மாபெரும் கண்டனக்கூட்டம்-வீக்கென்ட் பதிவு
தீவு அவர்களின் பின்னூட்டத்தை தமிழ்ப்பித்தன் தூக்கியதை ஆதரித்து நாளை சனிக்கிழமை தமிழ்மண களரி அரங்கில் வலைப்பதிவர்களால் மாபெரும் கண்டனக்கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்படுகிறது.
பிரபல புரட்சிப்பேச்சாளரும் பல மாநாடுகள் கண்டவருமான புரட்சித்தலைவி(பாதுகாப்பு மற்றும் விழாக்குழுவினரின் பயம் காரணமாக பெயர் போடவில்லை) தனது மாநாட்டு அனுபவங்களை இந்தக்கூட்டத்தில் விளக்குவார்
மதியம் 2 மணிக்கு ஆரம்பமாகும் இந்தக்கூட்டம் உண்மைத்தமிழனின் சிற்றுரையுடன் வாழ்த்துதலடன் ஆரம்பிக்கும்
மதியம் 2 மணிக்கு ஆரம்பமாகி சிற்றுரை 6 மணிக்கு முடிந்தவுடன் நமது சிறப்பு மதம் கொள் சூடாமணி லக்கிலுக் அவர்கள் அர்த்தமுள்ள இந்துமதம் பற்றி உரையாற்றுவார்.
அவர் பேசும்பொழுது விடயத்திற்கு சம்பந்தமில்லாது மொக்கைப்பதிவு என்றால் என்ன என்று பார்வையாளர் அவரை கேட்டு அவரை ரீ போடும் அனுபவத்தை சொல்லவைக்கவேண்டாம் என்று முன்கூட்டியே அறிவித்துக்கொள்கிறோம்.
அவரைத் தொடர்ந்து கொரியாவிலிருந்து விசேட ரயிலில் வரும் எமது சிறப்புபேச்சாளர் செந்தழல் ரவி அவர்கள் "கொலவெறி
தணிந்ததேன் " என்ற தலைப்பில் அல்லது ஆயாவின் பாஸிஸம் என்ற தலைப்பில் உரைகொல்வார்.எனினும் (நாய்க்கடி,கொசுக்கடி ,கிருமிக்கடி மற்றும் இன்னோரென்ன கடிக்களிலிருந்து அவர் தப்பிவரும் பட்சத்திலேயே இவை சாத்தியமாகும்)
விழாவின் முடிவில் சிறப்பு கலைநிகழ்ச்சியாக "என் அண்ணன்" படத்தில் எம்ஜிஆர் அவர்கள் "ஜலக்கு ஜலக்கு சிங்காரி" என்ற பாடலுக்கு டப்பாங்குத்து ஆடி மகிழ்விக்க மூத்த பதிவர் டோண்டு அவர்கள் முன்வந்துள்ளார்.
கூட்ட நிறைவில் பதிவர்களின் தேசியகீதமாக ஒய்யாலே ரிப்பீட்டேய் என்ற பாடல் பாடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தின் இடையே அடிக்கடி எழும்பி கடற்கரைப்பக்கம் தம் அடிக்கசெல்பவர்களுக்காக விசேட பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.கில்லி இதனை மற்றவர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்.
இக்கண்டனக்கூட்டத்தை சிறப்பாக நடாத்த ஒரு சில பணிகள் பொறுப்பானவர்களிடம் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்து பத்திரிகையிலிருந்து வரும் நிருபரை வரவேற்று கவனிக்கும் பொறுப்பு பெயரிலியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஓசையமைப்பு சவுண்ட் மேடை விட்ஜர் அலங்கரிப்பு போன்றவை படுத்துக்கொண்டே வலைபதிந்து வெற்றிபெறும் ஓசை செல்லா கவனிப்பார்.
புகைப்படம் எடுத்து இந்த கண்டனக்கூட்டத்தை வரலாறுப்படுத்தும் முயற்சிக்கு உதவ பிரபல விருது பெற்ற புகைப்படபிடிப்பாளர் பொன்ஸ் அவர்களை விழா நிர்வாகத்தினர் தெரிவுசெய்துள்ளார்கள்.
வீடியோ யுரியூப் வேலைகள் சின்னக்குட்டியரும் தாக சாந்தியினை பெட்டிகடையாரும் கள நிலவரங்களை பாப்பராஸி பத்திரிகையாளர் கொழுவியும் கவனித்துக்கொள்வர்.
இந்தக்கூட்டம் சம்பந்மாக இதுவரை வெளிவராத பேட்டிகள் கொடுக்கப்படாத செவ்விகள் பதியப்படாத பதிவுகள் யாவற்றையும் தொகுத்து கூட்ட முடிவில் கொழுவி அவர்கள் தனது பதிவில் போடுவார்.
இணையப்பொறுக்கிகள் ஒருங்கமைப்பு குளவி
கூட்டம் முடிந்தபின்னும் மக்கள் கலைந்து செல்லாவிடின் தண்ணீர் மற்றும் புகை அடிக்கப்படும் என ஏமாறாதீர்கள்.
அதற்குப்பதிலாக இரண்டு விசேட பேச்சாளர்கள் தமிழில் உங்களுக்கு பின் நவீனத்துவம் பற்றியோ அல்லது புலிப்பாஸிஸம் பற்றியோ பேருரை உரையாற்றி கூட்டத்தை நிறைவு செய்வார்கள்.
பி.கு யாராவது தனது பெயரை போட்டதை ஆட்சேபிக்கும் பட்சத்தில் காலில் வீழ்ந்து கண்ணீர் மல்கி மன்னிப்பு கேட்பேன் என்பதை இத்தால் உறுதிப்படுத்துகிறேன்.ஓம் மாசிலா துணை
கழுத்துக்கு மேலே ஆணி வந்தால் சாண் என்ன முழம் என்ன
லேபிள்:- வக்கீல், தலீத் மா நாடு,கனிமொழி
23 comments:
போணி
//இந்து பத்திரிகையிலிருந்து வரும் நிருபரை வரவேற்று கவனிக்கும் பொறுப்பு பெயரிலியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.//
good choice ;)
மாநாடு ஆரம்பமாகும் வரை நான் பாட்டுப் போடலாமா?
//பிரபல புரட்சிப்பேச்சாளரும் பல மாநாடுகள் கண்டவருமான புரட்சித்தலைவி(பாதுகாப்பு மற்றும் விழாக்குழுவினரின் பயம் காரணமாக பெயர் போடவில்லை) தனது மாநாட்டு அனுபவங்களை இந்தக்கூட்டத்தில் விளக்குவார்//
இன்னயா அக்கிரமா இருக்குது? ஆம்பள பேரை போடுகிற அளவுக்கு தைரியம் இருக்கு. ஒரு பெண் பதிவர் பெரைப் போடறதுக்கு இவ்வளவு பயமா? காராத்தே ஆக்ட் குடுத்து ரொம்பவே உங்களை எல்லாம் பயமுறுத்தி இருக்கிறார். இதை வண்மையாக கண்டிக்கிறேன். அவரின் பெயரை நான் சொல்லப்போகிறேன்....
இருப்பா ரொம்ப டென்ஷனா பேசி களைச்சுப்புட்டேன். தண்ணீ குடிச்சிட்டு வந்து சொல்றேன்.
யோவ் வழக்கமா போடர லேபில் எங்க?அதயும் போடு
//கானா பிரபா
மாநாடு ஆரம்பமாகும் வரை நான் பாட்டுப் போடலாமா?//
pls contact osai sellaa
:)
மாநாட்டில் என்னைக் 'கம்முனாட்டி' என்று யாராவது திட்டினால் மாநாட்டை விட்டு வெளியே போறது மாதிரி சீன் போட்டுட்டு கொஞ்ச நேரம் கராத்தே மாஸ்டரிடம் கடலை போட்டபின் திரும்ப சேர்ந்து கொள்வேன் எனத் தெரிவித்துக் கொல்லுகிறேன்.
//கானா பிரபா said...
//இந்து பத்திரிகையிலிருந்து வரும் நிருபரை வரவேற்று கவனிக்கும் பொறுப்பு பெயரிலியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.//
good choice ;)
மாநாடு ஆரம்பமாகும் வரை நான் பாட்டுப் போடலாமா?//
சாரே, நீதான் எப்ப பாரு பாட்டுப் போட்டுகிட்டே இருக்கியப்பா. அப்புறம் என்னா கேள்வி :)
//விழாவின் முடிவில் சிறப்பு கலைநிகழ்ச்சியாக "என் அண்ணன்" படத்தில் எம்ஜிஆர் அவர்கள் "ஜலக்கு ஜலக்கு சிங்காரி" என்ற பாடலுக்கு டப்பாங்குத்து ஆடி மகிழ்விக்க மூத்த பதிவர் டோண்டு அவர்கள் முன்வந்துள்ளார்.//
அப்பாடல் என் அண்ணனில் வந்த சமயம் எம்ஜிஆருக்கு எனது இப்போதைய வயது. ஆகவே என்னுடன் கூட டப்பாங்குத்து போட 23 வயதுக்கு மேற்படாத ஃபிகரை (ஜெயலலிதாவின் அப்போதைய வயது) ஏற்பாடு செய்வது உங்களது பொறுப்பு என்று டப்பாங்குத்து ஆடியபடி கூறி விடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
santhi engge saanthi enge...
//nonymous
இன்னயா அக்கிரமா இருக்குது? ஆம்பள பேரை போடுகிற அளவுக்கு தைரியம் இருக்கு. ஒரு பெண் பதிவர் பெரைப் போடறதுக்கு இவ்வளவு பயமா? அவரின் பெயரை நான் சொல்லப்போகிறேன்.... //
றேடியோ பொட்டி பிரபா பேரை சொல்லவா பாட்டு இருக்கா? நேயர்கள் விரும்பிகேட்கிறாங்கப்பூ
//சாரே, நீதான் எப்ப பாரு பாட்டுப் போட்டுகிட்டே இருக்கியப்பா. அப்புறம் என்னா கேள்வி :)//
ரோம் நகரமே பற்றியெரிகிறது.
பீடி குடித்தாராம் நீரோ மன்னன். :)))
//தோசை செல்லா
மாநாட்டில் என்னைக் 'கம்முனாட்டி' என்று யாராவது திட்டினால் மாநாட்டை விட்டு வெளியே போறது மாதிரி சீன் போட்டுட்டு கொஞ்ச நேரம் கராத்தே மாஸ்டரிடம் கடலை போட்டபின் திரும்ப சேர்ந்து கொள்வேன் எனத் தெரிவித்துக் கொல்லுகிறேன்.//
ஒரு நூல் இடைவெளியில் தப்பித்த
பின்னூட்டம் :)
//dondu(#11168674346665545885)
ஆகவே என்னுடன் கூட டப்பாங்குத்து போட 23 வயதுக்கு மேற்படாத ஃபிகரை (ஜெயலலிதாவின் அப்போதைய வயது) ஏற்பாடு செய்வது உங்களது பொறுப்பு என்று டப்பாங்குத்து ஆடியபடி கூறி விடுகிறேன்.//
கூட்ட அமைப்பினர் தற்போது அசினுடன் பேச்சுவார்த்தை நடாத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
அது தவறும் பட்சத்தில் மாற்று ஏற்பாடாக பத்மப்பிரியா வர சம்மதித்துள்ளார் என்ற தகவலை
சாமி மேல் பாரத்தை போட்டு உங்களுக்கு
அறியத்தருகிறோம்.:)
வரவுக்கு நன்றி
//பீடி குடித்தாராம் நீரோ மன்னன்.//
பீடி இல்ல அண்ணாத்தே பிடில் வாசிச்சாராம் ;)
ஒங்க வக்கீலோட இளவரசியும் வருவாங்களா?
//Pot"tea" kadai
santhi engge saanthi enge...//
வீக்கென்ட் கூட்டமின்னாலே தாகம் சாந்தின்னு ஒரே பரபரப்பாயிடுது.
இதனை கருத்தில் கொண்டு முன்கூட்டியே ஆவன செய்து வைத்துள்ளோம்.
தம்பி பிரபா
அண்ணண் பொட்டி கடைக்கு
ஒரு பாட்டு
அமைதிக்கு பெயர்தான் சாந்தி சாந்தி...சாந்தி
ஓம் சாந்தி:)
//Anonymous
ஒங்க வக்கீலோட இளவரசியும் வருவாங்களா?
//
அவங்க பாஸ்போர்ட்டை காணலியாம் நீங்க வேற
எங்கக்கா தளத்தை காக் பண்ணிட்டாங்களாம்.அதுக்கும் ஒரு கண்டனம் போடு தீவு சாரே
என்னை வைச்சு காமடி கீமடி பண்ணலையே என்று பார்த்தன் பண்ணீட்டாங்க
மாநாடு எல்லாம் முடிந்து, புளொக் காக் பண்ணிற நாடகம் நடக்குது. நீ இப்பதான் கண்டனக் கூட்டம் நடத்திக்கிட்டிருக்க. நீ வெரி ஸ்லோய்யா
தன்னைய எதிர்த்தவங்களுக்கே உதவும் தங்கத்தம்பி தமிழ்பித்தனுக்கு ஆதரவு தெரிவித்து, இக்கண்டனக் கூட்டத்தைக் கண்(ண)டித்து வெளியேறுகின்றேன். :)
தயவுசெய்து இக் கண்டனக்கூட்டத்தை ஒத்தி வைக்கவும்.மேலும் பல கண்டனங்கள் தெரிவிக்கவுள்ளது.
நான் ஒரு மூலையில நின்னு சேப்சைடுல இருந்து பாக்குறேனுங்க நான் இருக்கறது யார்கன்னுக்கும் தெறியாது தீவு
//
கூட்டம் முடிந்தபின்னும் மக்கள் கலைந்து செல்லாவிடின் தண்ணீர் மற்றும் புகை அடிக்கப்படும் என ஏமாறாதீர்கள்.அதற்குப்பதிலாக
இரண்டு விசேட பேச்சாளர்கள் தமிழில் உங்களுக்கு பின் நவீனத்துவம் பற்றியோ அல்லது புலிப்பாஸிஸம் பற்றியோ பேருரை உரையாற்றி கூட்டத்தை நிறைவு செய்வார்கள்//
யாருங்க அவங்க? தெரிந்தால் நாமும் ஆபத்துக்கு அழைப்போம்ல :)
Post a Comment