Thursday, October 18, 2007

NO WOMAN NO CRY

பெண்கள் மாநாடு நடாத்தி முடித்திருக்கிறியள் சந்தோஸம்.ஏதாவது வகையில் தமிழ் பெண்கள் தம்மை இயக்கிகொண்டிருப்பது நல்லதுதான்.





தமிழச்சி அந்தமாதிரி செயல் வீராங்கனை எல்லாருடைய புகைப்படங்களையும் இணையத்தில் இட்டிருந்தா(இப்படி இணையத்தில் அவர்களுடைய புகைப்படம் போடுவதற்கு அவர்கள் அனுமதித்துள்ளார்களா?ஏனெனில் பல தொண்டரடிப்பொடியாளர்கள் இதை தப்பாக பயன்படுத்தலாம்)





சரி அதை விடுவோம்.





மேடம் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம ஒரு அறிக்கை விட்டிருக்கிறா.அதில் வி.புலிகளை விமர்சித்துள்ளா.





தப்பில்லை.





தவறாயின் நானும் கூட்டுசேர்ந்து விமர்சிப்பேன்.





இதுபற்றி பெரியார் சபேஸன் தனது பதிவில் கூறியுள்ளார்.அவரது கண்ணுக்கு படாத ஒரு விமர்சனத்தையும் அம்மையார் முன்வைத்துள்ளார்.





இது ஒன்று போதும்





இது விமர்சனமா அல்லது ஏதாவது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியா என நிருபிக்க..








அம்மையார் தனது கட்டுரையில் இவ்வாறு சொல்கிறார்.








1980ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் சிங்களப்பேரினவாத அரசின் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை ஒட்டு மொத்தமான தமிழ்ச்சமூகத்தையுமே அரசுக்கு எதிராகத்திருப்பியது. ஆரம்பத்தில் இலங்கை இராணுவம் தமிழ்ப்பெண்களுக்குச் செய்த பாலியல் வன்முறைகள் தமிழ்ப் பெண் தற்கொலைதாரிகளையுண்டாக்கப் புலிகளுக்கு உதவியது.



ணவரைத்தவிர வேறு எவனும் தொட்டால் பெண்னின் உடம்பு மாசுபட்டது, புனிதமற்றது, அழிக்கப்படவேண்டியது என்ற கருத்து தமிழ்க்கலாச்சாரத்துடன் பின்னிப்பிணைந்திருக்கிறது. அதன் அடிப்படையில் இந்திய சமாதானப்படையினரால் பாலியல் கொடுமைக்குள்ளான பல தமிழ்ப்பெண்கள் தற்கொலை செய்யத் தூண்டுப்பட்டார்கள்.


இப்படி எழுதுவது கடவுளுக்கே அடுக்காது அம்மணி!



அப்படியே கொழுவியின் வீடியோ பதிவையும் பாரக்கவும்.இவை படம் அல்ல நிஜம்.


-ஆணாதிக்க தீவு -




லேபிள் மகளிர்மாநாடு பெண்போராளிகள் விடுதலைப்புலிகள்.


பிகு தலைப்புக்கும் கட்டுரைக்கும் சம்பந்தமில்லை அது ஒரு பொப் மார்லியின் பாடல்.

3 comments:

theevu said...

பின்னூட்ட கடமை அல்லது ரெஸ்ரிங் 123

Anonymous said...

rajeswari promotes batticaloa regionalism next to promotes herself as a human right advocate and writer

ரவி said...

youtube ல் இருந்து அந்த பாடலுக்கும் ஒரு லின்க் கொடுக்கவும் !!!