Monday, December 10, 2007

பட்டறை போதுமப்பூ

தமிழ்மணம் பார்க்க தொடங்கியதிலிருந்து அவனவன் இப்பொழுதெல்லாம் வலியம் குளுசையுடன்தான் காலத்தை கழிக்கிறான்.



காலத்தால காலக்கடன் முடிக்கிறமோ இல்லையோ கம்பூட்டர் மட்டும் போட்டுவிடுகிறோம்.



அதில் இந்த புளொக் சங்கதி மட்டும் படுக்கபோகும் வரைக்கும் கிடந்து ஊடாடுகிறது



ஆணி பிடுங்கப்போனால் அங்கும் இதுதான்.அங்கும் பிடுங்குவது இதுதான்



செம்பும் பொன்னும் ஒக்கன நோககிய நாவுக்கரசன் போல் ஆணியும்

முதல் போணியும் வலைப்பதிவாயிற்று.





பதிவில் எதைப் படிப்பது எதை விடுவது என்று முழி பிதுங்குகிறது.



இப்பொழுது எல்லாம் லாட்டிரி சீட்டு சுவீப் ரிக்கெற் விழுவது போலத்தான்



பதிவர்களின் பதிவை தெரிந்து படிப்பது.



அதைவிட புனிதமான இலட்சணங்களில் ஒன்று அதை படித்துவிட்டு பின்னூட்டுவது.



அதிர்ஷ்டம் இருப்பவர்களின் பதிவுதான் அடிக்கடி பார்க்கப்படுகிறது.



அதுவும் இல்லாவிடில் குயுக்தியாக தலைப்பை பதிவுக்கு சம்மந்தமில்லாமல்

வைத்து எழுதவேண்டியுள்ளது.





இந்த திறத்தில்





இத்தனையாயிரம் போட்டிகளுக்கு மத்தியில்



வலைப்பதிவு பட்டறை அமைத்து வா ராசா வா பதிவு எழுது என அழைப்பு

வேறை



முந்தி எல்லாம் 4 பேர்தான் எழுதிக்கொண்டிருப்பார்கள் விரிவாகப் படித்து

அவருக்கு நானும் எனக்கு அவருமாக பின்னுர்ட்டிக்கொண்டிருந்தோம்



எல்லாமே இந்த வலைப்பதிவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் புண்ணியவான்களாலே போயே போச்சு.



சாம்பூ இலவச காலெண்டர் பேனை மற்றும் இத்யாதி முடிந்தால் தமிழில் நம்பர் வண் குங்குமமும் கலர் ரீவியம் வலை பதிந்தால் கொடுப்பார்கள போலே..



சென்னை பட்டறையிலே டப்பாவில் சாதம் கொடுத்தார்களாம்





இந்தமுறை தலைவாழை இலைபோட்டு புதுவையில் சாதம் படைத்திருக்கிறார்கள்.



என்ன கொடுமை இது..



இப்படி பதிவர்களை மடக்கி லாரியில் கொண்டுவந்து

வலைப்பதிவில் இறக்கினால் என்னைப்போன்ற பதிவர்களை யார் படிப்பார்கள்?





இப்பொழுதுதான் சென்னை முடிந்து அருகிலுள்ள புதுவையில் கால் பதித்துள்ளார்களாம் .இப்படியே விட்டால் உலக தமிழ் வலைப்பதிவர் மகாநாடும் நடாத்தி காட்டிவிடுவார்கள்.



எனவே தன் மானமிக்க தனது பதிவையே மற(்)வர்கள் எல்லோரும்
படிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பட்டறை போட்டு மற்றையோரையும் அழைத்துவரும் செயலுக்கு கண்டனத்தை தெரிவிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.





லேபிள்:- பொட்டிகடை, இகழ்ச்சிப்புகழ்ச்சி, கோல்கொண்டா ஒயின், வஞ்சகப்புகழ்ச்சி, காசிஅண்ணனுக்கு நன்றி, புரவலர்களுக்கு நன்றி, மற்றும் பொன்னவைககோ கோட்சூட்டை மட்டும் கவனித்த தம்பிகளுக்கும்.வினையூக்கி,தல மிஸ்ஸிங் ஏன்? மற்றும்
தமிழ்வெளி பொலிட்டிக


தவிக்க விட்டுட்டியே ராசா..

6 comments:

Anonymous said...

ஏய்யா பாராட்டுறீரா கண்டிக்குறீரா?

ஒண்ணுமே புரியல

Anonymous said...

இந்த சாப்பாடு போட்டு தமிழ்ச்சேவை செய்யற கலாச்சாரத்தை யார் ஆரம்பிச்சதுன்னு தெரியலை.

படா தமாசாக்கீதுபா...

ஏம்பா இந்த செலவை உருப்படியான காரியத்துக்கு பயன்படுத்த கூடாதா. எல்லா ஊரிலையும் நல்லா வசூல் நடக்குது போல...

வவ்வால் said...

தீவு,
சோறு கண்ட இடம் தான்யா சொர்க்கம் ,அங்கே தமிழும் சொல்லிக்கொடுத்த இரட்டை சொர்க்கம்லா, பள்ளிக்கூடத்துக்கு வரவைக்கவே சின்ன வயசில சோறு போட்டு தான் வர வைக்கிறாங்க, அப்போ வளர்ந்த பிறகு நாங்க சோறு துண்ணாம தமிழ படிக்கணுமா, யாருலே இது கூறு கெட்டத்தனமா பேசிக்கிட்டு!

நாங்க கோயிலுக்கு போகணும்னா கூட சுண்டல் தரனும்ல... நாங்கலாம் தமிழங்க , அப்போ நீங்க யாருய்யா?

வெறும் தயிர் சாதம், சாம்பார்னு ஏமாத்தாம அடுத்த தடவை சிக்கன் லெக் பீஸ் போட சொல்லிக்கேட்கலாம்னு நான் இருக்கேன்( அப்படிப்போட்டா நான் கண்டிப்பா போய்டுவேன்ல)

தீவு ஒரு சிங்கிள் டீக்கூட அடுத்தவங்களுக்கு வாங்கிக்கொடுக்காதீர் யாராவது சோறு போட்டா அதில ஒரு லாரி மண்ணை அள்ளிக்கொட்ட மட்டும் வந்திடுங்க!

theevu said...

வவ்வால்
என்ன இப்படி கடைசி வரியில் கவுத்துட்டீங்க..

இனிமேல் பதிவு போடும்போது கடைசியில் விளக்கமும் கொடுக்கவேண்டும் போலிருக்கிறது.

லேபிளில் புரவலர்களுக்கு நன்றி போட்டுள்ளேன் கவனிக்கவில்லையா?

இப்படிக்கு
சிங்கிள் தீவு

புரட்சி தமிழன் said...

நல்லாவே பாராட்டிறீங்க அடுத்த பட்டறைல நாமும் கலந்துக்கலாம் போலிருக்கு என்ன பிரியானினு கொஞ்சம் முதலிலே சொன்ன நல்லா இருக்கும் அதுக்கேத்த ஏற்ப்பாட்டோட வருவோமில்ல

வவ்வால் said...

தீவார் அவர்களே,

//லேபிளில் புரவலர்களுக்கு நன்றி போட்டுள்ளேன் கவனிக்கவில்லையா?//

சிங்கிள் தீவு சிணுங்கல் தீவா ஆகிடுச்சே :-))


உங்கள் பாராட்டில் மெய் சிலிர்த்து அடுத்த தபா பட்டறை போடும் போது சோத்த கட் பண்ணிட்டா என்னா ஆவுறதுனு தான், நான் கொரல் கொடுத்தேன், நான் இது வரைக்கும் பட்டறைக்கு போகலை நான் போற நேரமா பார்த்து சோத்துக்கு ஆப்பு வச்சிட்டா, அதான் இப்போல இருந்தே அட்வான்ஸ் புக்கிங் பார் சோறு! :-))
(சிக்கென் லெக் பீஸ், அப்புறம் பிரட்ச்சி அண்ணன் சொன்னாப்போல பிரியாணி(குஸ்கா போட்டாக்கூட ஓகே)

அப்போ உங்க பதிவில மேட்டர் இருக்காது லேபிளில் தான் இருக்கும்னு சொல்றிங்க, இது தெரியாம இத்தனை நாளா உங்க பதிவை படிச்சிட்டு இருந்தேனே:-)) இனிமே லேபிள் மட்டும் படிச்சுக்கிறேன்!