Sunday, October 28, 2007

இவிகள நான் ஏன் கக் பண்ணினேன்?இட்லியார் தமிழச்சி வலைப்பதிவுகளை கக் பண்ணியது ஏன்?


இருவரும் வேறுவேறு குறூப்
ஒருவரு பூணூலு
மற்றவரு பாம்ப விட்டுடு பூணூல அடி என்பவர் கட்சி.

ஆனால் ரெண்டு பேருக்கும் ஒரே நாளில் ஆப்பு.


இங்கதான் கக்கன்(இது காங்கிரஸ் கக்கன் அல்ல) நிக்கிறான்.

நம்ம மக்கள்ஸ் தெளிவு அம்பேல்.


ஆனால் இவிகள நான் ஏன் கக் பண்ணினேன்? அப்டீன்னு அவன் கக்கன் வந்து சொல்லவா போறான்?


இந்த இடத்திலைதான் தீவு தெளிவாயிருந்தான்.

ரெண்டுபேருமே கூத்து பட்டறைக்கோஷ்டி நன்னாவே நாடகம் போடுறாங்க
என்று இந்த நிமிஷம் வரையும் நெனைச்சிருந்தான் அந்த மெயில் வரும் வரை


இதுதான் தீவுக்கு மிரட்டி வந்த அந்த மெயில்


திருவாளர் தீவு சாரே

நாளை உமது தளம் எனது ஆட்சியின் கீழ் வரப்போகிறது.

என்ன பண்ணனுமோ பண்ணிக்க.

இட்லியாருக்கும் தமிழச்சிக்கும் நடந்ததை வலையுலகமே அறியும்.
டீடெல்ஸ் அவங்களையே கேட்டுக்க

அந்த லிஸ்டில் அடுத்தது நீ.


வலைப்பதிவில் சீரியஸ் என்று சொல்லி மொக்கை போடுபவர்களே
எனது இலக்கு.


முடிந்தால் உனது தளத்தை காப்பாற்றி கொள்.


ஆர்குட் ஆர்பாட்என்ன செய்ய நண்பர்களே?..


எனது மின்னஞ்சல் பாதுகாபபுக்கான எந்த சீக்ரட் கேள்வியை மாற்றி வைக்க?
அவன் எல்லாவற்றையும் மாற்றுவானாமே..

இதுவரை எனது பதிவில் அதிக பின்னூட்டங்களை இட்டது யார் என்ற எனது சீக்ரட் கேள்விக்கு நான்தான் என ஆன்சர் போட்டுள்ளேன்.

ஒருவேளை அதையும் கண்டுபிடித்துவிடுவானோ?

யார் என்ன செய்தாலும் தளத்தை விட்டு ஓடிப்போவதில்லை என முடிவு செய்துள்ளேன்

திரும்ப காக் பண்ணி எனது தளத்தை மீட்டெடுப்பேன்

எனது தளத்தை நான் திரும்ப மீட்டெடுத்தேன் என எவ்வாறு என்னை மீண்டும் அடையாளம் காண்பீர்கள்?

அவனா நானா எப்படி கண்டுபிடிப்பது?

இப்பொழுதே சில அடையாளங்களை முன்னெச்சரிக்கையாக கூறுகிறேன்.எனது மவுஸ் படத்தில் நாமம் பொட்டுக்கு பதிலாக பூனை படம் போட்டிருக்கும்

துக்ளக் படத்திற்கு பதிலாக பக் பக் என பயத்துடன் அடிக்கும் ஒரு இதயத்தின் படம் போட்டிருப்பேன்


ஒரு வீடியோ பதிவு போட்டு எழுதி வாசிப்பேன்

அடிக்கடி காணாமல் போய்விட்டதாக எனது வக்கீல் மூலமாக அறிக்கை விடுவேன்.அதே நேரம் எனது தளத்திலும் பதிவு ஒட்டுவேன்


இவை தவிர எனது பின்னூட்டத்தை தமிழ்ப்பித்தன் தூக்கினால் கண்டிப்பாக அது நான்தான்


எனவே வலை மக்கள் தெளிவாக இருக்கவும்


போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்.
மீண்டு வருவேன்.

லேபிள்-கக் ,விடுதலைப்புலிகள் ,அவதுரு, ஆர்குட் ,இஸ்குட் ,அபிஷேகம்


நைவேத்யம் ,பூஜை, மாசிலா காக்கதீவு
"எதுக்கும் பயப்படமாட்டான்

காலிருக்கும்வரை"

32 comments:

theevu said...

பின்னூட்ட கடமை

Anonymous said...

ஏம்பா உண்மையாவே கடிதம் வந்துச்சா?

கலைஞன் said...

கக் அப்படீன்னா என்ன?

Anonymous said...

தீவு
"எதுக்கும் பயப்படமாட்டான்

காலிருக்கும்வரை//

நீதான்யா உண்மைய பேசரவன்

theevu said...

//கலைஞன்

கக் அப்படீன்னா என்ன?//

hack

இணையத்தில் கொத்து ரொட்டி சமாச்சாரம்

theevu said...

//Anonymous said...
தீவு
"எதுக்கும் பயப்படமாட்டான்

காலிருக்கும்வரை//

நீதான்யா உண்மைய பேசரவன்//

:)

Anonymous said...

123456789, 123456789, 123456789

ஈழவன் said...

//தீவு "எதுக்கும் பயப்படமாட்டான்

காலிருக்கும்வரை//

தீவு.
குழப்பாத. தெளிவாச்சொல்லு. எந்தகக்கால், கோழிக்காலா குவாட்டர்காலா இல்லை உன் சொந்தக்காலா?

கொண்டோடி said...

//அடிக்கடி காணாமல் போய்விட்டதாக எனது வக்கீல் மூலமாக அறிக்கை விடுவேன்.அதே நேரம் எனது தளத்திலும் பதிவு ஒட்டுவேன்
//

அது!!!

"டோளர்" புடுங்காத தீவாரே,
உப்பிடி தளங்களை முடக்குபவர்கள் கட்டாயம் பாஸிஸ்டுகளாகத்தான் இருக்க வேணும்.
முந்தியொருக்கா உவங்கள் 'பொடியங்கள்' எண்டு கொஞ்சப்பேர் வந்து உப்பிடி தளத்தை முடக்கிறம் எண்டு விளையாட்டுக் காட்டினவங்களெல்லோ?

இப்பவும் அவங்கள் செயற்படுறாங்களோ?
அல்லது உது வேற கோஷ்டியோ?

என்னவோ, நீங்களும் இடைக்கிடை தளம் திருடுபோச்சு எண்டு நாடகம் போட்டால் சரிதான்.

Kiran said...

I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.

தமிழ்பித்தன் said...

வேண்டாண்டா விட்டுடடா முடியலை

Anonymous said...

டோளர் டீவார்,

'கக்' எண்டதை இங்கிலீசிலயே எழுதியிருக்கலாம். இது ஏதோ கக்கா போன பீலிங் வருது.

theevu said...

//Anonymous

123456789, 123456789, 123456789//

என்னை வாழவைக்கும் பின்னூட்ட உள்ளங்களுக்கு நன்றி.

+/-ஞானமேகம் said...

காளமேகம் ஈழமேகம் கண்டவர்க்குப் புதியதாக
ஞானமேகம் வந்திருக்கிறேன் - ஐயா
ஞானமேகம் வந்திருக்கிறேன்.

-/+ஞானமேகம்

Anonymous said...

//எனது மின்னஞ்சல் பாதுகாபபுக்கான எந்த சீக்ரட் கேள்வியை மாற்றி வைக்க? அவன் எல்லாவற்றையும் மாற்றுவானாமே..
இதுவரை எனது பதிவில் அதிக பின்னூட்டங்களை இட்டது யார் என்ற எனது சீக்ரட் கேள்விக்கு நான்தான் என ஆன்சர் போட்டுள்ளேன்.
ஒருவேளை அதையும் கண்டுபிடித்துவிடுவானோ?//


ஹா ஹா ஹா

theevu said...

//ஈழவன் said...

//தீவு "எதுக்கும் பயப்படமாட்டான்

காலிருக்கும்வரை//

தீவு.
குழப்பாத. தெளிவாச்சொல்லு. எந்தகக்கால், கோழிக்காலா குவாட்டர்காலா இல்லை உன் சொந்தக்காலா?//

ஒருக்காலுமில்லை நடக்காது

இது என் சொந்தக்கால்.ஓட்டத்திற்கு மட்டுமே பாவிப்பதுண்டு.

dondu(#11168674346665545885) said...

//இவை தவிர எனது பின்னூட்டத்தை தமிழ்ப்பித்தன் தூக்கினால் கண்டிப்பாக அது நான்தான்//

dondu(#11168674346665545885) said...

//இவை தவிர எனது பின்னூட்டத்தை தமிழ்ப்பித்தன் தூக்கினால் கண்டிப்பாக அது நான்தான்//

மன்னிக்கவும், பிரென்ட்ஸ படத்தில் ஒரு காட்சி நினைவுக்கு வருகிற்து என்பதை இங்கே கூறாமல் இருக்க இயலவில்லை.

"வடிவேலு ரமேஷ் கன்னாவிடம் தேவையில்லாத் ஆணியெல்லாம் பிடுங்கச் சொல்லுவார். அவரும் மெனக்கெட்டு வந்து தேவையில்லாத ஆணி எது என்று கேட்க, வடிவேலு அடி வயத்திலிருந்து "நீ பிடுங்கறது எல்லாமே தேவையில்லாத ஆணிதாண்டா" என்று வெறுப்புடன் கத்துவார்.

அன்புடன்,
டோண்டு ராகவன் ்

Great said...

நான் கக் என்பதை HUG என்று நினைத்து வந்தேன்.... அடப்போங்கப்பா

Anonymous said...

ஹாக் பண்னீட்டாங்களா? சும்மா ஒரு
testing

இம்சை அரசன் மகிந்த said...

கக்கப் போ

theevu said...

//கொண்டோடி said...


முந்தியொருக்கா உவங்கள் 'பொடியங்கள்' எண்டு கொஞ்சப்பேர் வந்து உப்பிடி தளத்தை முடக்கிறம் எண்டு விளையாட்டுக் காட்டினவங்களெல்லோ?//


நானும் அவிங்களதான் தேடுறன்.
வந்துட்டாங்கன்னா கொஞ்ச பேரு
லிஸ்று இறுக்கு.கவுத்துடலாம்.:)

theevu said...

//தமிழ்பித்தன் said...

வேண்டாண்டா விட்டுடடா முடியலை//

முடியலை :)

//Anonymous said...

டோளர் டீவார்,

'கக்' எண்டதை இங்கிலீசிலயே எழுதியிருக்கலாம். இது ஏதோ கக்கா போன பீலிங் வருது.//


டோளர்

இது வேறு

டோளர் இம்சை அரசர் சொல்லியிருக்கும் தத்துவம் கவனியுங்க

கக் கக் கப் போ

அப்ப்டீன்னா
hack பண்ண பண்ண நீ போய் கிட்டேயிரு.

பதிவு பொஸ்தகம் மா நாடு வீடியோ
ன்னு போய்கிட்டே இரு.

தத்துவத்தை கப்ன்னு பிடிச்ச்க்கோங்க
அண்ணே.


நன்றி இம்சை அரசன் மகிந்த

உம்மாண்டி said...

மக்கள் ஜனநாயகப் புரட்சி சம்பந்தப்படாத எந்த விடயத்திலும் நாம் தலையிடுவதில்லை. ஆனால் இந்த விடயத்தில் கை அல்லது கால்களையிடுவதற்கு ஆலோசிக்கிறோம்

ஊடாக பொறுப்பாளர்
உம்மாண்டி
பெடியன்கள்
புதிய ஜனநாயக புரட்சி இயக்கம்
அமெரிக்கா

Anonymous said...

ullen ayya...

ingu enna nadakkiradhu :(

oru velai ennoda computer crash aanadhukkum ethavadhu arasiyal vivakaaram irukkumo?

apdiye nool gapla noodles samachu saapittu poga vendiyathu thaan :((

Anonymous said...

aval pimple azhaguda
aval thummal azhaguda
aval pinnal azhaguda...


ah jinga jingada jindadadaa
ah jinga jingada jindadadaa

vasantha mullai pole vandhu asainthu aadhum ven pura...

(repeatu)

kabadi kabadi kabadi

theevu said...

//dondu(#11168674346665545885)
மன்னிக்கவும், பிரென்ட்ஸ படத்தில் ஒரு காட்சி நினைவுக்கு வருகிற்து என்பதை இங்கே கூறாமல் இருக்க இயலவில்லை.

"வடிவேலு ரமேஷ் கன்னாவிடம் தேவையில்லாத் ஆணியெல்லாம் பிடுங்கச் சொல்லுவார். அவரும் மெனக்கெட்டு வந்து தேவையில்லாத ஆணி எது என்று கேட்க, வடிவேலு அடி வயத்திலிருந்து "நீ பிடுங்கறது எல்லாமே தேவையில்லாத ஆணிதாண்டா" என்று வெறுப்புடன் கத்துவார்.
//

நல்லாவே படம் பார்ப்பீர்கள் போலுள்ளது.இதுதான் உங்கள் இளமை ரகசியமா? :)

theevu said...

//+/-ஞானமேகம் said...
காளமேகம் ஈழமேகம் கண்டவர்க்குப் புதியதாக
ஞானமேகம் வந்திருக்கிறேன் - ஐயா
ஞானமேகம் வந்திருக்கிறேன்.

-/+ஞானமேகம்//

நல்வரவு நல்வரவு

இது சிலேடை காளமேகமா இல்லை உள்குத்து காளமேகமா?

ஞானமேகத்தின் கவி ஒன்று மதி பற்றிய தளத்தில் கண்டேன்.

பயந்துட்டேன்.:)

+/-ஞானமேகம் said...

உள்குத் தென்ன உள்குத்து
உலக்கைக் குத்துங் கண்டவர்கள்
கல்குத்(து) தென்றும் பார்க்காமல்
கடற்கரை வயற்கரை நடந்தவர்கள்

முள்குத் துவதுந் தெரியாமல்
முழுசாய் மீனைத் தின்றவர்கள்
கள்ளுக்காகப் பனை தென்னை
கடற்கரை மணலிற் கசிப்பண்ணை

பல்குத் தப்பனை தென்னீர்க்கு
பழகுவதற்கோ பனங் கொட்டை
நல்வர வெனக்குச் சொன்னீர்கள்
நன்றி நன்றி தீவாரே

+/- ஞானமேகம்

theevu said...

great மற்றும் அனானிக்கு வரவுக்கு நன்றி.

உம்மாண்டி உங்கள் நடவடிக்கைககளை சற்று தீவிரப்படுத்துங்கள்:)

//llen ayya...

ingu enna nadakkiradhu :(//

தோழர் வரவுக்கு நன்றி.
ஆர்ப்பாட்டத்தில் காணலியே

//Anonymous
ah jinga jingada jindadadaa
ah jinga jingada jindadadaa//

தோழர் இதற்கான அர்த்தம் என்ன?

ஆர்குட் ஆர்பாட் said...

திருவாளர் தீவு சாரே

நாளை உமது தளம் எனது ஆட்சியின் கீழ் வரப்போகிறது.

என்ன பண்ணனுமோ பண்ணிக்க.

இட்லியாருக்கும் தமிழச்சிக்கும் நடந்ததை வலையுலகமே அறியும்.
டீடெல்ஸ் அவங்களையே கேட்டுக்க

அந்த லிஸ்டில் அடுத்தது நீ.

வலைப்பதிவில் சீரியஸ் என்று சொல்லி மொக்கை போடுபவர்களே
எனது இலக்கு.

முடிந்தால் உனது தளத்தை காப்பாற்றி கொள்.

குழவி said...

//வலைப்பதிவில் சீரியஸ் என்று சொல்லி மொக்கை போடுபவர்களே
எனது இலக்கு.//

அப்போ உங்களுக்கு ரொம்ப வேலையிருக்கோ ? நடக்கட்டும் நடக்கட்டும்