Friday, March 28, 2008

தமிழ்மணத்தில் உள்ளவங்க யாரு யாரு கையை தூக்குங்க பிள்ளைங்களா?



யார் யாரெல்லாம் தமிழ்மணத்தில் இருக்கிறார்கள்?யார் யாரெல்லாம் இல்லை என்று வைத்தீஸ்வரன் கோவிலில் ஒரு காண்டம் பார்த்து யாராவது சொன்னால் நன்றியுடையவனாக இருப்பேன்.

இருக்கிறார்களா இல்லையா என்பது கூட தெரியாமல் பின்னூட்டத்திலெல்லாம் போய் புரட்சிக் கவிதை பாட முடியவில்லை.

இல்லை என்பவரின் பதிவுகள் தமிழ்மணத்தில் தெரிகிறது.

ஒரு சிலர் தூக்கப்படவில்லை அவராக விலகிவிட்டார் என்கிறார்கள்?.என்னய்யா நடக்குது?

யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன..நான் தமிழ்மணத்தில் இருக்கிறேனா? இல்லையா என்பதுதான் பிரச்சனை .அதை பரிசோதித்து பார்க்க
வே இந்தப் பதிவு .

label :-testing பதிவு 1 testing பதிவு 2 testing பதிவு 3

Read More...

Friday, March 21, 2008

பிள்ளையள் தமிழிலை கதையுங்கோ

முந்தி காசி எண்டொருத்தர் தமிழ்மணத்தை நடாத்தியவர்.அவற்றை ஆட்சியிலை ஒரு சட்டம் இருந்தது அதாவது தமிழில் எழுதினால்தான் தமிழ்மணத்திலை திரட்டப்படும் என்று..இப்ப கலிகாலம் எல்லாம் மாறிட்டுது.


இந்தப் பதிவை நானும் நானூறு தடவை படித்துப்பார்த்தேன்.

மூளையை கசக்கியதுதான் மிச்சம்.

இவங்களை தமிழ்மணம் எப்படி திரட்டுகிறது?

என்னெல்லாம் பேசுறாங்க..சும்மா விளையாட்டுப்பிள்ளைத்தனமாவெல்லா இருக்கு..

அட எழுதினவந்தா அப்டீன்னா பின்னூட்டினவங்க அது அதை விட புனிதமுங்க..

தமிழச்சி பதிவெல்லாம் இவிங்க படிக்கமாட்டாங்களா?

பிள்ளையள் தமிழிலை கதையுங்கோ..என்ன எழுதினாலும் நாலு பேருக்கு புரியம்படி எழுதுங்க ராசாமாரே.



label:-சூடான இடுகையை தூக்கிய தமிழ் மணத்திற்கு எம் கண்டனத்தை தெரிவிப்போம்.

Read More...

Thursday, March 13, 2008

அட விடுங்கப்பா கவித்தொல்லை தாங்க முடியலே





இவங்க தொல்லை தாங்க முடியாது தூக்கில தொங்கவும் பயமாயிருக்கு.அப்பவும் வந்து கவுத கவுஜ பாடிடுவாங்க..என்ன செய்வது?
முள்ள முள்ளாலதானே எடுக்கணும்.அதான் நானும்
பாடிடலாம் என முடிவு.கவி விளங்காதவர்களுக்கு உண்மைத்தமிழன் சிறுகக்கூறி புரியவைப்பார்.

முந்தியும் ஒரு கவிதை யாதும் ஊரே யாவரும் கேளிர் என எழுதினேன்.அது ஏற்கனவே யாரோ
எனக்கு முந்தி எழுதிப்போட்டார்களாம்.

அதனாலே

இனி புதுக்கவிதை அதாவது புதியகவிதை.

சட்டி சுட்டதடா கை விட்டதடா
கூந்தல் கறுப்பு குங்குமம் சிவப்பு


பி கு இனி யாராவது கவுத மழை பனி அப்டீன்னு ஆரம்பிச்சால் இது போன்று கவிதை
ஆறாய் கொட்டும் என எச்சரிக்கிறேன்.



லேபிள்:-தீதும் நன்றும் பிறர் தர வாரா

Read More...

Wednesday, March 12, 2008

என்னது நல்லதம்பியை அரெஸ்ட் பண்ணிட்டாங்களா?



பொதுவாக இந்தாள் லேசிலை மாட்டுப்படமாட்டார்.எவ்வாறு கைதானார்?யாரும் போட்டுகொடுத்துட்டாங்களோ?செய்தி கேட்டதில் இருந்து மனநிலை குழப்பமாக இருந்தது.யாராக இருக்கும்?செய்தி எவ்வாறு பொலிசிற்கு கசிந்தது?


இந்த சீரியல்கள் பொதுவாக நான் பார்ப்பதில்லை.ஆனால் ராதிகாவை பிடிக்கும் என்பதால் அண்ணாமலையில் ஆரம்பித்து இப்போது அரசிவரை வந்தாயிற்று.

ராதிகாவின் தொடர்களில் அழுகை சற்று குறைவாக இருக்கும்.சற்று விறுவிறுப்பாகவும் நகரும்.அண்ணாமலையும் அப்படித்தான் நகர்ந்தது.

மிக ஆர்வமாக இந்த அரசி தொடர் தினசரி இணையத்தில் பார்ததுக்கொண்டு வந்தேன்.அப்போதுதான் கலைக்கு தலையில் அடிபட்டு கலைக்கு விசர் பிடித்தது.கலைக்கு விசர் பிடிக்க எனக்கு பைத்தியம் பிடிக்காகுறையாகிட்டது.

என்னடா சீரியலிது..என்று பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.

பலகாலத்திற்கு பிறகு அன்று ஒரு நண்பர்வீட்டில் வலுகட்டாயமாக அரசி பார்க்கவேண்டி வந்தது.

அதில் நல்லதம்பியை பொலிஸ் பிடித்துவிட்டதாக ஜிஜே சொல்லுவார்.

அப்போது நண்பனை பார்த்து நான் கேட்ட கேள்வியே இப்பதிவின் தலைப்பு.:)


என்னது நல்லதம்பியை அரெஸ்ட் பண்ணிட்டாங்களா?

கடவுளே இன்னும் என்ன என்னவெல்லாம் நடக்கப்போகுதோ?

கலிகாலம்.

உபரித்தகவல்:- நல்லதம்பியாக நடிப்பவர் பஞ்சுஅருணாசலத்தின் மகனாம்.சின்னத்தம்பியாக நடிப்பவர் இயக்குனர் சமுத்திரகனியாம்.

Lebel :-என்னது காந்தியை சுட்டுட்டாங்களா?

Read More...