Saturday, July 21, 2007

புளிரத்னா விருது

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ மறைமுகமாக இரண்டையும் சொல்லத் திராணியின்றி செயற்படுபவர்களுக்கு அல்லது அடக்கி வாசிப்பவர்களுக்கு வருடம்தோறும் இந்த விருது வருகிற ஆவணி மாதத்திலிருந்து வழங்கப்படவிருக்கிறது.

இதனை பெற்றுக்கொள்பவர் பலவித கருத்தாடல்களிலும் ஈழப்பிரச்சனை சம்பந்தமான வாதங்களை அவதானித்தும் வாசித்தும் வருபவராக இருந்திருக்கவேண்டும்.ஆனால் எந்த காரணம் கொண்டும் தனது ஆதரவு
கருத்தையோ அல்லது எதிர் கருத்தையோ தெரிவித்திருக்ககூடாது.

ஈராக் பாலஸ்தீனம் கொசோவா மற்றும் அன்டார்ட்டிக்கா போன்ற நாட்டு அரசியலில் அதிக ஆர்வம் கொண்டுள்ளவராகவும் அந்த நாட்டு விவாதங்களில் துணிந்து தனது கருத்தைசெப்புபவராகவுமிருந்திருக்கவேண்டும்.

ஈழப்பிரச்சனைக்கு எதிராக கதைப்போருடன் எதிராகவும் ஆதரவாக கதைப்போருடன் ஆதரவாகவும் கதைக்கும் செப்படி வித்தை தெரிந்திருத்தல்
விசேட தகுதியாக கொள்ளப்படும்.

இவர்கள் பேசும்போது அகதி என்ற சொல்லோ விடுதலைபு்புலிகள் என்ற சொல்லோ ராஜீவ் காந்தி என்ற சொல்லோ அல்லது ஆனையிறவு என்றோ
ஒரு காலமும் உச்சரித்திருக்கலாகாது.


இதுவே இந்த வருடத்திற்கான புளிரத்தினா விருதுக்கான நிபந்தனைகள்.வாற வருடம் யுத்த செப்படம்பர் 11 பெப்ரவரி 30 போன்ற அரசியல் காலச்சூழ்நிலையை கருத்திலெடுத்து நிபந்தனைகள் புதுப்பிக்கப்படும்.


உங்களுக்கு இந்த தகுதிகள் இருக்கும் பட்சத்தில் வழமைபோல் பின்னூட்டத்தில் கருத்திடாமல் இரகசியமாக மெயில் இடவும்.

இந்த விருது வழங்கும் வைபவம் மற்றும் மெடல் இரகசியமாகவே வழங்கப்படும் என்பதால்
ஒருவரும் இதை கண்டிக்கமாட்டார்கள் என்பது இதன் அனுகூலங்களில் ஒன்று.


புளிரத்தினா விழா கொமிட்டி
குழம்பு

6 comments:

Anonymous said...

விடுதலைப்புலிகள் ஆதரவு - எதிர்ப்பு என்பதை விட்டுப்பார்த்தால் இந்த விருதுக்கு நான் பரிந்துரைக்கும் ஒருவர் பேராசிரியர் தருமி அவர்கள்.
மாலனின் பதிவிலும் பெயரிலியின் பதிவிலும் அவரிட்ட பின்னூட்டங்களைக் கருத்திற்கொண்டு இந்தப் பரிந்துரை.

மிதக்கும்வெளி said...

nakkal?

david santos said...

I come to desire good luck to the new first-I give of India. Congratulations

-/பெயரிலி. said...

/மாலனின் பதிவிலும் பெயரிலியின் பதிவிலும் அவரிட்ட பின்னூட்டங்களைக் கருத்திற்கொண்டு இந்தப் பரிந்துரை./

என் பதிவிலே தருமி பின்னூட்டவில்லை. மாலனின் பதிவிலிட்டதையே சுட்டியிருந்தேன். செல்வநாயகி பதிவிலே அவர் இட்டதைச் சொல்கிறீர்களா?

-/பெயரிலி. said...

/இந்த விருது வழங்கும் வைபவம் மற்றும் மெடல் இரகசியமாகவே வழங்கப்படும் என்பதால்
ஒருவரும் இதை கண்டிக்கமாட்டார்கள் என்பது இதன் அனுகூலங்களில் ஒன்று./

கண்டுக்கமாட்டார்கள்?? ;-)

theevu said...

//மிதக்கும்வெளி

nakkal? //


நக்கலோ நளினமோ என்றல்ல.சில சமயங்களில் வரும் கோபத்தை
இப்படித்தான் தீர்த்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.:(

வரவுக்கு நன்றி சுகுணா மற்றும் அநானி அவர்களே