Friday, January 25, 2008

ஒரு(ங்) குறிப்பதிவு அல்லது வீக்கென்ட் ஜொள்ளு!!









இந்த வார வீகென்ட் ஜொள்ளுப்படம்

தமிழ்மணத்தில் இபபொழுதெல்லாம் குறி பற்றியோ அல்லது முலைபற்றியோ ஒரு வரியாவது எழுத வேண்டியுள்ளது.

எனவே நானும் சாமி மலைக்கு மலையேறியுள்ளேன்.
புகைப்படம்:- ஆதிவாசியும் அதிசயப்பேசியும் நடிகர் செந்தில்

இது ஒரு ஒருங்குறிப் பதிவு(யூனிகோட்).
லேபிள்:- பின் னவீனத்துவ சிக்கல்
பதிவு :-குறி தவறிய தீவு

Read More...

Friday, January 04, 2008

புத்தாண்டு வாழ்த்து!! உதவி தேவை

அகர்வால்களுக்கும், தண்டியாலாகளுக்கும் திராவிடக்குஞ்சுகளுக்கும் புரியக்கூடிய விதத்தில் புத்தாண்டு வாழ்த்து ஒன்று பொதுவாக மின்னஞ்சலில் reply to all என்று ஒரு லிஸ்டுக்கு அனுப்பஉள்ளேன்.

அந்த லிஸ்டிலுள்ள அகர்வால்களுக்கும், தண்டியாலாகளுக்கும் எப்படி அனுப்பி புத்தாண்டு வாழ்த்தை புரியவைப்பது?

எனவே பல் மொழியில் அனுப்பவுள்ளேன்.தமிழுக்கு நான் பொறுப்பு .
மற்றையவற்றுக்கு

ஏனைய பதிவர்கள் உ(தை)வினால் நன்றியுடையவனாயிருப்பேன்.


லேபிள் :- முற்பகல் செய்யின், spam, புத்தாண்டுக்கும்மி,யானைககும் அடி சறுக்கும்


இப்படிக்கு


மின் அஞ்சேல்

தீவு

Read More...

Thursday, January 03, 2008

யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுகிறேன்.(ட்ரெயிலர் பதிவு)

எனது இந்த வருட பதிவுகளாக வர இருப்பவை பற்றிய சில ட்ரெயிலர்கள்


முதலாவதாக நொண்டிக்கழுதையும் மண்குதிரையும்

விறுவிறுப்பாக ஆரம்பித்து சப்பென முடியும் சோகக் கதை.சேதாரம் யாருக்குமில்லை என்பதுதான் இந்தப்பதிவின் பலமே


இரண்டாவதாக


காகம் தி(ர)ட்டி மாடு சாகுமா?

தேவர் பிலிம்ஸின் மீள் வருகை.சண்டைகாட்சிகள் நிறைந்தது.டூப் நடிகர்களே
திறம்பட நடிக்கிறார்கள் என்பது கொசுறுச்செய்தி

கடைசிவரை பதிவு வருமா வராதா என துடிக்க வைக்கும் ஜாவாஸ்கிறிப்டின் அற்புத திரைக்கதை.
பார்த்தவர்கள் துடிக்கிறார்கள் பாராதவர்கள் பதைக்கிறார்கள்.

மூன்றாவதாக

யார் எந்தப் பக்கம்??

யார் யாருக்கு ஆதரவு ?

இறுதிவரை சஸ்பென்ஸ் இவர் அவருக்கா இல்லை அவர் இவருக்கா?

வாசகர்கள் அலுவலக சீட்டின் இருக்கையை விட்டு எழும்பும் வண்ணம் திரைக்கதை மிக குழப்பமாக நகர்கிறது.
இவர் அந்தக்குஞ்சுகள் பக்கமா இல்லை இந்த குடுமிகள் பக்கமா?பதிவின் இறுதியில் சிபிஐ இந்த மர்மத்தை மெதுவாக முடிச்சவிழ்க்கிறார்கள்.எதிர்பாரா திருப்பம்!!!

நான்காவதாக

தரமான பதிவு

பலரின் உள்ளத்தை கொள்ளை கொள்வதற்காக தீவு அவர்களால் பல நாள் எண்ணத்தில் உருவான வடிவமைக்கப்பட்ட ஒரு பதிவே தரமான பதிவு .

தரமாக ஒரு பதிவு போட்டாயா என கேட்பவர்களின் வாயடைப்பதற்காக தீவு அவர்களால் எழுதப்படும் ஒரு
மொக்க பதிவின் தலைப்பே தரமான பதிவு.(காப்பி ரீ றைட் றிசேவ்ட்)

நாளைய வரலாற்று பரிசுக்கேள்வி

தரமான பதிவு எழுதியவர் யார்?

தீவு



லேபிள்:-1000 பதிவு தாங்கிய அபூர்வ சிந்தாமணி

Read More...

Monday, December 10, 2007

பட்டறை போதுமப்பூ

தமிழ்மணம் பார்க்க தொடங்கியதிலிருந்து அவனவன் இப்பொழுதெல்லாம் வலியம் குளுசையுடன்தான் காலத்தை கழிக்கிறான்.



காலத்தால காலக்கடன் முடிக்கிறமோ இல்லையோ கம்பூட்டர் மட்டும் போட்டுவிடுகிறோம்.



அதில் இந்த புளொக் சங்கதி மட்டும் படுக்கபோகும் வரைக்கும் கிடந்து ஊடாடுகிறது



ஆணி பிடுங்கப்போனால் அங்கும் இதுதான்.அங்கும் பிடுங்குவது இதுதான்



செம்பும் பொன்னும் ஒக்கன நோககிய நாவுக்கரசன் போல் ஆணியும்

முதல் போணியும் வலைப்பதிவாயிற்று.





பதிவில் எதைப் படிப்பது எதை விடுவது என்று முழி பிதுங்குகிறது.



இப்பொழுது எல்லாம் லாட்டிரி சீட்டு சுவீப் ரிக்கெற் விழுவது போலத்தான்



பதிவர்களின் பதிவை தெரிந்து படிப்பது.



அதைவிட புனிதமான இலட்சணங்களில் ஒன்று அதை படித்துவிட்டு பின்னூட்டுவது.



அதிர்ஷ்டம் இருப்பவர்களின் பதிவுதான் அடிக்கடி பார்க்கப்படுகிறது.



அதுவும் இல்லாவிடில் குயுக்தியாக தலைப்பை பதிவுக்கு சம்மந்தமில்லாமல்

வைத்து எழுதவேண்டியுள்ளது.





இந்த திறத்தில்





இத்தனையாயிரம் போட்டிகளுக்கு மத்தியில்



வலைப்பதிவு பட்டறை அமைத்து வா ராசா வா பதிவு எழுது என அழைப்பு

வேறை



முந்தி எல்லாம் 4 பேர்தான் எழுதிக்கொண்டிருப்பார்கள் விரிவாகப் படித்து

அவருக்கு நானும் எனக்கு அவருமாக பின்னுர்ட்டிக்கொண்டிருந்தோம்



எல்லாமே இந்த வலைப்பதிவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் புண்ணியவான்களாலே போயே போச்சு.



சாம்பூ இலவச காலெண்டர் பேனை மற்றும் இத்யாதி முடிந்தால் தமிழில் நம்பர் வண் குங்குமமும் கலர் ரீவியம் வலை பதிந்தால் கொடுப்பார்கள போலே..



சென்னை பட்டறையிலே டப்பாவில் சாதம் கொடுத்தார்களாம்





இந்தமுறை தலைவாழை இலைபோட்டு புதுவையில் சாதம் படைத்திருக்கிறார்கள்.



என்ன கொடுமை இது..



இப்படி பதிவர்களை மடக்கி லாரியில் கொண்டுவந்து

வலைப்பதிவில் இறக்கினால் என்னைப்போன்ற பதிவர்களை யார் படிப்பார்கள்?





இப்பொழுதுதான் சென்னை முடிந்து அருகிலுள்ள புதுவையில் கால் பதித்துள்ளார்களாம் .இப்படியே விட்டால் உலக தமிழ் வலைப்பதிவர் மகாநாடும் நடாத்தி காட்டிவிடுவார்கள்.



எனவே தன் மானமிக்க தனது பதிவையே மற(்)வர்கள் எல்லோரும்
படிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பட்டறை போட்டு மற்றையோரையும் அழைத்துவரும் செயலுக்கு கண்டனத்தை தெரிவிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.





லேபிள்:- பொட்டிகடை, இகழ்ச்சிப்புகழ்ச்சி, கோல்கொண்டா ஒயின், வஞ்சகப்புகழ்ச்சி, காசிஅண்ணனுக்கு நன்றி, புரவலர்களுக்கு நன்றி, மற்றும் பொன்னவைககோ கோட்சூட்டை மட்டும் கவனித்த தம்பிகளுக்கும்.வினையூக்கி,தல மிஸ்ஸிங் ஏன்? மற்றும்
தமிழ்வெளி பொலிட்டிக


தவிக்க விட்டுட்டியே ராசா..

Read More...