Thursday, September 06, 2007

தமிழச்சி புகைப்படங்கள் ஒரு பார்வை

எல்லோரும் போனாப்போல நானும் போனேன் சாமிமலை என்பது போல் இந்தப் பதிவை போடவேண்டிய கட்டாயுத்துக்குள்ளாகியள்ளேன்.பாரிஸ் மாணிக்கவிநாயகர் என்னை மன்னிக்கட்டும்.





















திராவிடத்தோழர்களுக்காக..அந்த நாள் ஞாபகம் imagesofceylon இணையத் தளத்திலிருநது ஒரு சில புகைப்படங்கள்.பல அரிய புகைப்படங்கள் இந்த தளத்தில் உள்ளது.சுடுவோர் சுட்டு பாதுகாக்கவும்.


























21 comments:

Anonymous said...

படம் வர லேட்டாகுதப்பா

Anonymous said...

ஏதோ திராவிடர்களின் அபீசியல் கொள் தமிழச்சி என்று நினைத்தேன். ஏமாற்றிவிட்டீர்களே

Anonymous said...

பழய படமெண்டால் அடியில இருந்து கிண்டி எடுக்க நேரம் ஆகுந்தானே

துளசி கோபால் said...

அட! உண்மைக்குமே அருமையான படங்கள். காதுலே பாம்படம் பார்த்தே எவ்வளோ நாளாச்சு..........

நன்றி தீவு.

Osai Chella said...

arumaiyaaa period portraits collection. nandri!

நாமக்கல் சிபி said...

:)

Good!

Anonymous said...

நான் வேற படங்களை எதிர்பார்த்து வந்தேன் .. ஹி..ஹி..

Anonymous said...

ithu superu

செல்வநாயகி said...

அருமையான படங்கள்.

theevu said...

பின்னூட்ட ஊக்குவிப்பாளர்களுக்கு நன்றி.

/துளசி கோபால்
காதுலே பாம்படம் பார்த்தே எவ்வளோ நாளாச்சு...../

ஓ அதுக்குப்பேர் பாம்படமா? எங்களூரில் பழைய காலத்து இந்தியப்பெண்கள் அணிவதைப்பார்த்திருக்கிறேன்.காது கிழிய கிழிய போட்டிருப்பார்கள்.ஆச்சரியப்படுவதுண்டு.
கழட்டினால் சாமிக்குற்றம் என்று ஏதாவது ஐதீகம் இருக்கிறதோ?

அரை பிளேடு said...

பாம்படம், புல்லாக்கு, காசுமாலை...
ஃபேஷன் ஒன்ஸ் அப்பான் ய டைம். :)

மாசிலா said...

படங்கள் நன்றாக இருக்கின்றன.

அந்த காலத்தில் பெண்கள் வெறி பிடித்த வெள்ளைக்கார துரை நாய்கள் தங்கள் பொழுதுபோக்கிற்காக, ஆதிவாசி வாழ்க்கை வாழ்ந்து வந்த மக்களை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து அவர்கள் உடைகளை உடுத்தி அலங்காரம் செய்து தங்களது வரலாற்று செய்தி தொகுப்பிற்கு எடுத்த படங்களை நாம் பார்த்து கண்குளிர ரசித்து சிரித்து கும்மாளம் அடிப்போமாக... இன்பத்தில் ஊறி போதை தலைக்கேறும்வரை ஆடிக் களிப்போமாக...

பாரீஸ் தமிழச்சியை வம்புக்கு இழுத்திருப்பது ஏனோ?

//பாரிஸ் மாணிக்கவிநாயகர் என்னை மன்னிக்கட்டும்.//
அய்யா! அது வெறுமனே ஒரு ஜடப்பொருளய்யா. ஸ்பைடர் மேன், ஸ்டார் வார்ஸ் போல கற்பனை கதையின் அடிப்படையில் உருவான பொம்மை. அவ்வளவுதான்.

வேனும்னா எங்கிட்ட மன்னிப்பு கேளுங்க. நானாவது திருப்பி பதில் சொல்வேன்.


:-( / ;-D


ரெண்டு ஸ்மைலிஸ் போட்டிருக்கேன். அதுல எது நல்லதுன்னு படுதோ, அதுவே எனது நோக்கமும்.

சுகுணாதிவாகர் said...

பாம்படம் பற்றிப் பேச்சு வந்ததால் இந்த தகவல். சமண முனிவர்களின் சிலைகள் அல்லது ஓவியங்களைப் பார்த்தால் நீள்காதுகளைக் காணமுடியும். இந்தப் பாம்படம் அணியும் வழக்கமும் சமணத்தின் நீட்சி அல்லது எச்சம் என்று கொள்ளலாம்.

லக்ஷ்மி said...

படங்கள் அருமை. பாம்படத்தை கழட்டினா ஒன்னும் தெய்வ குத்தமில்லைதான். ஆனால் பாம்படம் போடுவதற்காய் காதை வடித்துவிட்டால் பின் அதில் வேறு எதுவும் சாதாரண தோடு, கம்மல் வகையறாக்களைப் போட முடியாது. ஆனால் சிலர் திடீர் பணக்காரர்கள் ஆனால் அவர்கள் வீட்டுப் பெண்மணிகள் காதை அறுத்து ஒட்டி அதில் வைரத்தோடு போட்டுக்கொள்வதுமுண்டு. இதையே புதுப்பணக்காரர்களை எள்ளலாய் குறிப்பிடும் அடையாளமாய் பாட்டிமார்கள் உபயோகிப்பார்கள் - அவளுக்கென்னம்மா, அவ காது அறுத்து ஒட்டினவ என்று....

Anonymous said...

antha kaalathil vazhntha manitharkal..touching aaka irunthathu..nammai pol orukalathil uyirudan...vaazhkkaiyai paarunkal ellam kantha kalamai verum image..
aanal manithan yaarum ithai ninaippathillai.. ivan mattum nilaithiruppavanpola.. ivarkalum appadithane irunthirupparkal..
photos oviyam pola...antha maadu, vaazhaimaram..manitharkal... vandi..everything once existed..
konjam ninaivai votinal athan thaakathai unaramudiyum...thanks for photos -realy excellent.

துளசி கோபால் said...

பாம்படம் பார்க்கத்தான் பெருசா இருக்கே தவிர அவ்வளவா கனம் இல்லையாம்.
உள்ளெ வெற்றிடம்தானாம்.

நாங்க மதுரை ஜில்லாவில் இருந்தப்ப, திருடர்கள் (சிலசமயம் கணவர்கள் கூட சண்டைபோடும்போது)
வெயில்காலத்துலே ராத்திரி வெளியே திண்ணையில் தூங்கும் பெண்களின் காதுகளை அறுத்துக்கிட்டுத்
தங்கத்தைத் திருடிக்கிட்டு ஓடிருவாங்களாம். மறுநாள் அறுந்து தொங்கும் காதோடு ஆஸ்பத்திரிக்கு
ஓடி வருவாங்க. அம்மா மருத்துவர் என்றதால் இது போல வரும் காதுகளை முழுசுமாக வெட்டித்
தைப்பதுண்டு.

லக்ஷ்மி சொல்றதுபோல இப்பப் புதுப்பணக்காரர்கள் வைரத்தோடு
போட்டுக்க வெட்டித் தைச்சுக்கறாங்க..

Sundar Padmanaban said...

எத்தனையோ கதைகள் சொல்லும் அருமையான படங்கள்.

ஒவ்வொருவரின் முகபாவங்களை விவரிக்க வார்த்தைகளில்லை.

//ஆதிவாசி வாழ்க்கை வாழ்ந்து வந்த மக்களை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து அவர்கள் *உடைகளை உடுத்தி* அலங்காரம் செய்து //

மாசிலா. 'உடைகளை *உடுத்த விடாமல்* ஆதிக்க சாதி வெறி பிடித்தவர்கள் பெண்களைக் கொடுமைப்படுத்தினார்கள் அந்தக் காலத்தில்' - என்று சில பதிவுகளில் படித்த நினைவு. நீங்கள் சொல்லும் 'அந்தக் காலமும்' அப்பதிவர்கள் குறிப்பிட்ட 'அந்தக் காலமும்' வெவ்வேறு காலகட்டங்களா?

நன்றி.

Geetha Sambasivam said...

அருமையான புகைப்படங்கள். தகவலுக்கும் நன்றி.

திங்கள் சத்யா said...

வெள்ளைக்கார துரையைப் பற்றி என்னவேணா சொல்லுங்க மாசிலா. ஆனா போட்டோக்காரரை குறை சொல்லியோ, இழிவுபடுத்தியோ பேசாதீர்கள். நீங்கள் நினைப்பது மாதிரியான கோணத்திலோ அல்லது சூழ்நிலைகளிலோ இப்படங்கள் எடுக்கப்பட்டதாக நான் கருதவில்லை.

மாராப்பு இல்லாமல் வெற்று மார்புடன் பெண்களை நடமாடவிட்டு ரசித்துக் களித்த வெறிபிடித்த தமிழ்ச் சமூகத்தைவிட இப்புகைப்படத்தை எடுத்த வெள்ளைக்காரன் நிச்சயம் ஒரு நல்ல கலைஞனாகத் தான் இருக்க முடியும். சும்மா கண்ணை மூடிக்கொண்டு கமெண்ட் பண்ணாதீங்க. நீங்க முதல்ல வரலாற்றைப் படியுங்க'ன்னும் அறிவுரை சொல்லாதீங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல புகைப்படங்களை காணத்தந்ததற்கு நன்றி தீவு...

theevu said...

/OSAI Chella
arumaiyaaa period portraits collection. nandri! /

நன்றி செல்லா.ஒரு புகைப்படக்கலைஞரான நீங்கள் இந்தப் படங்களை இரசிப்பீர்கள் என ஏற்கனவே எதிர்பார்த்தேன்.


/நாமக்கல் சிபி/

வருகைக்கு நன்றி


//ஜொள்ளன்
நான் வேற படங்களை எதிர்பார்த்து வந்தேன் .. ஹி..ஹி..//

என்ன படம் எதிர்பார்த்தீர்கள்?:)


//மாசிலா

பாரீஸ் தமிழச்சியை வம்புக்கு இழுத்திருப்பது ஏனோ?//

அது யார் பாரிஸ் தமிழச்சி?



/சுகுணாதிவாகர், லக்ஷ்மி, துளசி கோபால்

பின்னூட்டமாயினும் கிடைக்கும் கொஞ்சநேரத்தில் நேரம் எடுத்து தெரிந்த தகவல்களை பின்னூட்டத்தில் தெரிவிப்பது நல்லதொரு முன்னுதாரணம்.நன்றி



//கீதா சாம்பசிவம் ,செல்வநாயகி,முத்துலெட்சுமி//

முதன்முறையாக தளத்திற்கு வந்துள்ளீர்கள். நன்றி


/வற்றாயிருப்பு சுந்தர் மரக்காணம் பாலா

உங்கள் கருத்துதான் எனது கருத்தும் .நானும் இதேபோல் தாழ் சாதிப்பெண்களை மாராப்பு போடவிடாது மேல் சமூகம் தடுத்ததாக கேள்விப்பட்டுள்ளேன்.

நான் பதிவில் குறிப்பிட்ட இணையத்தளத்தில் சில படங்கள் அதை நிருபிக்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்களின் அரைகுறை ஆடை படங்கள் அதை மெய்ப்பிக்கிறது.

வெள்ளைக்காரன் குற்றவாளியா அல்லது
நாமா என்பதை மாசிலா அந்த தளத்தில் பார்த்து முடிவு செய்யட்டும்.


அரை பிளேடு
பாம்படம், புல்லாக்கு, காசுமாலை...
ஃபேஷன் ஒன்ஸ் அப்பான் ய டைம். :)

உண்மைதான் அவர்கள் அணிந்திருக்கும் வளையலை பார்த்தாலே கண்ணகி மதுரைக்கு கொண்டுவந்த சிலம்பு சைஸில் இருக்கிறது.நல்லவேளை
இப்போது அந்த நாகரீகம் இல்லாதமையினால் ஆண்கள் தப்பித்தார்கள்:)


அநானியாக வந்து ஆசிர்வதித்த உள்ளங்களுக்கு நன்றி