Thursday, March 13, 2008

அட விடுங்கப்பா கவித்தொல்லை தாங்க முடியலே

இவங்க தொல்லை தாங்க முடியாது தூக்கில தொங்கவும் பயமாயிருக்கு.அப்பவும் வந்து கவுத கவுஜ பாடிடுவாங்க..என்ன செய்வது?
முள்ள முள்ளாலதானே எடுக்கணும்.அதான் நானும்
பாடிடலாம் என முடிவு.கவி விளங்காதவர்களுக்கு உண்மைத்தமிழன் சிறுகக்கூறி புரியவைப்பார்.

முந்தியும் ஒரு கவிதை யாதும் ஊரே யாவரும் கேளிர் என எழுதினேன்.அது ஏற்கனவே யாரோ
எனக்கு முந்தி எழுதிப்போட்டார்களாம்.

அதனாலே

இனி புதுக்கவிதை அதாவது புதியகவிதை.

சட்டி சுட்டதடா கை விட்டதடா
கூந்தல் கறுப்பு குங்குமம் சிவப்பு


பி கு இனி யாராவது கவுத மழை பனி அப்டீன்னு ஆரம்பிச்சால் இது போன்று கவிதை
ஆறாய் கொட்டும் என எச்சரிக்கிறேன்.லேபிள்:-தீதும் நன்றும் பிறர் தர வாரா

14 comments:

கொழுவி said...

அண்ணை கவியெண்ட சொல்லுக்கு குரங்கு எண்டும் முந்தி ஸ்கொலர்சிப் க்ளாசில ஒத்த சொல் படிச்சனான். அது இப்பவும் அப்பிடியே இருக்குதுதானே

வவ்வால் said...

தீவு,

//இனி புதுக்கவிதை அதாவது புதியகவிதை.

சட்டி சுட்டதடா கை விட்டதடா
கூந்தல் கறுப்பு குங்குமம் சிவப்பு//

இன்னும் கவித முழுமை பெறவில்லை இதன்தொடர்ச்சியா...

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
குற்றம் புரிந்தவன்/ள் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது!
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்கடி !

இப்போ எப்படி இருக்கு ச்சும்மா அதிருதுள்ள! :-))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//கவி விளங்காதவர்களுக்கு உண்மைத்தமிழன் சிறுகக ்கூறி புரியவைப்பார்.//

தீவு நீர் எழுதியிருக்கிறதே ரெண்டு வரி.. அதை இன்னும் சுருக்கமா நான் எங்கிட்டு போய் சுருக்குறது..?

அதுலேயும் இந்தக் கவிதையை யாருக்காக எழுதியிருக்கிறீர்னு நினைச்சுண்டா எனக்கு நெஞ்சடைக்கிறது..

நான் எஸ்கேப்பாகுறேன் சாமி..

theevu said...

//கொழுவி said...

அண்ணை கவியெண்ட சொல்லுக்கு குரங்கு எண்டும் முந்தி ஸ்கொலர்சிப் க்ளாசில ஒத்த சொல் படிச்சனான். அது இப்பவும் அப்பிடியே இருக்குதுதானே//

வேலிக்கை போற ஓணானை எடுத்து மடிக்கை கட்டுறியள் கவனம்.


வவ்வால்
//யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்கடி !//

பாட்டு சூப்பறண்ணை.அதுவும் அந்த டீ கடை பாட்டு

அதிருது :)

theevu said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//யாருக்காக எழுதியிருக்கிறீர்னு நினைச்சுண்டா எனக்கு நெஞ்சடைக்கிறது.. //

அற்புதம் உண்மைதமிழன் அவர்களே..

எனது பாடலின் வரிகளை ஒரே வரியில் யாருக்காக என்று குறிப்பால் பாட்டால் சங்கேதமாக எழுதி உண்ர்த்தியுள்ளீர்கள்.எல்லாப் புகழும் உங்களுக்கே:)

லக்கிலுக் said...

தீவு
உம்மால
தீருது
எல்லாருக்கும்
தாவூ!!

குழவி said...

தீவு, சோதியில அய்கியமாறதை விட்டிட்டு, காய்வெட்டிப் போறீர்(உது அந்தக் காயில்லையப்பா..ச்சே வெளிப்படையாக் கதைக்க கூட முடியாமல் போச்சு) உது சரியில்லைக் கானும் :)

theevu said...

//லக்கிலுக் said...

தீவு
உம்மால
தீருது
எல்லாருக்கும்
தாவூ!!//

ஆஹா..ஆரம்பிச்சாச்சா:)

்லக்கி
கவித நல்லாருக்குன்னு சொன்னாலும் எழுத ஆரம்பிச்சுடுறாங்க..கவித சரியில்லேன்னாலும் திருத்தி எழுதுறேன்பாரு அப்டீன்னு ஆரம்பிச்சுடுறாங்க.

அதனாலே ஒண்ணுமே சொல்லல:)

குழவி//
சோதியில அய்கியமாறதை விட்டிட்டு, காய்வெட்டிப் போறீர்//

எவன் எவன் எப்போது 180 தில் திருப்புவான் என்று தெரியாதபடியால்
காய் வெட்டுகிறேன்.:) நலம் நலமறிய ஆவல்

ILA(a)இளா said...

தூக்குப் போட்டுக்கிட்டா சாவு,
மரத்துக்கு மரம் தாவு,
ஸ்கூலுக்கு விடுறாங்க லீவு,
பஸ்ஸ்டாண்டுல லவ்வு,
கேட்குதடா காவு,
சில்லுன்னு இருக்கு பீரு,
வெயிலுக்கு இதம் மோரு,
டிவி பார்த்தா போரு,

இவுங்க பிரச்சினையோ
படா பேஜாரு..
கிழியுதுடா நிஜாரு

ஏய் டண்டணக்கா..
டணக்குணக்கா...

கொழுவி said...

இளா
நீங்க சண்டையில அகப்பட்ட
அப்பாவிப்பொதுமகனாட்டம் இருக்கீங்க
மிஸ்பயர் ஆகீடும்
அப்பால போங்க

கொழுவி said...

அப்புறம் இளா
சொல்ல மறந்திட்டேன்..

கோபப்படாமல் அநாகரிமான வார்ததைகளை உபயோகிக்காமல் விவாதம் செய்தீர்கள் நன்றி

அதற்கு நன்றி :::)))))))))))))))))))

theevu said...

ILA(a)இளா

வாங்க

கானா பாடல் கலக்கிட்டீங்க .எங்க எங்களுக்கும் ஒரு விருது தாறது:)

ILA(a)இளா said...

//அப்பால போங்க//
அப்படி ஓரமா பெஞ்சு போடுங்கப்பா, சோடா கிடைக்குமா? வேடிக்கை பார்க்கிறேன்.

ILA(a)இளா said...

//எங்க எங்களுக்கும் ஒரு விருது தாறது:)//
விருது உங்களுக்கு இல்லாமலா? பாருங்க.

//கோபப்படாமல் அநாகரிமான வார்ததைகளை உபயோகிக்காமல் விவாதம் செய்தீர்கள் நன்றி//
@கொழுவி, நம்ம முறை அதுதாங்க. எதுக்கும் :) போட்டு வெச்சிக்கலாம். பிற்பாடு உதவலாம்.