Friday, January 27, 2006

இதெல்லாம் 2 too much

காசி ஆடுன்னா ஆடவும் பாடுன்னா பாடவும் உக்காந்திரின்னா உக்காரவும் எழுந்திரின்னா எழுந்திரிக்கவும் இதென்னா தமிழ்மணமா?

அல்லது புளொக்கர் சேர்விசா? இப்படி எனக்கும் ஒரு சந்தேகம் இருந்ததுதான்..

ஆனால் தமிழ் மணத்தின் சேவை அவசியமானதாக இருந்தமையினால்,
தமிழ் மண வாசல் கதவை தட்ட ஆயுத்தமாகும்போது ஆடவும பாடவும் சொல்லும்போது தயார் என்பதை எழுதிக் கொடுத்திருந்தேன்.

பிடிக்காத பட்சத்தில் எந்தநேரத்திலும் கால வரையின்றி நான் வெளியேறிக்கொள்ள உரிமையும் எடுத்திருந்தேன்.

எனவே எனக்கு இந்த அடிக்கடி புதுப்பிக்கப்படும்
கொள்கை மாற்றங்கள் பெரிதாக பாதிப்பெதனையும் ஏற்படுத்தவில்லை.

ஆனால் ஒரு சில வலைப்பதிவாளர்களின் வலைப்பதிவுகள் மட்டுப்படுத்தப்பட்டபோது
மட்டும் மனம் சற்று சங்கடப்பட்டது.

அதற்காக வெளியேறி முரண்பாட்டை கூட்டம் கூட்டிசொல்ல தயாராகவில்லை.

இணையத்தின் சாத்தியம், பலம் பலவீனம் அவர்களுக்கு தெரியாததா?

அதன் விளைவு ரெக்னோர்டி வந்தது தேன்கூடு வந்தது.

ஆனாலும்

இணையத்தில் தமிழ் மணத்திற்கு ஈடாக தற்போதைக்கு இன்னொரு தமிழ் வலைப்பதிவுகள் திரட்டி வரவில்லை.

ஓரளவிற்கு தேன்கூடு தமிழ் மணத்தோடு முரண் படுபவர்களுக்கு மாற்று தளமாக அதை ஈடு செய்ய முனைகிறது.

நாளை தமிழ் மணம்போல் சட்டதிட்டங்கள் போட்டு தேன் கூடும் மாறும் பட்சத்தில் இன்னொருதளமாக இன்னொரு கூடுகூட உருவாகலாம்.எதுவும் இணையத்தில் நிரந்தரமுமில்லை. போட்டியில்லாமலுமில்லை.

இதேபோல் காசி தரும் அதே பட்டையை போட்டு பட்டையை கிளப்பலாம்.

நிற்க.

எந்தளவிற்கு தமிழ் மணத்தின் விளக்கணைக்கும் செயல்பாட்டுடன் இணக்கமில்லையோ அதை விட பல்மடங்கு இந்த டாய்லெட் சுவர் கிறுக்கிகளின் செயற்பாட்டிலும் எனக்கு உடன்பாடில்லை.

இது பற்றி ஏற்கனவே திருமதி உஷா இராமச்சந்திரன் வலைப்பதிவே வேண்டாம் என்று கருத்து தெரிவித்தபோது ஒரு பதிவு(முற்றுப்புள்ளி பிழை )போட்டுள்ளேன்.

மாற்று கருத்துக்களை முகமூடி போட்டு சொல்லலாம் தவறில்லை.

டேய் காசி என்றோ டேய் டோண்டு என்று கூட அழைக்கலாம் ..

ஆனால் அநோமதேயம் என்ற பெயரில் குடும்ப அங்கத்தவர்களை இழுப்பது எந்த வகையில் நியாயம்?

மாற்றுக்கருத்துக்கு அல்லது தங்கள் வாதத்திற்கு பலம் இல்லாதபோதே
இப்படியான வாதங்களை முன்வைக்கவேண்டி வருகிறது.

எனவே அநோமதேயங்கள் அடுத்தடுத்த பின்னூட்டங்களில் இதை கவனித்து வாதங்களை மட்டும் முன்வைக்க.

அந்த விதத்தில் தமிழ் மண நிர்வாகி(கள்) சொல்வது போல் எனது பின்னூட்டத்திலும் மட்டுப்படுத்தப்பட்ட பின்னூட்ட வசதியையே அனுமதித்துள்ளேன்.

நிற்க இது வேறு

வலைப்பதிவன் பின்னூட்டத்தில் திரு ப்ரகாஷ், குறித்த பின்னூட்டத்தின் பகுதியொன்று..

//இந்த சிக்கலை முழுவதுமாக தீர்த்துக் கட்ட, சில நண்பர்களின் உதவியுடன், தமிழகக் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவின் உதவி ஆய்வாளரிடம் முறையாகப் புகார் செய்யப்பட்டு, அது சிபிசிஐடியின் டிஐஜி ராங்கில் இருக்கும் பெண் காவல்துறை அதிகாரியிடம் ரெ·பர் செய்யப்பட்டுள்ளது. கமிஷனர் அலுவலகத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, ஒரு பத்திரிக்கை நிருபர் வந்து வேவு பார்த்தார். மொத்த விஷயத்தையும் ஜூவி மாதிரி பத்திரிக்கையிடம் சொல்லி, எக்ஸ்போஸ் செய்தால் என்ன என்று கூட யோசனை வந்தது. நாட் நௌ என்று உபதேசம் கிடைத்தது. காவல் துறை நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது.//


இதெல்லாம் சற்று ஓவர் .

வலைப்பதிவு முயற்சிகளை முறியடிக்கும் முயற்சியிது.

தாம் கண்காணிக்கப்படுகிறோம் என்ற உணர்வோடுதான் இனி ஒவ்வொரு வலைப்பதிவனும் வலைப்பதிவிடவேண்டும்.

என்னமோ போங்க சார்..

Read More...

அவர்கள் போகும்போது
















ஏன்
எதற்கு
எங்கே
எதுவும் தெரியாதுஉனக்கு.

வழமைபோல்
உலகம் காத்திருக்கும்
ஒரு வேளையில்

அவர்கள் வருவார்கள்

கைகளும்
கண்களும்

தாய்
தங்கை
பந்தம்
பாசம்
உணர்வு
யாவும்
உனது போலவே
அவர்களுடையதும்

எனினும்

அவர்கள் வருவார்கள்

அவர்கள் போகும்போது

உனது இறப்பு
ஊடகங்களுக்கு

நாளைய செய்தி.


100106
-theevu-

Read More...

Sunday, January 08, 2006

சண்டைக்கோழி- கிளம்ப்பிட்டாங்க.

மாட்டிக்கிட்டது நம்ம எஸ்.ராமகிருஸ்ணன்.துப்பட்டவாவை வீசி பெண் கவிஞர் ஆர்ப்பாட்டம்!
என்னடா ஏதோ எக்கச்சக்கவிவகாரம் போல என்று பத்திரிகையை புரட்டிப்பார்த்தால் ஓன்றுமே புதிதாக தெரியவில்லை.
பிரபஞ்சன் பெண் கவிஞருக்கு வக்காலத்து வேறு..

படத்தை பார்த்தவன் என்ற முறையில் எதுவுமே தவறாகத்தெரியவில்லை..
இதுக்கெல்லாம் ஒரு ஆர்ப்பாட்டம்...ஒரு பரபரப்பு ..விளம்பரம்...

என்னதான் நடந்தது ?
http://epaper.tamilmurasu.in/2006/jan/08/default.htm






இதுதான் அந்த பிரச்சனைக்குரிய வசனம்



மேலதிக விபரத்திற்கு

Read More...

Friday, December 23, 2005

திலகவதிக்கு சாகித்ய அகாடமி விருது

தமிழக காவல்துறையின் கூடுதல் டிஜிபி திலகவதிக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.
மாநில அளவில் தலை சிறந்த எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய சாகித்ய அகாடமி விருது வழங்கி கௌரவித்து வருகிறது. சாகித்ய அகாடமி விருது வழங்கும் கமிட்டியின் கூட்டம் கோவாவில் நடந்தது. இதில் விருது பெறுவோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் தமிழில் சிறந்த எழுத்தாளருக்கான சாகித்ய அகாடமி விருது திலகவதிக்குக் கிடைத்துள்ளது. அவர் எழுதிய கல்மரம் என்ற நிõவலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த நாவலை அவர் கடந்த 2001ம் ஆண்டு எழுதியிருந்தார்.
ரூ. 50,000 ரொக்கம், பாராட்டுப் பட்டயம் ஆகியவை அடங்கியது சாகித்ய அகாடமி விருது. விருது கிடைத்திருப்பது குறித்து திலகவதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

thatstamilcom

Read More...