திமுக தோல்வி
திமுகவின் தோல்விகான காரணம் என்ன? வைகோவை வெளியேற்றம் செய்தது..சரத்ததை வெளியேற்றி அவரது சமூகத்தை பகைத்தது..விஜயகாந்துடன் சமரசம் பண்ணாது கல்யாணமண்டபத்தை இடிக்க முற்பட்டது.கலைஞர் கிள்ளியும் கொடுக்கமாட்டார் என்ற ராஜேந்தரை
அரவணைத்தது..தயாநிதி மாறனின் சதுரங்கம் ..ஜே க்கு போட்டியாக கலர் ரீவி விவசாயக் கடன் இரத்து என திட்டங்களை அறிவித்தமை போன்றவை மக்கள் மனதில் திமுக பற்றி இருந்த ஒரு கலக்கம் கலைந்து ஒரு தெளிவு பிறந்து வாக்களித்தார்கள்.
இதுவே திமுகவின் தோல்விக்கு ஓரு காரணம்..
இப்படி நாளைக்கு அரசியல் ஆய்வாளர்கள் திமுக தோற்றால் பிளந்து கட்டப்போகிறார்கள்..
வென்றபின்னும் தோற்றபின்னும் காரண காரியம் கணடுபிடிப்பது சுலபம் .
அதற்கு முதலே தீவு தனது ஆய்வை வெளிப்படுத்தியுள்ளார்.
திமுக நாளை வென்றால் வென்றதற்கும் மேலே குறிப்பட்ட காரணங்களைத்தான் ஆய்வாளர்கள் பத்திரிகையாளர்கள் சொல்லப்போகிறார்கள்..:)
நமக்கு
இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன...
ராஜபக்க்ஷா கொடுக்கும் மலர்கொத்தை யாரோ ஒரு தமிழக முதல்வர் வாங்கத்தானே போகிறார்.
4 comments:
திமுக தோல்வின்னு தலைப்பு போட்ட ஒரே ஒரு மனுஷன் நீர்தானய்யா
>> ராஜபக்க்ஷா கொடுக்கும் மலர்வளையத்தை யாரோ ஒரு தமிழக முதல்வர் வாங்கத்தானே போகிறார். >>
பொறுப்பற்ற சொற்கள்.
இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பத தெளிவாகச் சொல்ல முடியுமா?
நன்றி நியோ..மலர் வளையம் அல்ல மலர்கொத்து என்று வந்திருக்கவேண்டும்.திருத்தியுள்ளேன்.
DMK lost because of Gold. Do you know why women voted in large numbers? Amma knows Color tv is beated by Gold chain inside the house.
Hah haha haha haha haha...
Muka... ippudu choodu...
Post a Comment