மாபெரும் கராத்தெ ரோணமென்ற்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.குறிப்பு சொல் ஒண்டிக்கு ஒண்டி என விண்ணப்பபாரத்தில் குறிப்பிடவேண்டும்.
சோட்டாகான் அய்கிடோ கியோகுசின்(கவனிக்க கொரியன் ஸ்டைல்) கோயுரியு போன்றவற்றை பற்றி அறிந்திருந்தாலும் இந்தப் போட்டிகளில் ஏதாவது ஒன்றில் பங்குபற்றிய முன்னனுபவம் இருந்தால் நல்லது.தனியே கராத்தே மாஸ்டருடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் அனுப்பினால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
வெறும் காட்டா மட்டும் தெரிந்துகொண்டு குமிட்டிக்கு ஆசைப்படக்கூடாது.
மஞ்சள் பட்டி வாங்கியவுடனேயே கறுப்புபட்டி வாங்கியவராக ஆரம்பத்திலேயே தன்னை நினைத்து சந்தோசப்பட்டவராக இருத்தல் கூடாது.
தமி்ழ் நாட்டு வீர விளையாட்டுகளான சோடாபுட்டிஎறிதல் பின்னங்கால் பிடரியில்பட ஒடுதல் அழுகுணி அளாப்பி ஆட்டம் போட்டுக்கொடுத்தல் போன்ற மேலதிக தகுதிகள் கவனத்தில் எடுக்கப்படமாட்டாது
காட்டா போடும்போதோ குமிட்டியின்போதோ ஓசை போட்டு எதிராளியை
பயமுறுத்தக்கூடாது
ஓடு உடைப்பது கல் உடைப்பது பொட் உடைப்பது போன்ற சாகச செயலுக்கு
அனுமதியில்லை.
பார்வையாளராக வரும் கும்மி இரசிகர்கள் தமக்கு வசதியான ஏதாவது ஒரு பட்டி அணிந்திருத்தல் வேண்டும்.
போட்டியில் கலந்துகொள்வோரின் நேர்முகத்தேரிவு சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறைவளாகத்தில் ஆகஸ்ட் 5 நடைபெறும்.
7 comments:
pot already odanchiduchi makkaa...
;)
என்னிடம் கழுத்துப்பட்டி உள்ளது.கலந்துகொள்ளலாமா?
ரோணமென்ற்!!
அப்படீன்னா என்ன?
என்கிட்ட கருப்பு, பிரெவுன் ரெண்டு பெல்ட் உள்ளது. அது இல்லாமல் பேண்ட் என் இடுப்பில் நிற்காது,
நான் சிறுவது முதல் பிளாக் பெல்ட் வைத்து இருக்கிறேன்...நானும் போட்டியில் கலந்துக்கலாமா?
ஆமா இங்கன என்னா போட்டிய பற்றி பேசிக்கிட்டு இருக்கீங்க??
எங்க நாய்க்கு பட்டி கட்டியிருக்கோங்க. அதுவும் கலந்துக்கலாமா சார்?
//Pot"tea" kadai
pot already odanchiduchi makkaa//
:)
அஞ்சாநெஞ்சன்
//என்னிடம் கழுத்துப்பட்டி உள்ளது.கலந்துகொள்ளலாமா? //
எதற்கும் ஒரு ஓரமா நில்லுங்க.அழைப்பு வரும்.
//Anonymous
ரோணமென்ற்!!
அப்படீன்னா என்ன?//
ஆரம்பிச்சிட்டீங்களா சரி உங்க தமிழில் தோணமென்ற் :)
குசும்பன்
//அது இல்லாமல் பேண்ட் என் இடுப்பில் நிற்காது,
நான் சிறுவது முதல் பிளாக் பெல்ட் வைத்து இருக்கிறேன்..//
இந்த ஒரு தகுதிக்காகவே உங்களை சிறப்பு விருந்தினராக அழைக்க முடிவு செய்துள்ளோம்.
//Anonymous
எங்க நாய்க்கு பட்டி கட்டியிருக்கோங்க. அதுவும் கலந்துக்கலாமா சார்? //
இது மிகவும் கலந்தாலோசிக்கவேண்டிய ஒரு விடயம்
எதற்கும் கொரிய நண்பர் ஆலோசனையை வேண்டி நிற்கிறேன்.
Post a Comment