Monday, February 18, 2008

மகா வலைப்பதிவர்களே ஏய்யா இப்படி ச்செய்யிறீங்க



தீவாகிய நான் கேட்டை நட்சத்திரமும் விருச்சிராசியையும் சேர்்ந்தவன்.எனது ஊர் யாழ்ப்பாணம் நான் எனது ஆரம்பககல்வியை அங்கேயும் இறுதிப் படிப்பினை இங்கேயும் மேற்கொண்டேன்.எனது முதுகில் ஒரு மச்சம் இருக்கிறது.எனது ஜாதி என்னவெனில்..

வேறென்ன தகவல் உங்கள்வலைப்பதிவை நான் வந்து படிக்கும்போது உங்களுக்கு தேவைப்படுகிறது?

எந்த வலைப்பதிவிற்குப்போனலும் 1008 மெசின்போட்டு

ஏதோ உங்கள் அயா்ண்சேவை திருட வந்தவனை கணகாணிப்பதுபோல் Stat பட்டைகளைப் போட்டு மிரட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.

உங்க வலைப்பதிவிற்கு வந்தாலே இந்திரசித்து போர்க்களத்தில் நின்றதுபோலல்லவா இருக்கிறது.

தனி ஒருவர் எநதநாட்டிலிருந்து வந்தவர்? என்ன ஐபி என்பதை மட்டும் அறிந்தால் போதாதா?


ஒரு சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் பாரு பாரு நல்லாப்பாரு எங்கவீட்டுக்கு
ரஜனி வந்தாரு ராதிகா வந்தாரு என்று FEEDJIT என்று ஒரு கண்றாவியைபோட்ட நல்லாத்தான் Show காட்டுறாங்க..

நீங்க மட்டும் அறிந்தால் போதாதா?

ஊர் முழுக்க உங்கவீட்டு விருந்துக்கு யார் வந்தாங்க என்று நோட்டீஸ் ஒட்டணுமா?

லேபிள்:இங்கு ஜாதகம் பார்க்கப்படும்.

2 comments:

Anonymous said...

//ஆரம்பககலவியை அங்கயும் இறுதிப் படிப்பினை இங்கேயும் மேற்கொண்டேன்///

ஆரம்ப கல்வியை என்று இருக்கவேண்டும்...

பெரும் புள்ளியான நீங்கள் புள்ளியை விடுவது மிகவும் கொடுமை !!!

(இல்லை வேண்டும் என்றே செய்ததா ? )

theevu said...

//செந்தழல் ரவி
(இல்லை வேண்டும் என்றே செய்ததா ? )//
:)

சமீபத்தில் 18.02.2008ல் நான் பதியும்போது புள்ளி இருந்த்தது.எப்படி விடுபட்டது என்று தெரியவில்லை.

திருத்தியுள்ளேன்

தமிழ் ஒரு நீசமொழி பார்தீர்களா?ஒரு புள்ளி மாறியவுடனே அர்த்தமும் மாறிவிட்டதே..