Thursday, January 03, 2008

யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுகிறேன்.(ட்ரெயிலர் பதிவு)

எனது இந்த வருட பதிவுகளாக வர இருப்பவை பற்றிய சில ட்ரெயிலர்கள்


முதலாவதாக நொண்டிக்கழுதையும் மண்குதிரையும்

விறுவிறுப்பாக ஆரம்பித்து சப்பென முடியும் சோகக் கதை.சேதாரம் யாருக்குமில்லை என்பதுதான் இந்தப்பதிவின் பலமே


இரண்டாவதாக


காகம் தி(ர)ட்டி மாடு சாகுமா?

தேவர் பிலிம்ஸின் மீள் வருகை.சண்டைகாட்சிகள் நிறைந்தது.டூப் நடிகர்களே
திறம்பட நடிக்கிறார்கள் என்பது கொசுறுச்செய்தி

கடைசிவரை பதிவு வருமா வராதா என துடிக்க வைக்கும் ஜாவாஸ்கிறிப்டின் அற்புத திரைக்கதை.
பார்த்தவர்கள் துடிக்கிறார்கள் பாராதவர்கள் பதைக்கிறார்கள்.

மூன்றாவதாக

யார் எந்தப் பக்கம்??

யார் யாருக்கு ஆதரவு ?

இறுதிவரை சஸ்பென்ஸ் இவர் அவருக்கா இல்லை அவர் இவருக்கா?

வாசகர்கள் அலுவலக சீட்டின் இருக்கையை விட்டு எழும்பும் வண்ணம் திரைக்கதை மிக குழப்பமாக நகர்கிறது.
இவர் அந்தக்குஞ்சுகள் பக்கமா இல்லை இந்த குடுமிகள் பக்கமா?பதிவின் இறுதியில் சிபிஐ இந்த மர்மத்தை மெதுவாக முடிச்சவிழ்க்கிறார்கள்.எதிர்பாரா திருப்பம்!!!

நான்காவதாக

தரமான பதிவு

பலரின் உள்ளத்தை கொள்ளை கொள்வதற்காக தீவு அவர்களால் பல நாள் எண்ணத்தில் உருவான வடிவமைக்கப்பட்ட ஒரு பதிவே தரமான பதிவு .

தரமாக ஒரு பதிவு போட்டாயா என கேட்பவர்களின் வாயடைப்பதற்காக தீவு அவர்களால் எழுதப்படும் ஒரு
மொக்க பதிவின் தலைப்பே தரமான பதிவு.(காப்பி ரீ றைட் றிசேவ்ட்)

நாளைய வரலாற்று பரிசுக்கேள்வி

தரமான பதிவு எழுதியவர் யார்?

தீவு



லேபிள்:-1000 பதிவு தாங்கிய அபூர்வ சிந்தாமணி

7 comments:

theevu said...

123

குழவி said...

கலக்கல் தலைப்புக்கள். கண்டிப்பா பதிவீங்கதானே..?

இன்னுமொன்ட விட்டுப்போட்ட மாதிரித் தெரியுது.:)

கானா பிரபா said...

aarampichudaaruyaaa ;-)

Unknown said...

இவ்வளவு சிம்பிளா எழுதியிருக்கீங்களே உங்கள நம்பலாமா?

Osai Chella said...

"எனக்கும் இடம் உண்டு" - என்ற டி எம் எஸ் பாட்டுதான் கேக்குது இந்த பதிவைப் படிக்கும் போது! ;-)

theevu said...

//குழவி said

இன்னுமொன்ட விட்டுப்போட்ட மாதிரித் தெரியுது... //

சொன்னீங்களென்டால் அதையும் போட்டு தாளிச்சிடலாம்:)

//கானா பிரபா said

aarampichudaaruyaaa ;-)//

என்னய்யா செய்யுறது?

திரைப்படத்தில் மட்டுமா ட்ரெய்லர் காட்டமுடியும்?வலைப்பதிவுகளிலும் காட்டலாமென்னுதான் :)

theevu said...

//உமையணன் said...
இவ்வளவு சிம்பிளா எழுதியிருக்கீங்களே உங்கள நம்பலாமா?//


நம்பாதீங்க..

எந்த புற்றுக்குள் எந்த பாம்பு இருக்கும் என்று சொல்லமுடியாது:)