Saturday, October 06, 2007

வாழ்க யோகன் பாரிஸ் எனும் இணையப் பதிவர்.



கார் எல்லாம் என்ன கார் பாரோயோ தேரழகை என்று என்னப்பன் மாணிக்கவிநாயகன் பவனிவரும் அழகை தனது காமிராக்கண்ணால் அளந்து

தரணியெல்லாம் வாழும் உலகத்தமிழரும் கண்டு பக்தி பரவசம் அடைந்து அவர்கள் நினைத்தது எல்லாம் ஈடேற வழி செய்துள்ளார்.



இன்றுதான் இவரது இந்த அரிய பதிவை பார்த்தேன்.பெரியாருக்கு கூட இந்தப்பதிவு பிடிக்காதுதான்


.அதற்காக நமது நம்பிக்கையை விட்டுவிடமுடியுமா என்ன ?


நன்றி யோகன் பாரிஸ் அவர்களே..அடுத்த வருடமும் உங்கள் சேவையை எதிர்பார்க்கிறோம்.



லேபிள்:- புதுச்சேரி கச்சேரி அரோகரா

Posted by இணையப்பொறுக்கி தீவு

Read More...

Thursday, September 20, 2007

தம்பிபாலபாரதிக்கு

அண்ணன் யாழ்வாணனுக்கு,அஞ்ஞாவாசம் சென்று களம்திரும்பிய பெயரிலிக்கு,மாலனுக்கு மனம்திறந்த மடல,் லாக் பண்ணியமடல் என்று கடிதங்களாக வலப்பதிவில் உலாவரும் வேளையில் நானும் என்பங்குக்கு பாலபாரதிக்கு எழுதும் மடல்.

தனது பதிவில் பாலபாரதி கேட்டிருந்தார் தனக்கு ஏர்ல் போவது என்றால் என்னவென்று தெரியவில்லை என..

புதிதாக சேருமிடங்களில் இந்தப்பிரச்சனை வருவதுண்டு

அண்ணனின் ஆலோசனை

சீனியர்களாயிருந்தால் முழுசாகவும் இடையிடையே ப்ரீலென்சர் போலிருந்தால் அரைவாசியாகவும்
புதிதாய் பழகுபவராயிருந்தால் ஒரு பெக் அடித்தாலும் ஏர்ல் போகலாம்.

எனவே கடிதம் எழுதுங்கள்

லேபிள்- மஞ்சக்கா மாலன் ,பெரியார,கொழுவி ,அப்துல்கலாம்

Read More...

Monday, September 17, 2007

தமிழ்பித்தா! ..பெருமானே எனக்கருள்வாய்

இந்த இடத்தில் எனது கவர்ச்சிப் படமொன்று.
திருவாசகம் பற்றிய பதிவு போட்டாலும் எனது படமொன்றை போட்டு பதிவு எழுதுவதே இப்பொழுது
நாகரீகம்..

வேறு யாருக்கும் படம் தேவையானாலும் மின்னஞ்சல் இடுக..படம் அனுப்பி வைக்கிறேன்.போட்டு சூடான இடுகை இடுக.

பி.கு .இந்த படம் உங்களது இணைய காட்டியில் தெரியவில்லையாயின் அது
எனது தவறல்ல.உங்கள் இணைய வழங்குனருடன் முறைக்கவும்.


இனி விடயத்திற்கு வருகிறேன்.

இந்த கோளாறு பித்தனை தமிழ்மணம் தூக்குமா தூக்காதா என ஞானசம்பந்தனிலிருந்து லியோனிவரைக்கும் பட்டிமன்றம் நடாத்திகொண்டிருக்கையில் தூக்காது எனத்தான் நானும் நினைத்துக்கொண்டிருந்தேன்

ஏனெனில்

இந்த அப்பாவி வலிந்து எந்த பிடிகொடுக்கும் பதிவுகளையும் எழுதவில்லை.

இப்படியிருக்குமோ அப்படியிருக்குமோ அல்லது "ஒரு முறையாவது சகீராவுடன்" போன்ற லக்கிலுக்கின் பதிவுபோல ஆபாசமில்லாமல் இருக்குமோ என பல பதிவர்கள் சந்தேகத்துடன் பார்ப்பதுபோல இருந்ததே தவிர இதுதான் இது என கூறமுடியாமலிருந்தது.

இதனால்தான் தமிழ்மணம் இந்தப் பதிவை தூக்குவது சிரமமாக இருக்கும் என நினைத்தேன்.

ஏனெனில் ஒரு பதிவு தரமில்லாவிடின் அது பதிவர் விடயம்.

ஆனால் அதை தூக்குவதற்கு தமிழ்மணத்திற்கு உரிமை இருந்தாலும் வலைப்பதிவு என்ற இலக்கணத்திற்கு அது முரணானதாக இருந்திருக்கும்.

ஆனாலும் விதியாகப்பட்டது வலியது. அது பித்தனுக்கு வேறு ரூபத்தில் வந்தது.

கெளரவம் படத்தில் சுந்தராஜன் எப்போதோ செய்த தவறுக்கு பின்னர் தவறு
செய்யாதபோது தண்டிக்கப்படுவதுபோல இந்த பித்தன் தனது பின்னூட்டப்பெட்டியை அகலத்திறந்துவிட்டு மாட்டிக்கொண்டார்.

காலை மதியம் முழுக்க இந்தப்புண்ணியவான் பக்கத்தில்தான் ஆணி புடுங்குதலையும் விட்டு பார்த்துக்கொண்டிருந்தேன்.

பின்னூட்டமிடும் பெரும் கைகளை பார்க்கும்போதுதான் நாட்டில் பித்தனுக்கு
பித்தர்கள் நிறையவே தமிழ்மணத்தில் இருப்பது தெரிந்தது.

செந்தமிழ் நாத்தமிழ் எல்லாமே ஜெகஜோதியாக பித்தர் மட்டுறுத்தலின்றி
காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

அப்போதே நினைத்துக்கொண்டேன்.

பித்தருக்கும் தமிழ்மணத்திற்கும் ஆப்பு ரெடியாகிக்காண்டிருக்கிறது என..


பித்தருக்கு ஆப்பு ஒகே.

ஆனால் தமிழ் மணத்திற்கு ஆப்பு ???

பித்தர் தமிழ்மணம் தூக்கியபின் "போய்வருகிறேன்" என ஒரு பதிவு போட்டிருக்கிறார்.

போகிறேன் எனப் போடவில்லை.போய் வருகிறேன் எனப்போட்டுள்ளார்.

எனவே வருவார்..இந்தப் பதிவு நான் எழுதிக்காண்டிருக்கும்போது வேறு பதிவில் வந்துள்ளார்.

எனவே இவரை கழுவுவது கஸ்டம்.


பி.கு வடமராட்சி கிருமியள் லேசிலை அழியாது.வல்லையிலை சைக்கிள் வலிச்சதுகள் லேசிலை போறன் எண்டு சொல்லாதுகள்.


இனி தமிழ் மணத்திற்கு


நீங்கள் நினைச்சால் சிகரட்டை பழகு எண்டுவியள் .பிறகு சிகரட் கூடாது விடு எண்டுவியள்.

உடனை விட்டுவிடணுமா?

சுடு பதிவை

ஒரு முன்னறிவித்தலுமில்லாது தூக்கி அங்காலை கடாசியிருக்கிறியள்.

இனி சுடு இடுகை பார்ப்பதென்றால் கோயம்பேடு போய் பஸ் பிடித்துதான் போய் பார்க்கவேண்டும்.

கண்ணுக்கு முன்னால் உள்ளபொருட்களையே தேடித்தான் நாம் எடுப்பவர்கள். சும்மா ஓசை செல்லா ஒரு க்ளிக் தூரமென்றால் சரியா?:)

எனவே பழையபடி சுடு இடுகையை முன்னுக்கு கொண்டுவரவேண்டும்.

செல்லாவை தவிர வேறு ஒருவரும் இதுபற்றி எழுதவில்லை.எதிர்ப்பை காட்டவில்லை.

ஒரு சர்வே போடலாமென்றால் அந்தாள் வேறு குழப்பிப்போட்டு நிக்குது.பேசாமல் இன்னொருவனுக்கு மூக்கில் இடிக்கிறது என்று சொன்னபோது அந்தாள் பதிவை தூக்கி தள்ளி நிண்டிருக்கலாம்தானே..என்ன செய்வது

எல்லாம் அடம் பிடிக்கும் குழந்தைகளாக இருக்கிறது

கள்ளா வா புலியை குத்து


லேபிள்:- பெரியார், சர்வே, பொட்டீகடை. சகீலா, துப்பறியும் சாம்பு,மாணிக்கவிநாயகர்

Read More...

Thursday, September 06, 2007

தமிழச்சி புகைப்படங்கள் ஒரு பார்வை

எல்லோரும் போனாப்போல நானும் போனேன் சாமிமலை என்பது போல் இந்தப் பதிவை போடவேண்டிய கட்டாயுத்துக்குள்ளாகியள்ளேன்.பாரிஸ் மாணிக்கவிநாயகர் என்னை மன்னிக்கட்டும்.





















திராவிடத்தோழர்களுக்காக..அந்த நாள் ஞாபகம் imagesofceylon இணையத் தளத்திலிருநது ஒரு சில புகைப்படங்கள்.பல அரிய புகைப்படங்கள் இந்த தளத்தில் உள்ளது.சுடுவோர் சுட்டு பாதுகாக்கவும்.


























Read More...