Saturday, May 06, 2006

சென்னை வருகிறேன் .பஞ்சம் பிழைக்க..

சென்னை வருகிறேன் .பஞ்சம் பிழைக்க..

வந்தோரை வாழவைக்கும் தமிழகம் என் குடும்பத்தை மட்டும் விலக்கியா வைத்துவிடும்? இப்போது போனால்தான் உண்டு என்று என் நண்பர்கள் சொன்னதை நம்பி குடும்பத்துடன் கிளம்புகிறேன். வெளிநாட்டில் வேலைவாய்ப்புகள் மங்கிப்போன நிலையில் சென்னையை நம்புவதைத்தவிர வேறு வழி தெரியவில்லை.

ஒரு 4 கிராம் பவுண்

பார்க்க ஒரு கலர் ரீவி
வீட்டுக்கு ஒரு கோமாதா.
மகனுக்கு ஒரு கணனி.
.இலவச அரிசி வீடு
தேடிவரும் ரேசன் கடைப்பொருட்கள்...

இவ்வளவும் ஓரிடத்தில் கிடைப்பதற்கு நான் சென்னையென்ன நிக்காராகுவாவே செல்லத்தயார்.

எங்கள் குடும்பத்தில் 3 வாக்குச்சீட்டுக்கள்.

வாக்காளர் சீட்டில் இல்லாவிட்டாலும் எமது வலைப்பதிவு நண்பர்கள் யாராவது உதவி செய்தால் 3 பேரும் 3கட்சிகளில் எதுக்கென்றாலும் வாக்குப்போட்டு மினிமம் கியாரண்டியாவது பெற்றுக்கொள்வோம்.


நங்கநல்லூர் தொகுதியாயின் விசேடம்.அங்குதானே நமது எல்லோரும் அறிந்த வலைப்பதிவின் சுழியாகிய டோன்டுசார் இருக்கிறார்..பக்கபலமாக இருப்பார்.ஜமாய்த்துவிடலாம்.

வலைப்பதிவாளர்களே உதவுங்கள்.

5 comments:

VSK said...

நாளைக்கு ஓட்டுப்பதிவு!
நீங்க எப்போ கிளம்பி, எப்போ சென்னை வந்து, எப்படி ஓட்டு போடறது?
ம்ம்ஹூம்..... டூ லேட் !!!
:-)

நாமக்கல் சிபி said...

//ஒரு 4 கிராம் பவுண்

பார்க்க ஒரு கலர் ரீவி
வீட்டுக்கு ஒரு கோமாதா.
மகனுக்கு ஒரு கணனி.
.இலவச அரிசி வீடு
தேடிவரும் ரேசன் கடைப்பொருட்கள்...//

அடங்கொய்யா! யாருக்குமே வராத ஐடியா உமக்கு எப்படி வந்தது!

அதென்ன எல்லாருக்கும் 4 கிராம் தங்கமா? கல்யாணம் பண்ணுறவங்களுக்கு மட்டும்தான்!

theevu said...

நன்றி sk நாமக்கல் சிபி

நாமக்கல்லிலிருந்து முன்னர் ராஜா என்பவர் வலைப்பதிவில் வருவாரே காணவில்லை..

ஏதாவது தெரியுமா?

கானா பிரபா said...

தீவு

கெதியாப் போங்கோ,

நாமக்கல் சிபி said...

//நாமக்கல்லிலிருந்து முன்னர் ராஜா என்பவர் வலைப்பதிவில் வருவாரே காணவில்லை..//

நானும் தேடிப் பார்த்திருக்கிறேன். தகவல் அறிய முடியமுடியவில்லை.
ILAவிடம் கேட்டால் தெரியும் என்று நினைக்கிறேன்.