செல்லாவிற்கு திருப்பூர் பனியன் வழங்கும் திட்டம்.
இனமானத் தாரகை தமிழச்சியை தாக்கிய டவுசர்களுக்கு செல்லாவின் வீடியோ கண்டனப் படம்!
அண்மையில் துருத்தி தமிழச்சி (சொல்லடை அறிமுகம் கொழுவி)பாதுகாப்பு கழகம் சார்பில் பேன் செல்லா வழங்கிய (பேன் சொல்லடை அறிமுகம் பெயரிலி) ஓளிநாடாவில் வலைப்பட்டறை செயல்வீரர் ஒசை செல்லா அவர்கள் பாதிக்குமேல் ஆடையில்லாமல் நின்றது வலைப்பதிவர்களை மிகப் பாதித்தது.
எனவே வலைப்பதிவர் சார்பில் அவருக்கு திருப்பூர் பனியன் வழங்கும் திட்டமொன்றை மேற்கொள்ளுவதாக இருக்கிறோம்.
எனவே என்னைப்போன்ற கலகக் கண்மணிகள் இதனை என்னுடன் சேர்ந்து முன்னெடுத்து செல்லவேண்டும்.
அதனுடன் கொசுறாக.
அவருக்கு கராட்டி பயில கராட்டி பயிலுமிடத்தில் சண்டை செய்யாவிடினும் காட்டா வாவது ஒழுங்காக பழக வசதி செய்து கொடுக்கப்படும்.அதிலும் விசேடமாக
காராட்டியோ காட்டோவோ செய்யும்போது காலை சரியாக நிலத்தில் உறுதி எடுத்து நிற்கும்நிலை.
முஸ்டியை எவ்வாறு மடிப்பது
நெஞ்சுக்குநேரே எவ்வாறு விறைப்பாக பஞ்சு் பண்ணுவது
வாழைவெட்டுக்கும் கராட்டிவெட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை காண்பிப்பது
போன்ற துறைகளில் பிரத்தியேகபயிற்சிக்கும் ஒழுங்கு பண்ணப்படும்.
அதனைவிட தனித்து நேராக நிற்கும்போது காரில் சாயாமல் கார் துணையில்லாமல் எவ்வாறு
நிற்பது என தண்டு வட பயிற்சியும் அளிக்கப்படும்.

இடையிடையே ரென்சனாகாமல் இருக்க ரவிசங்கர் லேகியமும் வழங்கப்படும்.
இன்னமும் 24 மணித்தியாலத்திற்குள் ஓசையவர்கள் பனியன் போடாவிட்டால் எமது தோழர்கள் பனியன் வழங்கும் போராட்டத்தில் குதிக்கவிருக்கிறார்கள்.
எனவே உங்கள் வீட்டு கூரையை பிரித்து
தோழர்கள் குதிக்க வசதி செய்ய கேட்டுகொள்ளப்பபடுகிறீர்கள்
அடுத்தமுறை நடைபெறவிருக்கும் வலைப்பதிவர் பட்டறையில் வலைப்பதிவர் முன்னேற்றம்
என்ற நிகழ்ச்சிநிரலில் பனியன் வழங்குதல் பற்றி ஒரு சிறு குறிப்பு ஒன்றை 45 நிமிடத்திற்கு மேற்பட வழங்க நீங்கள் வழி வகை செய்து தரவேண்டும்.
லேபிள்:- பெரியார் திருப்பூர் பட்டறை கராத்தே பொப்மார்லி கஞ்சா