Friday, December 23, 2005

திலகவதிக்கு சாகித்ய அகாடமி விருது

தமிழக காவல்துறையின் கூடுதல் டிஜிபி திலகவதிக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.
மாநில அளவில் தலை சிறந்த எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய சாகித்ய அகாடமி விருது வழங்கி கௌரவித்து வருகிறது. சாகித்ய அகாடமி விருது வழங்கும் கமிட்டியின் கூட்டம் கோவாவில் நடந்தது. இதில் விருது பெறுவோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் தமிழில் சிறந்த எழுத்தாளருக்கான சாகித்ய அகாடமி விருது திலகவதிக்குக் கிடைத்துள்ளது. அவர் எழுதிய கல்மரம் என்ற நிõவலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த நாவலை அவர் கடந்த 2001ம் ஆண்டு எழுதியிருந்தார்.
ரூ. 50,000 ரொக்கம், பாராட்டுப் பட்டயம் ஆகியவை அடங்கியது சாகித்ய அகாடமி விருது. விருது கிடைத்திருப்பது குறித்து திலகவதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

thatstamilcom

Read More...

Sunday, December 18, 2005

எந்த நூற்றாண்டு இது?



எத்தனை சிறப்பு தொழில் நுட்பம் வந்தென்ன? மழை பாதி விதி பாதி என்று இந்த மக்களின் வாழ்க்கை முடிந்துவிட்டிருக்கிறது.அரசை குறை கூறமுடியவில்லை.
யாரிடம் நோவார்கள் இந்த மக்கள்?

இறந்த தமிழக உறவுகளுக்காக அஞ்சலிகள்.

Read More...

Wednesday, December 14, 2005

ஓகோ..இதுதான் சிவாஜியா?

ஓகோ..இதுதான் சிவாஜியா? ரஜனியின் சிவாஜி பட கெட்அப் இதுதானா? சும்மா சொல்லக்கூடாது ரஜனி இரசிகர்களுக்கு இனி வரும் காலங்களில் நிறையவே வேலை இருக்கப்போகிறது.அடுத்த வெற்றிப்படம் தயார்.





Read More...

Monday, December 12, 2005

தேவை பாடல் சுட்டி

தமிழ்பட பாட்டாயின் எந்த தூணில் இருந்தாலும் உருவிவிடுவேன்.இது ஈழ தேசிய பாடல் வரிசையை சேர்ந்தது. எனவே தேடி கண்டுபிடிக்கமுடியவில்லை.

எந்த வட்டு எந்த கோம்பை என்று தெரிந்தாலாவது சுழி ஒடிப் பிடிக்கலாம்..

எனவே ஈழ நண்பர்களே சுட்டி தெரிந்தால் தெரியப்படுத்துங்கள்.

மிகுதியை நான் பார்த்துக்கொள்வேன்.

நன்றி

பாடல்கள் இதுதான்

.1. ராஜகோபுரம் எங்கள் தலைவன்

2.நெருப்பாற்றை நீந்தி கடந்து (தேனிசை செல்லப்பா )

3. என்னான்றே அண்ணே என்னான்றே..

Read More...