Tuesday, May 06, 2008

காக்கா ஒண்ணு குருவி பார்க்க போகுது!!



உலக திரை உலக விமர்சன வரலாற்றில் முதல் முதலாக ராக்கெட் வேகத்தில் குருவி திரைப்பட விமர்சனம் திரு ரவிசங்கர் அவர்களால் தமிழ்மணத்தில் வெளியிடப்பட்டது.

அதற்கு போய் ஒரு பின்னூட்டம் போடலாமென்று போனால் அங்கு போடாதே இங்கு போடு என்று இன்னொரு இடத்துக்கு கை காட்டினாரு.

தமிழ்மணம் திரையில் காட்ட ஒரு நிலம் பட்டா போட இன்னுரு நிலமா என நினைத்து அட போங்கப்பான்னு பின்னூட்டம் போடாமலே வந்துட்டேன்.

இனி விடயத்திற்கு வருகிறேன்.

எங்களுடய வீட்டில் விஜய் க்கு என்று ஒரு அபிமான கும்பல் இருக்கிறது.அதில் ஒரு பாதி கடந்த ஒரு சில படங்களில் விஜயின் வாள் வெட்டு தலை வெட்டு போன்ற சில அபூர்வ காட்சிகளால் மனம் நொந்து கட்சியிலிருந்து பாதி மனத்துடன் விலகியிருக்கிறது.

இன்னொரு பாதிக்கு (அரை டிக்கட்டுகள்) விஜய் வெட்டினால் என்ன இல்லை
குத்தாட்ட்டம் போட்டாலென்ன சிரித்துகொண்டே பார்ப்பார்கள்.

இந்தமுறை குருவியில் வன்முறைகாட்சிகள் பெரிதாக இருக்காது.டண்டணக்கா
பாட்டு எல்லாம் இருக்கு .எனவே திரை அரங்கில் சென்று பார்ப்பதாக மொத்த குடும்பமே ஒரு முடிவு எடுத்திருந்தோம்

அதில் வைத்தாரய்யா ரவிசங்கர் அய்யா ஒரு ஆப்பு.

அதாவது
நம்ம கதா நாயகரு கத்தி வாள் அப்டின்னு வன்முறையில்லாமல்
இம்முறை கோடரி கொண்டல்லவோ வில்லன்களை தறிக்கிறாராம்..

இதுக்குபிறகும் எப்படி குடும்பத்துடன் சென்று அப்படத்தை பார்ப்பது?

எனவே குருவி பார்க்க போவது canceeeeeel

மன்னிக்க மிஸ்டர் ஐங்கரன்(வினியோகஸ்தர்)

ஆனால் விதி என்ன சொல்லிச்சுது என்றால்

நேற்றுபார்த்த இந்த தளத்திலை ஒரு வித்தியாசமான விமர்சனம் குருவி படத்திற்கு இருந்தது.

அதாவது

'கில்லி' படத்தை அதைவிட சிறப்பாக எடுக்க முடியுமா என்று கேட்டால்... முடியும்... 'குருவி'யை பாருங்கள் என தைரியமாக சொல்லலாம்.

இந்த வரிகளை வசிக்கும்போதே புல்லரிக்குதில்லையா?

எனவே

தங்கமணியை அதெடி இதெடிஅங்கெயெடி இஞ்சையெடி பொன்கொடி பூங்கொடி என்று ஏமாற்றிவிட்டு

நான் மட்டும் தனியாக சென்று குருவி பார்ப்பதென்று முடிவு.

வாழ்த்தி அனுப்புங்கள்.


லேபிள்:-பின்னூட்ட மட்டுறுத்தல் கயமை,காக்கா ,குருவி,திரைவிமர்சனம்

1 comments:

Anonymous said...

இந்த படத்தை நான் டைரக்ட் பண்ணியிருக்கணும்.

குருவி பறந்துருக்கும்லே