Sunday, May 14, 2006

பிரபாகரன் பெயர் மாற்றம்!



வசந்தன் தேனியில் கொத்தி ஒரு பதிவு ஒன்று போட்டிருக்கிறார்.
என்னடா என்று பார்த்தால் அது ஒரு முசுப்பாத்திக் கட்டுரை.
பிரபாகரன் பெயரை மாற்றினால் அல்லது பிரபாகரன் என எழுதும் முறையை மாற்றினால் சகல மங்களம் உண்டாகும் .இது தான் அந்த கட்டுரையின் கதைச்சுருக்கம்.


பிரபாகரன் பெயர்தானே இப்போது ஈழத்திலும் சரி புலத்திலும் சரி தலைவர் என மக்களால் அழைக்கப்படுகிறது.இதே மாற்றம்தானே..

இப்போது வசந்தன் கட்டுரையை படிக்க அதுவும் ஞாபகம் வந்தது.

ஏற்கனவே இது போல பல கூத்துக்கள் விண்ணானங்கள் நடாந்திருக்கின்றன.

தமிழர் Tamilஎனறு எழுதும்போது 13 எண் வருகிறது அது ஒரு பிரச்சனையான எண் அதனால்தான் தமிழர்களுக்கு என்றும் பிரச்சனை தமிழர்கள் அதனால் Thamilஎன எழுதவேண்டும் என சிரித்திரன் இதழில் ஒருமுறை சீரியஸாக வந்தது.

.

அதே போல் இன்னொரு விடயம் தமிழ்நெற்றை´சாட்சிக்கு வேறு அழைத்திருந்தார்கள்.தமிழ்நெற் மாமனிதர் தராகி ஒருமுறை இந்த எண்கணித விளையாட்டால் எப்படி ஈழத்தமிழர்கள் தங்கள் பிள்ளைகளின் பெயர்களை பழுதாக்குகிறார்கள்
என ஈழமுரசில் ஒரு கட்டுரை முன்னர் எழுதியிருந்தார்.யாராவது அந்த நகல் இருந்தால் பிரசுரியுங்கள்.

இன்னொன்று சிறீரங்க ராஜகோபுரத்தால்தான் இலங்கைக்கு இந்தளவு பிரச்சனை எனவும் ஒரு கதை உலாவுகிறது..

அதே போல் இது நான் கண்டு கேட்ட கதை
1983 ல் நல்லூர் தேர்முட்டியில் பொருத்தியிருந்த கலசம்
சரியத்தொடங்கியது அல்லது சரிவாக தெரிந்தது.
நாட்டுக்கு இது கேடு என்று அந்த நேரத்தில் ஒரு பெரியவர் எங்களுக்கு நல்லூர் திருவிழாவில் சொன்னார்.அந்த நேரம் நாம் அதை பெரிதாக எடுக்கவில்லை.பின்னர் நினைத்து பார்க்கமுடியாதளவிற்கு நாம் திரிந்த தெருவோரமெல்லாம் தமிழர் பிணம் அநாதரவாக கிடந்த கதைகள் நாயிழுத்த கதைகள் ..

இதே போல் ஒவ்வொரு களப்போருக்கும் சிங்களஇராணுவம் நாள் பார்த்து பிக்குகளை வைத்து ஓதி சண்டைக்கு கிளம்பி தோற்பதுவும் ஞாபகத்தில் வருகிறது.

ஏதோ சரி பிழை தெரியாது சட்டென்று தோன்றியதை மட்டும் பதிவாக்கியுள்ளேன்.

2 comments:

வசந்தன்(Vasanthan) said...

சிரித்திரன் கட்டுரை 'சீரியஸ்' எண்டு நான் நினைக்கவில்லை. (நான் வாசிக்கேல. ஆனா அப்பிடியொரு கட்டுரை எழுதப்பட்டிருக்காது எண்டு நினைக்கிறன்)

இப்படித்தான் புலிகளின் தாக்குதலுக்கும் எண்கணித சாத்திரமோ, நாள் நட்சத்திரமோ பொருத்திப் பார்ப்பதுண்டு.

erode soms said...

நம்பவேமுடியாததை நம்பவைத்து
பிழைக்கும் பல கூட்டம்
நிலமும் நீரும் போல்
முக்கால்பாகம் துன்பப்படும்
மனிதனுக்கு
ஏதாவதொரு "நம்மிக்கையே
வாழ்க்கை"