Monday, September 17, 2007

தமிழ்பித்தா! ..பெருமானே எனக்கருள்வாய்

இந்த இடத்தில் எனது கவர்ச்சிப் படமொன்று.
திருவாசகம் பற்றிய பதிவு போட்டாலும் எனது படமொன்றை போட்டு பதிவு எழுதுவதே இப்பொழுது
நாகரீகம்..

வேறு யாருக்கும் படம் தேவையானாலும் மின்னஞ்சல் இடுக..படம் அனுப்பி வைக்கிறேன்.போட்டு சூடான இடுகை இடுக.

பி.கு .இந்த படம் உங்களது இணைய காட்டியில் தெரியவில்லையாயின் அது
எனது தவறல்ல.உங்கள் இணைய வழங்குனருடன் முறைக்கவும்.


இனி விடயத்திற்கு வருகிறேன்.

இந்த கோளாறு பித்தனை தமிழ்மணம் தூக்குமா தூக்காதா என ஞானசம்பந்தனிலிருந்து லியோனிவரைக்கும் பட்டிமன்றம் நடாத்திகொண்டிருக்கையில் தூக்காது எனத்தான் நானும் நினைத்துக்கொண்டிருந்தேன்

ஏனெனில்

இந்த அப்பாவி வலிந்து எந்த பிடிகொடுக்கும் பதிவுகளையும் எழுதவில்லை.

இப்படியிருக்குமோ அப்படியிருக்குமோ அல்லது "ஒரு முறையாவது சகீராவுடன்" போன்ற லக்கிலுக்கின் பதிவுபோல ஆபாசமில்லாமல் இருக்குமோ என பல பதிவர்கள் சந்தேகத்துடன் பார்ப்பதுபோல இருந்ததே தவிர இதுதான் இது என கூறமுடியாமலிருந்தது.

இதனால்தான் தமிழ்மணம் இந்தப் பதிவை தூக்குவது சிரமமாக இருக்கும் என நினைத்தேன்.

ஏனெனில் ஒரு பதிவு தரமில்லாவிடின் அது பதிவர் விடயம்.

ஆனால் அதை தூக்குவதற்கு தமிழ்மணத்திற்கு உரிமை இருந்தாலும் வலைப்பதிவு என்ற இலக்கணத்திற்கு அது முரணானதாக இருந்திருக்கும்.

ஆனாலும் விதியாகப்பட்டது வலியது. அது பித்தனுக்கு வேறு ரூபத்தில் வந்தது.

கெளரவம் படத்தில் சுந்தராஜன் எப்போதோ செய்த தவறுக்கு பின்னர் தவறு
செய்யாதபோது தண்டிக்கப்படுவதுபோல இந்த பித்தன் தனது பின்னூட்டப்பெட்டியை அகலத்திறந்துவிட்டு மாட்டிக்கொண்டார்.

காலை மதியம் முழுக்க இந்தப்புண்ணியவான் பக்கத்தில்தான் ஆணி புடுங்குதலையும் விட்டு பார்த்துக்கொண்டிருந்தேன்.

பின்னூட்டமிடும் பெரும் கைகளை பார்க்கும்போதுதான் நாட்டில் பித்தனுக்கு
பித்தர்கள் நிறையவே தமிழ்மணத்தில் இருப்பது தெரிந்தது.

செந்தமிழ் நாத்தமிழ் எல்லாமே ஜெகஜோதியாக பித்தர் மட்டுறுத்தலின்றி
காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

அப்போதே நினைத்துக்கொண்டேன்.

பித்தருக்கும் தமிழ்மணத்திற்கும் ஆப்பு ரெடியாகிக்காண்டிருக்கிறது என..


பித்தருக்கு ஆப்பு ஒகே.

ஆனால் தமிழ் மணத்திற்கு ஆப்பு ???

பித்தர் தமிழ்மணம் தூக்கியபின் "போய்வருகிறேன்" என ஒரு பதிவு போட்டிருக்கிறார்.

போகிறேன் எனப் போடவில்லை.போய் வருகிறேன் எனப்போட்டுள்ளார்.

எனவே வருவார்..இந்தப் பதிவு நான் எழுதிக்காண்டிருக்கும்போது வேறு பதிவில் வந்துள்ளார்.

எனவே இவரை கழுவுவது கஸ்டம்.


பி.கு வடமராட்சி கிருமியள் லேசிலை அழியாது.வல்லையிலை சைக்கிள் வலிச்சதுகள் லேசிலை போறன் எண்டு சொல்லாதுகள்.


இனி தமிழ் மணத்திற்கு


நீங்கள் நினைச்சால் சிகரட்டை பழகு எண்டுவியள் .பிறகு சிகரட் கூடாது விடு எண்டுவியள்.

உடனை விட்டுவிடணுமா?

சுடு பதிவை

ஒரு முன்னறிவித்தலுமில்லாது தூக்கி அங்காலை கடாசியிருக்கிறியள்.

இனி சுடு இடுகை பார்ப்பதென்றால் கோயம்பேடு போய் பஸ் பிடித்துதான் போய் பார்க்கவேண்டும்.

கண்ணுக்கு முன்னால் உள்ளபொருட்களையே தேடித்தான் நாம் எடுப்பவர்கள். சும்மா ஓசை செல்லா ஒரு க்ளிக் தூரமென்றால் சரியா?:)

எனவே பழையபடி சுடு இடுகையை முன்னுக்கு கொண்டுவரவேண்டும்.

செல்லாவை தவிர வேறு ஒருவரும் இதுபற்றி எழுதவில்லை.எதிர்ப்பை காட்டவில்லை.

ஒரு சர்வே போடலாமென்றால் அந்தாள் வேறு குழப்பிப்போட்டு நிக்குது.பேசாமல் இன்னொருவனுக்கு மூக்கில் இடிக்கிறது என்று சொன்னபோது அந்தாள் பதிவை தூக்கி தள்ளி நிண்டிருக்கலாம்தானே..என்ன செய்வது

எல்லாம் அடம் பிடிக்கும் குழந்தைகளாக இருக்கிறது

கள்ளா வா புலியை குத்து


லேபிள்:- பெரியார், சர்வே, பொட்டீகடை. சகீலா, துப்பறியும் சாம்பு,மாணிக்கவிநாயகர்

15 comments:

வவ்வால் said...

தீவு,,
மாணிக்க விநாயகர் போட்ட பதிவுக்கு சுட்டி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்! :-))

Anonymous said...

//ஒரு சர்வே போடலாமென்றால் அந்தாள் வேறு குழப்பிப்போட்டு நிக்குது//


இது நல்லாருக்கு:)

theevu said...

//வவ்வால்
தீவு,,
மாணிக்க விநாயகர் போட்ட பதிவுக்கு சுட்டி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்! :-))//


வவ்வால் வந்தமாம் படிச்சமாம் பின்னூட்டினமாம் என்று இருக்கவேணும்.கேள்வியெல்லாம் கேட்ககூடாது.:)

புல்லா வா பிழாவிலை வார் said...

உந்தாள் பித்தன், பேயா எண்ட பின்னூட்டங்களை விட்டாலும் பறவாயில்லை. பறையிற மாதிரியெல்லாம் சாதிவெறியற்றை பின்னூட்டமெல்லாம் வெளிச்சமா விட்டிருக்கிறார். அதுதான் தாங்காமத் தூக்கிப்போட்டாங்கள். முன்னமே இரண்டைத் தூக்கியிருக்கினம் போல கிடக்குது. உது மூண்டாவது. மழைக்கு நனையாமலிருக்க வீட்டுக்குக் கூரையில்லாட்டிலும் வெளிக்கட்டாங்காலி பாலாமாடுகள் வந்து இஷ்டப்படி புல்லு மேஞ்சு சாணம் போட்டுட்டுப் போகாமலிருக்கவேணும் எண்டாச்சும் உந்தப் பித்தனுக்குத் தெரிஞ்சிருக்கவேணும் கண்டியளோ? பொடி சும்மா இருட்டு வெளியில, காத்து சுகத்துக்கு ஸிப்பை இழுத்துவிட்டு மூத்திரம் அடிச்சதுமாதிரி பதிவும் பின்னூட்டமும் விட்டுக்கொண்டிருந்தால் எப்பிடிப் பாருங்கோ?

கல்லா வந்தேன் புளியைப் பிழிந்தேன்.

கள்ளா வந்து குத்தினவற்றை விலாசத்தைப் பாருங்கோ. அடி சக்கையெண்டானாம் அம்மன் கோயில் புக்கை எண்டானாம்.

Karuppu's identity revealed

theevu said...

//Anonymous
//ஒரு சர்வே போடலாமென்றால் அந்தாள் வேறு குழப்பிப்போட்டு நிக்குது//


இது நல்லாருக்கு:)//

பெயரைப்போட்டு பின்னூட்டமிட்டால் உங்கள் பதிவிற்கும் நான் பின்னூட்ட உதவியாகவிருக்கும்.

எனினும் பின்னூட்டத்திற்கு நன்றி.

theevu said...

//புல்லா வா பிழாவிலை வார்//

நீங்க மட்டும் தமிழ்மணத்திலை பதிவு எழுதினால் தினசரி உங்கள் பதிவுதான் சுடு பதிவு:)


//கள்ளா வந்து குத்தினவற்றை விலாசத்தைப் பாருங்கோ. அடி சக்கையெண்டானாம் அம்மன் கோயில் புக்கை எண்டானாம்.

Karuppu's identity revealed //

:))

Anonymous said...

என்னது பொத்தானை நிப்பாட்டிப் போட்டாங்களோ?
உது அநியாயம்.
மாரித்தவளை கத்திறது பெரிய கரைச்சலாத்தான் இருக்கும். ஆனா அந்தக்கத்தல் நிண்டபிறகு வாற அமைதிகூட குழப்பமாத்தான் இருக்கும். பொத்தான் கத்தாதா எண்டு சில நேரங்களில ஏக்கம்கூட வரும்.

//பி.கு வடமராட்சி கிருமியள் லேசிலை அழியாது.வல்லையிலை சைக்கிள் வலிச்சதுகள் லேசிலை போறன் எண்டு சொல்லாதுகள்.//

இது அந்தமாதிரி இருக்கு...

asha parekhchander said...

இருந்து பாருங்க தீவுஜி. 2009 ல பரண்ல சூச்சூன்னு தொரத்தினாலும் விடாம பித்தன் செக்கண்ட் வால்யூம்க்கு கொலைப்பான். இது உருப்படாது தீவுஜி

வெற்றி said...

தீவு,
என்ன நடக்குது இஞ்சை?

தமிழ்மணத்திற்கு நீங்கள் எழுதிய வரிகளும்,புல்லா வா பிழாவிலை வார், மற்றும் கடைசி அனானி ஆகியோரின் மின்னூட்டங்களைப் படிச்சு வயிறு குலுங்கச் சிரிச்சேன்.

கன காலத்துக்குப் பிறகு இப்பிடி சுத்த யாழ்ப்பாணத் தமிழிலை படிக்க/கேட்கக் கிடைச்சுது. உண்மையில் பல சொல்லுகள் மறந்தும் போச்சு. இப்ப இதுகளைப் படிக்கத்தான் ஞாபகம் வருகுது.

தயவு செய்து யாராவது இப்பிடி நல்ல சுத்த யாழ்ப்பாணத் தமிழிலை நகைச்சுவைப் பதிவுகள் எழுதினால் அந்த மாதிரி இருக்கும்.

கானா பிரபா said...

திருச்சிற்றம்பலம் சொல்லி விட்டு ஆளை ஆள் தங்கட பாட்டில இனிப் போக வேண்டியது தான்.

theevu said...

//Anonymous
என்னது பொத்தானை நிப்பாட்டிப் போட்டாங்களோ?
உது அநியாயம்.
மாரித்தவளை கத்திறது பெரிய கரைச்சலாத்தான் இருக்கும். ஆனா அந்தக்கத்தல் நிண்டபிறகு வாற அமைதிகூட குழப்பமாத்தான் இருக்கும். பொத்தான் கத்தாதா எண்டு சில நேரங்களில ஏக்கம்கூட வரும்.//

உண்மைதான் மாரித்தவளை சில்வண்டு இந்த இரைச்சல் இல்லாத அமைதியும் சிலவேளை இந்த புலம்பெயர்நாடுகளில் அலுப்பைத்தான் கொடுக்கின்றன.

ஆனால் உங்கள் ஒப்புவமை பிழை.மாரித்தவளை வேறு.நுளம்பின் ரீங்காரம் வேறு:)

theevu said...

//asha parekhchander
இருந்து பாருங்க தீவுஜி. 2009 ல பரண்ல சூச்சூன்னு தொரத்தினாலும் விடாம பித்தன் செக்கண்ட் வால்யூம்க்கு கொலைப்பான். இது உருப்படாது தீவுஜி//

வாங்க ஆஷா.
தீவுப்பக்கம் மறக்காமல் வந்தமைக்கு நன்றி

அது சரி பரணிலை கிடந்து தேள் கடிச்சாலும் விடாது பதிவு போடுவாங்கள்.பரண் விடயமும் தமிழ்மணகாதில் போடவேண்டும்.


//வெற்றி

தீவு,
என்ன நடக்குது இஞ்சை?//

நடக்கிறது எல்லாம் நடக்குதில்லை.நடக்காதது எல்லாம் நடக்குதுகள்.அதுதான் பிரச்சனை.

வரவுக்கு நன்றி வெற்றி.

சிலோன் பிரச்சனை எப்பவாம் முடியுது?:)

//கானா பிரபா

திருச்சிற்றம்பலம் சொல்லி விட்டு ஆளை ஆள் தங்கட பாட்டில இனிப் போக வேண்டியது தான்//

நீங்க வேறை திருச்சிற்றம்பலம் சொல்லி முடிக்க திரும்ப வந்து அரகரமகாதேவா சொல்லேல்லை எண்டு வருவாங்கள்.
நமப்பார்வதிபதியே.

theevu said...

பின்னூட்டப்பெட்டியில் வேட்டியை காணவில்லை அங்கவஸ்திரத்தை காணவில்லை எனப் போடப்படும் பின்னூட்டங்களை நான் மட்டுறுத்தியுள்ளேன்.

சம்பந்தப்பட்டவர்கள் பொலீஸில் கம்ப்ளெயின்ற் கொடுத்து தொலைத்தை கண்டெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

Pot"tea" kadai said...

//பெரியார், சர்வே, பொட்டீகடை. சகீலா, துப்பறியும் சாம்பு,மாணிக்கவிநாயகர்//

இன்னா கத?

theevu said...

////பெரியார், சர்வே, பொட்டீகடை. சகீலா, துப்பறியும் சாம்பு,மாணிக்கவிநாயகர்//

இன்னா கத?//

கத ஒண்ணுமில்லைங்க..எல்லாம் சும்மா ஒரு கவர்ச்சிக்காக.பெரியார் அப்டீன்னு எழுத ஆரம்பிச்சனா அப்படீயே உங்க பேரும் வந்துடுச்சு.:)