Sunday, October 14, 2007

சாமி அடிச்சாரோ செண்பகப்பூ கையாலே..

முதல் முதல் சாமி பத்மப்பிரியாக்கு அடித்தது என்று கேள்விப்பட்டவுடன் ஏதோ
தெய்வக்குத்தமாக்கும் அதுதான் சாமி அடித்தது என புரிந்துகொண்டேன்.

பின்னர் நடிகைக்கு டைரக்டர் அடித்துவிட்டாராம் என்றார்கள்.அந்தம்மா கௌரவம் படத்தில் நடித்தபோதே தெரியும். வயதானவங்க ஏன் அடி வாஙுறாங்க
என்றால் இது வேறயாம்.இது சேரன் பட பத்மப்பிரியாவாம்.

அட விஷயத்துக்கு வாய்யா..ஒகே ஒகே

சாமி சொல்லியிருக்கார் .

இந்தம்மாவிர்கு அழ தெரியவில்லை அதுதான் இப்படி
ஆயிற்றறு .

மற்றும்படி நான் வல்லவன் எனக்கும் குடும்பம் இருக்கு
அப்ப்டீன்னு சொல்லி இருக்காரு.

அதை விட அந்த அம்மா ஒரு படி மேலெ போய் நான் பெண்ணியவாதி இல்லை அதனால் வேறு போராட்டம் இல்லைன்னு
சொல்லியிருக்கிறாரு.

அதன் அர்த்தம் புரியவில்லை.

சரி எப்படியிருப்பினும் ஒருவரை பலவீனமானவரை அடிப்பது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது.

இது சம்பந்தமாக நானும் எனது கண்டிப்பை தெரியப்படுத்தவெண்டும்.

பல வலைப்பதிவர்களும் இதுபற்றி காட்டமாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அதிலும் செல்லாவின் இழுத்துவைத்து அறுப்பேன் என்ற வதிவும்.கொழுவியின் விடியோ கண்டனப்பதிவும் பாராட்டத்தக்கது.


எனது வினா என்னவென்றால் ஒருவரை அழ வைக்க அடிக்கதான் வேண்டுமா?

வேறுவழிகள் இல்லையா?

ஒருவரை அழவைப்பதற்கு அடிக்காமலே

அ. அவரை விஜயகாந்தின் படம் ஒன்றை எழுந்து போகவிடாமல் உட்காரவைத்து முழுமையாக பார்க்கவிடலாம்.

ஆ. பெயரிலியின் அபத்தவாதம் வலைப்பதிவைபார்த்து அவரினதும் அதில் எழுதியுள்ள அமீபா என்பவரினதும் பின்னூட்டத்தையும் தமிழில் மொழிபெயர்க்க விடலாம்.

இ.த்மிழச்சிக்கு போட்டியாக கழகம் ஆரம்பிக்கவிடலாம்.

ஈ. வலைப்பட்டறையில் நன்னடத்தை பற்றி பேச விடலாம்

உ. தமிழ்மணத்தில் புதிதாக பதிய விடலாம்

ஊ. அப்பளம் சுடுவது எப்படி என்று தொழில்நுட்ப பதிவை வாசிக்கவிடலாம்.

சரியான் விடையை கூறூவோருக்கு ஒரு சிறிய வெள்ளைபந்து தரப்படும்.அதை காட்டி சரவணா ஸ்டோர்ஸில் உங்களுக்குரிய கிறைண்டறை
பெறுக்கொள்ளலாம்.

20 comments:

இரும்பொறை said...

அட ஆணிய புடுங்குய்யா:)

Anonymous said...

அந்தம்மா கௌரவம் படத்தில் நடித்தபோதே தெரியும். வயதானவங்க ஏன் அடி வாஙுறாங்க

அந்தம்மா என்னிக்கோ சாமிகிட்ட பூட்டுதுபா

Anonymous said...

ஏங்க .. அண்ணாச்சி. ஆணிபுடுங்கல் போராடிச்சிடுச்சா..:))

theevu said...

//ஆணிய புடுங்குய்யா:)//

ஆணி அது வேறு இது வேற்:)

//அந்தம்மா என்னிக்கோ சாமிகிட்ட பூட்டுதுபா//

உண்மையா அடப்பாவமே:(

//ஏங்க .. அண்ணாச்சி. ஆணிபுடுங்கல் போராடிச்சிடுச்சா..:))//

ஆணி மேலேயே படுத்திருக்கிறோம்.இது என்ன கேள்வி:)

Anonymous said...

pinnootta kadamai


naa yaarunnu kandu pudi paappam

theevu said...

//Anonymous

pinnootta kadamai


naa yaarunnu kandu pudi paappam//

தோழர்தானே

Anonymous said...

//தோழர்தானே//

அவ்ளோ ஈஸியா?

Anonymous said...

இவ்விட கும்மி எலோவ் செய்யோ?

Anonymous said...

//ஆணி மேலேயே படுத்திருக்கிறோம்.இது என்ன கேள்வி:)//

அப்போ உங்கட கேர்ள் ப்ரெண்டு ?

theevu said...

அவ்ளோ ஈஸியில்லை.கலப்பை இல்லாமல் தோழர்தான் உழுறவர்.அதான் அப்ப்டி நினைத்தேன்.
:)

செந்தழல் ரவி said...

தோழர், நாங்க இங்க வந்துட்டம்...இனிமே உம்ம பாடு கொண்டாட்டம் தான்...

Pot"tea" kadai said...

//எனது வினா என்னவென்றால் ஒருவரை அழ வைக்க அடிக்கதான் வேண்டுமா?//

அடி உதவுவது மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் என்று பெரியவங்க அப்போவே சொல்லி இருக்காங்க..

Anonymous said...

//அ. அவரை விஜயகாந்தின் படம் ஒன்றை எழுந்து போகவிடாமல் உட்காரவைத்து முழுமையாக பார்க்கவிடலாம்.//

தவறுதலான பார்வை.

எனக்கு போர் அடித்தால் விஜயகாந்தின்
"உளவுத்துறை" பார்ப்பேன். சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிடும்.

செந்தழல் ரவி said...

இன்னும் கமெண்டை ரிலீஸ் பண்ணாம என்ன பாத்ரூம் போயிக்கியா ?

ரசிகன் said...

அவருக்கு இவ்வளவு பெரிய தண்டனை லிஸ்டா?..
அந்த" உ."தண்டனையை நானும் அனுபவித்து விட்டேன்.

" உ. தமிழ்மணத்தில் புதிதாக பதிய விடலாம "

நான் எனது முதல் புது பதிவு போட்டிருகேன்.வாங்க வந்து சூடா படிச்சு உங்க கருத்த சொல்லுங்க....

அன்புடன் ரசிகன்

Anonymous said...

//சரியான் விடையை கூறூவோருக்கு ஒரு சிறிய வெள்ளைபந்து தரப்படும்.அதை காட்டி சரவணா ஸ்டோர்ஸில் //

எல்லாரும் அடி வாங்க நல்ல ஐடியா.

பந்து காட்டித்தானப்பா எங்கடை ஆளொண்டு சரவணா ஸ்டோர்ஸில் அடி வாங்கியது. நல்ல நக்கல்.

theevu said...

//செந்தழல் ரவி said...
தோழர், நாங்க இங்க வந்துட்டம்...இனிமே உம்ம பாடு கொண்டாட்டம் தான்...//

என்ன பறவை கூடு திரும்பியாச்சா? சந்தோசம்.

//Pot"tea" kadai

//எனது வினா என்னவென்றால் ஒருவரை அழ வைக்க அடிக்கதான் வேண்டுமா?//

அடி உதவுவது மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் என்று பெரியவங்க அப்போவே சொல்லி இருக்காங்க..//

நம்ம ஊரிலும் சொல்வாங்க அடியாத மாடு படியாது என..:)இது கூடுதலா வாத்தியார்கள் தான் சொல்லி சொல்லி அடிப்பார்கள்.:)

மங்களூர் சிவா said...

MAY I COME INSIDE

theevu said...

//மங்களூர் சிவா
MAY I COME INSIDE//


please

Anonymous said...

you can make people cry by making them read this posting and replies(including mine) :)