இது எனது முதல் கைக்கூ கவிதை பார்த்து படித்து ஆதரவு தாருங்கள்படித்து இரசித்து பின்னூட்டம் தர மறந்து செல்லும் உள்ளங்களுக்கு முன்கூட்டிய நன்றி.
யாதும் ஊரே யாவரும் கேளீர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா.
கைக்கூ காப்புரிமை "தீவு"
பட்டறைக்குறிப்புச்சொற்கள்:- பாஸ்போட், நுண்அரசியல் ,நச், மொக்கை, தயிர்ச்சாதம், தமிழ்ப்பதிவுகள், தமிழ்99, தமிழ்100, இரவுக்கழுகு, மத்தியானக்கழுகு, கொரியா, திமுக, ஜெயாரிவி,மற்றும் இலிya's,Homer
Read More...
Summary only...

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.குறிப்பு சொல் ஒண்டிக்கு ஒண்டி என விண்ணப்பபாரத்தில் குறிப்பிடவேண்டும்.
சோட்டாகான் அய்கிடோ கியோகுசின்(கவனிக்க கொரியன் ஸ்டைல்) கோயுரியு போன்றவற்றை பற்றி அறிந்திருந்தாலும் இந்தப் போட்டிகளில் ஏதாவது ஒன்றில் பங்குபற்றிய முன்னனுபவம் இருந்தால் நல்லது.தனியே கராத்தே மாஸ்டருடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் அனுப்பினால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
வெறும் காட்டா மட்டும் தெரிந்துகொண்டு குமிட்டிக்கு ஆசைப்படக்கூடாது.
மஞ்சள் பட்டி வாங்கியவுடனேயே கறுப்புபட்டி வாங்கியவராக ஆரம்பத்திலேயே தன்னை நினைத்து சந்தோசப்பட்டவராக இருத்தல் கூடாது.
தமி்ழ் நாட்டு வீர விளையாட்டுகளான சோடாபுட்டிஎறிதல் பின்னங்கால் பிடரியில்பட ஒடுதல் அழுகுணி அளாப்பி ஆட்டம் போட்டுக்கொடுத்தல் போன்ற மேலதிக தகுதிகள் கவனத்தில் எடுக்கப்படமாட்டாது
காட்டா போடும்போதோ குமிட்டியின்போதோ ஓசை போட்டு எதிராளியை
பயமுறுத்தக்கூடாது
ஓடு உடைப்பது கல் உடைப்பது பொட் உடைப்பது போன்ற சாகச செயலுக்கு
அனுமதியில்லை.
பார்வையாளராக வரும் கும்மி இரசிகர்கள் தமக்கு வசதியான ஏதாவது ஒரு பட்டி அணிந்திருத்தல் வேண்டும்.
போட்டியில் கலந்துகொள்வோரின் நேர்முகத்தேரிவு சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறைவளாகத்தில் ஆகஸ்ட் 5 நடைபெறும்.
Read More...
Summary only...
எல்லோரும் வார இறுதிக்கு அஞ்சலை ஏவாள் வீக்கென்ட் jollu என ஒரே பட ரீலீஸாக இருப்பதால் நான் ஒரு ஆன்மீகப் படம் போட்டுள்ளேன். தொழுது பின் செல்க
வெள்ளைக் கமலத்திலே - அவள்
வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள்
கொள்ளைக் கனிஇசைதான் - நன்கு
கொட்டுநல் யாழினைக் கொண்டிருப்பாள்.
கள்ளைக் கடலமுதை - நிகர்
கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொலவே
பிள்ளைப் பருவத்திலே - எனைப்
பேணவந்தாள் அருள் பூணவந்தாள்.
இன்றைய வெள்ளித்திருநாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.மீண்டும் ஒரு வலைப்பொழுதில் சந்திப்போம்.
Read More...
Summary only...
நானும் பார்க்கிறேன்.கொரியாக்கு போனமா நாலு கொரியா எழுத்து படிச்சமா இல்லை அவிங்களோட பழகிப்பார்த்தமா அப்டீன்னு இல்லாம
நாளும் கோளுமா தமிழ்மண தியேட்டர்ல 4 தியேட்டர்லயும் தன் படத்தை ரீலிஸ் பண்ணிக்கொண்டிருந்தா
(ஒரு தியேட்டர் உடனடி பதிவு மறுதியேட்டர் வலப்பக்கம்
பின்னூட்ட தியேட்டர் இடப்பக்கம் வசூல் கணக்குப்பார்க்கும் தியேட்டர் அண்ணாந்து பார்த்தால் நேற்றைய ரிலீஸ் படவரிசை..)எல்லாத்திலையும் இந்தாளு படம் காட்டினால் நாம எப்பதான்யா நம்ப படத்ததை ´ரிலீஸ் பண்றது?
எமக்கு எப்பதான் யோகம் வந்து படம் காட்டுவது?
ஆட்................டோ
Read More...
Summary only...