "பக்" என்றது. ஏதோ விவகாரம் என்றும் தோன்றியது.
கொழுவி அவர்களே, அது என்ன "செல்வநாயகம்" மேட்டர்?
மலிவான, தனிநபர் தாக்குதலாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. 'குட்டி ரேவதி' எனபதை விடப் பரவலான பெயரான 'ஜெயலலிதா'வை இதே வகையில் குறிப்பிடட்டுமே, தைரியமிருந்தால்?
நல்லவங்ககூட சினிமாவுக்கு வந்தா இப்பிடி தலைகால் புரியாம எதையாவது எழுதறது. விருமண்டில ஒரு பெண்ணோட ஊர் 'கீழவெண்மணி'ன்னு (டப்புன்னு ஒரு வார்த்தையப் போட்டு, உணர்ச்சி வசப்பட வச்சு, காசு பாக்கறது இது., (சண்டியருக்கு பின்னாடி இருந்த பாலிட்டிக்ஸ் அது., படம் வந்து பத்து வருசம் கழிச்சுப் பாக்கிறவங்களுக்கு எந்த பாலிடிக்ஸூம் புரியாது)). வந்த மாதிரி., படத்துக்கு சம்பந்தமில்லாம., தன்னோட புத்திசாலித் தனத்த இவர்கள் காட்டும்போது., எரிச்சல் எப்படி வருதுங்கிறிங்க?. 'குட்டி ரேவதி'ன்னு பேர் வச்சு., 'துப்பட்டான்னு' வசனம் வருதுன்னா எந்த நோக்கமுமே இல்லாம எழுதியிருக்கிறாரா?. நல்ல கதைதான் போங்க.
கருத்து சுதந்திரத்தின் படி எஸ்.இராமகிருஷ்ணனுக்கு ஆதரவையும் கண்டனத்தையும் தெரிவிக்கின்றேன்....
எழவு என்ன செய்ய, கருத்து சுதந்திரம் ஆளுக்கு ஆள் மாறுது, எஸ்.இராமகிருஷ்ணன் தங்கர் பச்சான் கேட்டகிரியில் வந்தால் எதிர்ப்பும் குஷ்பு கேட்டகிரியில் வந்தால் ஆதரவும் இருந்து விட்டு போகட்டுமே என்று தான் ஆதரவும் கண்டனமும், இப்போ இரண்டு பக்கமும் நாம இருக்கோமுங்க..... :-))
என் மனவோட்டத்திற்கு பின்னூட்ட வழியில் திசையளித்த கொழுவி, நளாயினி, ராமச்சந்திரன் உஷா,குழலி,Voice on Wings, அப்டிபோடு ஆகியோருக்கு நன்றி.
இதே போலத்தாங்க ஆறு என்கிற படத்திலயும்
பிரச்சினை... ஆனா அதப்பத்தி பேச வந்தா சிலபேரு
இவங்களுக்கு வேற வேலையே இல்லை.. எது எதுக்கெல்லாம் வழக்குப் போடுகின்றது என்று விவஸ்த்தை கிடயாது?? கண்டகண்டதுக்கெல்லாம்
கேசு போடுறாங்க என்று கூச்சல் போடுறாங்க..
இப்போ இலக்கிய பக்கத்தில சச்சரவு என்று வந்ததும்
எல்லாருக்கும் புரிஞ்சிருக்குமே இந்த சினிமாக்காரங்கள பத்தி...........
இதோ ஆறு பட விவகாரம்.......
000000000000
''டேய்இ ராஜரத்தினம்! நீ மாவட்ட தலைவர் இல்லைடா...! மாவாட்டுற தலைவர்...!''
சூர்யா ஹீரோவாக நடித்து ஓடிக் கொண்டிருக்கும் 'ஆறு' திரைப்படத்தில் இப்படியரு வசனம் வரும். அரசியல் மேடை சம்பந்தப்பட்ட ஒரு காட்சியில் 'சவுண்டு சரோஜா'வாக முழங்கும் நடிகை ஐஸ்வர்யா எடுத்துவிடும் இந்த வசனம்தான் இப்போது வில்லங்க விதையைத் தூவி விட்டிருக்கிறது.
ராஜரத்தினத்தை நாம் சந்தித்தபோதுஇ ''என்னை அசிங்கப்படுத்தணும் என்பதற்காகவே சம்பந்தமில்லாம அந்தக் காட்சியைப் படத்துல சேத்துருக்காங்க.
'டேய்இ ராஜரத்தினம்! நீ மாவட்டத் தலைவர் இல்லைடா! மாவாட்டுற தலைவர்டா'னு சொன்னதோட நிக்கல... 'உன் தலைவனுக்குக் கொழாபுட்டே அவிக்கத் தெரியாது. அவன் எங்கடா கொழாய் போடப்போறான்'னு ஒரு வசனத்த பேச வச்சுருக்காங்க.
சட்டமன்றத் தேர்தல்ல சிவகங்கை தொகுதியில போட்டியிடலாம்னு நான் முடிவு பண்ணி வச்சுருக்குற நேரத்துலஇ என்னைக் கேவலப்படுத்திவிடணும் என் பதற்காகவே இந்தக் காரியத்த செஞ்சுருக்காங்க.
கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருக்கும் ராஜரத்தினம்இ கட்சியின் எம்.பியான சுதர்சன நாச்சியப்பனின் அதிதீவிர விசுவாசி. எல்லா இடங்களையும் போலவே இந்த மாவட்ட காங்கிரஸிலும் ஏகப்பட்ட கோஷ்டிகள் உண்டு.
இதில் 'காரைக்குடி நகர காங்கிரஸ்' செயலாளராக இருக்கும் கண்ணன்இ ஆரம்பத்திலிருந்தே ராஜரத்தினத்துக்கு எதிராகக் கொடிபிடித்து நிற்பவர்.
டைரக்டர் ஹரியின் முதல் படமான 'சாமி'யிலிருந்து அவர் எடுத்த பல படங்களுக்கு லோக்கல் புரொடக்ஷன் மேனேஜராகப் பணியாற்றியிருக்கும் கண்ணன், ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டியும் உள்ளார். ஆறு' படம் சென்னையில் வைத்துப் படமாக்கப்பட்டபோதும் இந்தப் படத்தில் இரண்டொரு காட்சியில் நடிக்க, நட்புரீதியில் கண்ணனுக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் ஹரி. இதையெல்லாம் கூட்டிக் கழித்துதான் 'ஆறு' படத்தில் வரும் 'மாவாட்டுற தலைவர்' வசனம் விவகாரமாக வெடித்துள்ளது
இராமகிருஷ்ணன், தான் அவ்வசனத்தை எழுதவில்லையென்றும் யாரோ இடையிற் புகுத்திவிட்டதாகவும் சொல்லியிருக்கிறார்.
இது உண்மையென்றால் திட்டமிட்டுத்தான் நடந்திருக்கிறதென்று ஊகிக்கலாம்.
-------------------------
இதிலிருக்கும் உட்குத்தைக் (உள்குத்து) கண்டுபிடித்துப் பதிவுபோடுமாறு திரு.குழலி அவர்களைத் தாழ்மையுடன் கேட்டு அமர்கிறேன்.
நன்றி.
இதே நிலமை போன படத்துல பெயர் எல்லாம் X Y அப்படினூதான் வைக்கனும். அதுக்கும் ஒரு கோஷ்டி தமிழில் வைக்கனும்னு சொல்லும். அ,ஆ,இ அப்படினு தான் பெயர் வைக்க முடியும் போல இருக்கு.
Post a Comment