என்னது நல்லதம்பியை அரெஸ்ட் பண்ணிட்டாங்களா?
பொதுவாக இந்தாள் லேசிலை மாட்டுப்படமாட்டார்.எவ்வாறு கைதானார்?யாரும் போட்டுகொடுத்துட்டாங்களோ?செய்தி கேட்டதில் இருந்து மனநிலை குழப்பமாக இருந்தது.யாராக இருக்கும்?செய்தி எவ்வாறு பொலிசிற்கு கசிந்தது?
இந்த சீரியல்கள் பொதுவாக நான் பார்ப்பதில்லை.ஆனால் ராதிகாவை பிடிக்கும் என்பதால் அண்ணாமலையில் ஆரம்பித்து இப்போது அரசிவரை வந்தாயிற்று.
ராதிகாவின் தொடர்களில் அழுகை சற்று குறைவாக இருக்கும்.சற்று விறுவிறுப்பாகவும் நகரும்.அண்ணாமலையும் அப்படித்தான் நகர்ந்தது.
மிக ஆர்வமாக இந்த அரசி தொடர் தினசரி இணையத்தில் பார்ததுக்கொண்டு வந்தேன்.அப்போதுதான் கலைக்கு தலையில் அடிபட்டு கலைக்கு விசர் பிடித்தது.கலைக்கு விசர் பிடிக்க எனக்கு பைத்தியம் பிடிக்காகுறையாகிட்டது.
என்னடா சீரியலிது..என்று பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.
பலகாலத்திற்கு பிறகு அன்று ஒரு நண்பர்வீட்டில் வலுகட்டாயமாக அரசி பார்க்கவேண்டி வந்தது.
அதில் நல்லதம்பியை பொலிஸ் பிடித்துவிட்டதாக ஜிஜே சொல்லுவார்.
அப்போது நண்பனை பார்த்து நான் கேட்ட கேள்வியே இப்பதிவின் தலைப்பு.:)
என்னது நல்லதம்பியை அரெஸ்ட் பண்ணிட்டாங்களா?
கடவுளே இன்னும் என்ன என்னவெல்லாம் நடக்கப்போகுதோ?
கலிகாலம்.
உபரித்தகவல்:- நல்லதம்பியாக நடிப்பவர் பஞ்சுஅருணாசலத்தின் மகனாம்.சின்னத்தம்பியாக நடிப்பவர் இயக்குனர் சமுத்திரகனியாம்.
Lebel :-என்னது காந்தியை சுட்டுட்டாங்களா?
4 comments:
கேட்டிங்களாட!! நம்ம நல்ல தம்பியை அரஸ்ட் பண்ணிட்டாங்களாம்!
நம்ம ஜாதிக்காரனை அரஸ் பண்ணிட்டா பாத்துக்கொண்டா இருப்போம்?
ஜாதிச் சங்கத்தை கூட்டுங்கடா! பஸ்ஸை கொளுத்துங்கடா!
கடைகளை அடிச்சு நொருக்குங்கடா.
புள்ளிராஜா
:)
புள்ளிராஜா
//ஜாதிச் சங்கத்தை கூட்டுங்கடா! பஸ்ஸை கொளுத்துங்கடா!
கடைகளை அடிச்சு நொருக்குங்கடா.//
நீங்க வேற..எதிர்கட்சிகாரங்க இனிப்பு கொடுக்குறாங்களாமெல்லே :)
ஜெகதீசன் வாங்க _/\_
சண் டிவியில் ராமாயணம் தொடராக வரப்போகிறது.அது பற்றியும் எழுதவும்.!!
Post a Comment