Monday, December 03, 2007

நான் நித்திரையாகிப்போனேன்




டொக்டரை பார்க்கவேண்டும் பார்க்கவேண்டும் என்று நினைப்பு ஏதோ காரணங்களால் எப்போதும் தள்ளியே போய்க்கொண்டிருந்தது.

நேற்று எப்படியும் எல்லா அலுவல்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு பார்ப்பது என முடிவெடுத்தேன்.

டாக்டர் விஜய் நடித்த அழகியதமிழ்மகன் படம் இணையத் தியேட்டரில் ஆசுவாசமாக இருந்து பார்த்தேன்.

நான் சாதாரணமாக விஜயின் ஓகே ஓகே டாக்கடர் விஜயின் படங்கள் விரும்பிப் பார்ப்பேன்.அடிதடி குத்துவெட்டு குத்தாட்டம் வடிவேலு அப்படி இப்படி என்று ஒரு களிப்பூட்டும் படமாக இருக்கும்.

இது என்னடாவெண்டால் ..என்னத்தை சொல்ல எல்லாரும்தான் இதைப் பற்றி எழுதிவிட்டார்களே..

ஒருவனுக்கு தனக்கு இதுதான் சரிவரும் எனத் தெரியவேண்டும்.

அதைவிட்டுவிட்டு தல யின் படத்திலை பாதி
காலின் படத்திலை பாதி என்று ஒரே சொதப்பல்.

அண்ணா பழையபடி வாளோ அருவாவோ தூக்குங்கண்ணா..


யாருப்பா இப்ப அந்த அருவா வைச்சிருக்கிறது..முந்தி பாண்டியன் கொண்டுதிரிந்தார்.பிறகு நெப்போலியன் இப்போ யாரிடம் அருவா?

வேலுவிடமா பொல்லாதவனிடமா?

சரி இனி முக்கியமான விடயத்திற்கு வருகிறேன்.

படம் பார்த்த அரைவாசியில் படம் பார்த்தபடியே தூங்கிவிட்டேன்.அரைவாசி படம் பார்த்து அதைப்பற்றி விமர்சனம் எழுதும் ஆள் நானாகத்தானிருப்பேன்.

படத்தில் விஜயுடன் ஜோடியாக வருவது அசின் இல்லையாம் அது ஸ்ரேயாவாம் இன்று காலை நண்பன் ஒருவன்
கூறியது.

அப்போ அது அசின் இல்லையா?

Read More...

Monday, November 12, 2007

சோதனைக்கு புலிகள் தேவை(தமிழ்ப்புலிகள்)




பிரபல வல்லரசு நாடொன்றின் அரசியல் ஆய்வுப்பணியின் ஆய்வு நிமித்தமாக சோதனைக்கு புலிகள் தேவைப்படுகிறார்கள்


அதுவும் வேட்டி கட்டிய தமிழக தமிழ்ப்புலிகள்


பின்வரும் தகமைகளை நீங்கள் கொண்டிருந்தால் உடனடியாக விண்ணப்பிக்கவும்.


ஆயுட்கால அரசியல் வாழ்வு சேமப்பத்திரம் இறுதியில் கையளிக்கப்படும்.


தகுதி கல்வி நிலை:-


ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விரிவுரையாளராக இருப்பது விரும்பத்தக்கது.


அந்த தகுதி இல்லையாயினும் ஏதாவது ஒரு

பத்திரிகையை தமிழில் அரசியல் நையாண்டி என்று சொல்லி நடாத்தி கொண்டிருப்பவராக இருத்தல் வேண்டும்.


அல்லது முன்னாள் வாராந்தப்பத்திரிகை ஆசிரியராகவாவது இருந்திருத்தல் வேண்டும்.


இந்த தகைமைகள் எதுவுமே இல்லாத பட்சத்தில் காங்கிரஸ் கடசியில் தொண்டராகவோ அல்லது தலைவராகவோ இருக்கவேண்டும்.


யாவும் பொருந்தாத பட்சத்தில் ஆதித்தமிழர் கோட்டா முறையில் பரிந்துரை செய்யப்பட்ட விதிவிலக்காக இந்திய பிரதமருக்கோ அல்லது இந்தியப்பிரதமரை நிர்ணயிக்கும் அம்மையாருக்கோ பதிலை எதிர்பார்க்காமல்

ஈழத்தமிழருக்கு இந்தியா ஆயுத உதவி செய்யாதே என கடிதமாவது எழுதியிருக்கவேண்டும். (கவிதைகள் இங்கு கணக்கில் எடுத்துகொள்ளப்படமாட்டா)


லங்கா ரத்னா பட்டம் பெற்றிருந்தால் தேர்வு இல்லாமல் தெரிவு செய்யப்படுவீர்கள்.


கல்லக்குடி போராட்டத்தில் கதாநாயகனாக நீங்கள் கலந்துகொண்டிருந்தால்

அதை மறந்துவிட்டிருத்தல் வேண்டும்.



உங்கள் விண்ணப்பத்திற்கான முடிவு திகதி


தமிழீழ பிரகடனத்திற்கு முன்னர்



விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி


தீவு தமிழ்மணம்.டொட் காம்


முகவரி அடிக்கடி மாறும் விண்ணப்பதாரர்கள் கவனத்திலெடுக்கவும்.



லேபிள்:- டால்மியாபுரம் வைகோ கலைஞர் சுப்பிரமணியசுவாமி துக்ளக் காங்கிரஸ்








Read More...

காங்கிரஸுக்கு சாபமிட்டவர் யார்?ஒரு திடுக் தகவல்!

பாரம்பரியமிக்க காங்கிரஸுக்கு என்ன ஆயிற்று.தெலுஙுகு பட காட்சிகள் போல கத்தியால் குத்து சரமாரியாக வெட்டு .ஓட ஒட விர்ட்டு போன்று பல சரமாரியான காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.

மூத்த பதிவர் ஒருவரின் கருத்துபடி காங்கிரசுக்கு எதிர்கட்சியினர் சூனியம் வைத்துவிட்டார்கள் என்றார்.

இன்னொரு மூத்தபதிவர்(இவர் ஏற்கனவே அன்டார்டிகாவில் பின்குயீன் நடக்கும் என்ற யாகவா முனிவரின் விதியை நிரூபித்தவர்.) இதுபற்றி கருத்து தெரிவிக்கையில் இது காங்கிரஸார் அவர்களுக்கு தாங்களே சொந்த செலவில் வைத்த சூனியம் என பட ஆதாரத்துடன் காண்பித்தார்.

இதோ அந்த படம்.


காங்கிரஸார் தமக்குதானே சூனியம் செய்யும் படம்


ஆனால் எனது தோழியொருவரை இது பற்றி கருத்து கேட்டபோது சூனியம் போன்றவற்றை மறுத்து இது காங்கிரஸுக்கு யாரொ ஒருவர் சாபமிட்டிருக்கிரார் போலிருக்கிற்து.அதுதான்
இப்படி தொடர்ச்சியாக சம்பவங்கள் நடைபெறுகின்றன என்றார்.

தோழர் மாசிலாவிடம் ஒரு கேள்வி நீங்கள் எதாவது காமராஜர் வளர்த்தெடுத்த காங்கிரஸின் இன்றைய நிலை கண்டு சாபமிட்டீர்களா??:)


லேபிள்:-வாழப்பாடி மூப்பனார் காங்கிரஸ் ஈழத்தமிழர்



தமிழுக்கு தீவின் அஞ்சலி


Read More...

Sunday, October 28, 2007

இவிகள நான் ஏன் கக் பண்ணினேன்?



இட்லியார் தமிழச்சி வலைப்பதிவுகளை கக் பண்ணியது ஏன்?


இருவரும் வேறுவேறு குறூப்
ஒருவரு பூணூலு
மற்றவரு பாம்ப விட்டுடு பூணூல அடி என்பவர் கட்சி.

ஆனால் ரெண்டு பேருக்கும் ஒரே நாளில் ஆப்பு.


இங்கதான் கக்கன்(இது காங்கிரஸ் கக்கன் அல்ல) நிக்கிறான்.

நம்ம மக்கள்ஸ் தெளிவு அம்பேல்.


ஆனால் இவிகள நான் ஏன் கக் பண்ணினேன்? அப்டீன்னு அவன் கக்கன் வந்து சொல்லவா போறான்?


இந்த இடத்திலைதான் தீவு தெளிவாயிருந்தான்.

ரெண்டுபேருமே கூத்து பட்டறைக்கோஷ்டி நன்னாவே நாடகம் போடுறாங்க
என்று இந்த நிமிஷம் வரையும் நெனைச்சிருந்தான் அந்த மெயில் வரும் வரை


இதுதான் தீவுக்கு மிரட்டி வந்த அந்த மெயில்


திருவாளர் தீவு சாரே

நாளை உமது தளம் எனது ஆட்சியின் கீழ் வரப்போகிறது.

என்ன பண்ணனுமோ பண்ணிக்க.

இட்லியாருக்கும் தமிழச்சிக்கும் நடந்ததை வலையுலகமே அறியும்.
டீடெல்ஸ் அவங்களையே கேட்டுக்க

அந்த லிஸ்டில் அடுத்தது நீ.


வலைப்பதிவில் சீரியஸ் என்று சொல்லி மொக்கை போடுபவர்களே
எனது இலக்கு.


முடிந்தால் உனது தளத்தை காப்பாற்றி கொள்.


ஆர்குட் ஆர்பாட்



என்ன செய்ய நண்பர்களே?..


எனது மின்னஞ்சல் பாதுகாபபுக்கான எந்த சீக்ரட் கேள்வியை மாற்றி வைக்க?
அவன் எல்லாவற்றையும் மாற்றுவானாமே..

இதுவரை எனது பதிவில் அதிக பின்னூட்டங்களை இட்டது யார் என்ற எனது சீக்ரட் கேள்விக்கு நான்தான் என ஆன்சர் போட்டுள்ளேன்.

ஒருவேளை அதையும் கண்டுபிடித்துவிடுவானோ?

யார் என்ன செய்தாலும் தளத்தை விட்டு ஓடிப்போவதில்லை என முடிவு செய்துள்ளேன்

திரும்ப காக் பண்ணி எனது தளத்தை மீட்டெடுப்பேன்

எனது தளத்தை நான் திரும்ப மீட்டெடுத்தேன் என எவ்வாறு என்னை மீண்டும் அடையாளம் காண்பீர்கள்?

அவனா நானா எப்படி கண்டுபிடிப்பது?

இப்பொழுதே சில அடையாளங்களை முன்னெச்சரிக்கையாக கூறுகிறேன்.



எனது மவுஸ் படத்தில் நாமம் பொட்டுக்கு பதிலாக பூனை படம் போட்டிருக்கும்

துக்ளக் படத்திற்கு பதிலாக பக் பக் என பயத்துடன் அடிக்கும் ஒரு இதயத்தின் படம் போட்டிருப்பேன்


ஒரு வீடியோ பதிவு போட்டு எழுதி வாசிப்பேன்

அடிக்கடி காணாமல் போய்விட்டதாக எனது வக்கீல் மூலமாக அறிக்கை விடுவேன்.அதே நேரம் எனது தளத்திலும் பதிவு ஒட்டுவேன்


இவை தவிர எனது பின்னூட்டத்தை தமிழ்ப்பித்தன் தூக்கினால் கண்டிப்பாக அது நான்தான்


எனவே வலை மக்கள் தெளிவாக இருக்கவும்


போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்.




மீண்டு வருவேன்.

லேபிள்-கக் ,விடுதலைப்புலிகள் ,அவதுரு, ஆர்குட் ,இஸ்குட் ,அபிஷேகம்


நைவேத்யம் ,பூஜை, மாசிலா காக்க







தீவு
"எதுக்கும் பயப்படமாட்டான்

காலிருக்கும்வரை"

Read More...