Saturday, May 13, 2006

தற்ஸ்தமிழ்

திண்ணை பற்றி நேசகுமார் எழுதியிருந்தார்.
நானும் இதே நேரம் தற்ஸ்தமிழ் பற்றியும் எழுதியாகவேண்டும்.
ஈழத்து செய்திகளை உடனுக்குடன் சுட சுட தருவதற்கு பல இணையத்தளங்கள் இருக்கின்றது.ஆனால் இந்திய செய்திகளை உடனுக்குடன் பார்க்க நான் மட்டுமல்லாது பலர் நாடுவது இந்த தளத்தைதான். பல வருடங்களுக்கு முன்னர் மகேஸ் என்பவர் இந்த தளத்தை மகேஸ் கொம் என்று நடாத்தி வந்தார் .முன்னரும் பல இணைப்புக்களுக்காக இந்த தளத்திற்கு சென்று வந்தேன்.பின்னர் அவர் நடாத்திய தளம் விரிந்தே இந்த தற்ஸ் தமிழ் மற்றும் திராவிட மொழிகளில்பெருகிற்று என நினைக்கிறேன்..

இதே போல் வேறு தமிழ்தளங்களும் செய்திகளை உடனுக்குடன் அப்டேற் செய்கிறதா எனத்தெரியவில்லை.

தளம் யுனிகோடில் இல்லை என்ற குறையை தவிர,திறமையாக செயல்படுகிறார்கள் பாராட்டுக்கள்.

1 comments:

நேச குமார் said...

தமிழ் சிஃபியில் செய்திகள் உடனுக்குடன் வலையேற்றப்படுகின்றன. ஒரு நாளில் ஐந்து முறை இந்த தளம் அப்டேட் செய்யப் படுகிறது என்று ஆசிரியர் ஒரு முறை என்னிடம் பேசும்போது குறிப்பிட்டார்.