Wednesday, October 10, 2007

ஆதித்தகரிகாலனை கொன்றது யார்?





இதோ உங்களுக்காக ஒரு தகவல். நீங்கள்அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படித்திருக்கிறீர்களா?

படித்திருந்தால் நான் மேலே சொல்லப் போவது உங்களுக்கு நன்றாக புரியும்.

இல்லையென்றாலும் பரவாயில்லை.

இத்தகவல் சுவாரசியமாகவே இருக்கும். இன்றைக்குச் சுமார் ஆயிரத்து நாற்பது வருடங்களுக்கு முன்னால் சுந்தர சோழன் என்ற மன்னன் ஆட்சி புரிந்து கொண்டிருந்தான்.

அவருக்கு மூன்று குழந்தைகள். மூத்தவன் ஆதித்த கரிகாலன், அவன் பட்டத்து இளவரசன்.
அவனுடைய தங்கை குந்தவை, இளையவன் அருமொழி. ஆதித்தகரிகாலன் பாண்டியர்களுக்கு எதிரான போரில் ஈடுபட்டு, வீரபாண்டியன் தலையைக்கொய்து அவனைக் கொன்று விடுகிறான்.

பிறகு சதிகாரர்கள் சிலர் ஆதித்தகரிகாலனைச் சூழ்ச்சியால் கொன்றுவிடுகிறார்கள்.

சுந்தரசோழரின் ஆட்சிக்குப்பிறகு, அவரின் பெரிய தந்தையின் மகனான உத்தம சோழன் ஆட்சிக்கு வருகிறான்.
அதற்கு பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆதித்த கரிகாலனின் தம்பி அருமொழி, இராஜராஜசோழன் என்ற பெயரில் அரியணையில் அமர்கிறான்.

அதாங்க தஞ்சாவூர் பெரிய கோயிலான இராஜராஜீசுவரம் கோயிலைக் கட்டிய இராஜராஜ சோழன்தான்.

இராஜராஜனின் 2ம் ஆட்சியாண்டில், ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த துரோகிகளான ரவிதாஸன், சோமன் சாம்பவன் மற்றும் சிலர், அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது கதையல்ல நிஜம்.

காட்டுமன்னார்கோயில் என்று இன்று வழங்கப்படும் உடையார்குடி என்ற இடத்தில் உள்ள கோயிலின் பின் சுவரில் இந்த விஷயம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

இதில் கவனிக்கவேண்டிய விஷயங்கள் பல உள்ளன.

ஆதித்த கரிகாலன் கொலையுண்ட பிறகு உத்தம சோழனின் ஆட்சி வருகிறது.

அப்பொழுதெல்லாம் கொலையுண்டவர்கள் பிடிபடாமல், 16 வருடங்கள் கழித்து, இராஜராஜன் ஆட்சிக்கு வந்த பிறகுதான் தண்டிக்கப்படுகிறார்கள்.

அதனால், உத்தம சோழனுக்கும் இந்தச் சதியில் பங்கிருக்கலாம் என்ற சந்தேகம் வருகிறது.

கல்வெட்டில் துரோகிகள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கொலை செய்தவர்கள் பாண்டியர்களோ இல்லை சேரர்களோ என்றால் எதிரிகள் என்று தானே வர வேண்டும்? துரோகிகள் என்று யாரைக் குறிப்பிடுவார்கள்?

கூடவேஇருந்து குழி பறிப்பவர்களைத்தானே? இரவிதாஸனும், அவன் கூட்டாளிகளும் சோழ நாட்டிலேயே மிக உயர்ந்த பதவிகளில் இருந்தவர்கள் தான். பொன்னியின் செல்வனில் கல்கி இரவிதாஸன் கூட்டாளிகளை "பாண்டிய ஆபத்துதவிகள்" என்று குறிப்பிட்டது கற்பனை என்றாலும், அப்படிப்பட்ட பெயருடன் இருந்தவர்கள் சோழ நாட்டில் இருந்ததும், அவர்கள் ஆதித்தனைக் கொலை செய்ததும் உண்மை செய்திகளே.

கல்கிக்கும் வரலாற்றிலும், கல்வெட்டுகளிலும் ஆர்வம் இல்லாதிருந்தால், பொன்னியின் செல்வன் போன்றதொரு காவியம் இன்று நமக்குக் கிடைத்திருக்குமா?


வரவணையான் பதிவு பார்த்தபின் அந்தப்பதிவில் உள்ள கரிகாலசோழன் பற்றிய ஆவல் அதிகமாகி
இணையத்தில் தேடியபோது வரலாறு.கொம்மில் மா. இலாவண்யா வால் எழுதப்பட்டதை பகிர்கிறேன்.

18 comments:

theevu said...

படத்தில் இருப்பது இராஜ இராஜ சோழன்

பூனைக்குட்டி said...

http://ta.wikipedia.org/wiki/ஆதித்த கரிகாலன்

எல்லாம் ஒரு சுயவிளம்பரம் தான்.

ரவி said...

சமயம் பார்த்து வரும் சரியான பதிவு...மதன் டவுஸரை அதே வரலாறு.கொம்மில் அவிழ்த்திருப்பார்களே ? அதையும் பதிவுங்களேன் ப்ளீஸ்...!!!

Anonymous said...

ஆதித்ய கரிகாலனை கொன்றது பெரிய பழுவேட்டரையர் என்பவர். இவர் சுந்தர சோழரிடன் ஆளுகைக்குட்பட்ட பழவூரைச் சேர்ந்தவர். இவரே கொலை செய்ததால் துரோகி எனப் பொறிக்கப் பட்டிருக்கலாம்

theevu said...

நன்றி மோகனதாஸ்


விக்கிபீடியா கட்டுரை அசத்துகிறது.
நான் தேடும்போது ஏன் கூகிளில் அகப்படவில்லை எனத்தெரியவில்லை.

ஆர்வமுள்ளவர்கள் இதனையும் படிக்க பரிந்துரைக்கிறேன்.

theevu said...

//Anonymous

ஆதித்ய கரிகாலனை கொன்றது பெரிய பழுவேட்டரையர் என்பவர்.//


அனானி

பழுவேட்டரையர் பற்றி கூறும்போதுதான் கல்கியில் நந்தினி என்றும் ஒரு கதாபாத்திரம் வருவது
ஞாபகத்திற்கு வருகிறது.

Bee'morgan said...

'பொன்னியின் செல்வன்' இதனைப்பற்றி விரிவாக பேசவில்லை. உத்தம சோழர் பதவியேற்புடன் அது முடிவடைகிறது. ஆனால் பாலகுமாரனின் 'உடையார்' அதன் தொடர்ச்சியாக எழுதப்பட்டதே. இது இராஜரஜன் பதவியேற்பிலிருந்து தொடங்குகிறது. இந்நூலின் படி, உத்தமசோழரின் தாய் செம்பியன் மாதேவிக்கு இராஜராஜன் மீது காழ்ப்புணர்ச்சி இருந்ததாகவும் அவரே பாண்டிநாட்டு ஆபத்துதவிகளுக்கு அடைக்கலம் தந்ததாகவும் வருகிறது. எந்த அளவு வரலாற்றைத் தழுவியது என்று தெரியவில்லை.. ஆனால் ஏற்றுக்கொள்ளத்தக்க முறையில் தன் வாத்தை முன்வைக்கிறார் ஆசிரியர். இயன்றால் உடையாரின் முதல் பாகத்தை வாசித்துப் பார்க்கவும். இந்த அனைத்து தகவல்களும் முதல் பாகத்திலேயே இடம் பெறுகின்றன என நினைக்கிறேன்.

Anonymous said...

http://en.wikipedia.org/w/index.php?title=Aditya_Karikalan&oldid=54895679

Bee'morgan said...

அய்யோ.. மன்னிக்கவும். அவர் முன்வைப்பது வாத்தை அல்ல.. வாதத்தை.. :D

வவ்வால் said...

தீவார்,
உமது பதிவைப்படித்த சுப்பிரமணி சுவாமிகள்,
ஆதித்த கரிகாலனை கொன்றவர்களைப்பற்றிய ஆதாரம் , கொலை செய்ய சொல்லி அனுப்பிய ஓலையின் நகல் சுப்பிரமணிய சுவாமிகளிடம் இருப்பதாகவும் இன்னும் சிறிது நேரத்தில் உலக தொலை, பத்திரிக்கை, என அனைவரையும் கூட்டி அறிவிக்கப்போவதாகவும் சற்று முன் ஒரு பருந்து சொன்னது.

மேலும் இதனைக்கேள்விப்பட்ட வைகோ அவர்கள் கோவென கதறியப்படி தமிழனை கொன்ற கருங்காலிகளை கண்டு பிடித்து தண்டனைதரக்கோரி சி.பி.ஐ இடம் மனு கொடுக்க தஞ்சையில் இருந்து கால் நடையாக யாத்திரை புறப்பட்டு புது தில்லி செல்ல இருப்பதாகவும் ராய்டர் செய்திகள் தெரிவிக்கிறது.

என்ன சுவாமி ஒரு பதிவைப்போட்டு இந்தியவையே உலுக்கி விட்டீர்களே.

//சமயம் பார்த்து வரும் சரியான பதிவு...மதன் டவுஸரை அதே வரலாறு.கொம்மில் அவிழ்த்திருப்பார்களே ? அதையும் பதிவுங்களேன் ப்ளீஸ்...!!!//

ரவி சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டே..

(மதன் கூட ஒரு மாதிரி மழுப்பலான தன்னிலை விளக்கம் அப்போது வரலாறு.காம் க்கு விகடனில் தந்து இருந்தார்)

theevu said...

நன்றி
Bee'morgan , Bruno

//வவ்வால்
தஞ்சையில் இருந்து கால் நடையாக யாத்திரை புறப்பட்டு புது தில்லி செல்ல இருப்பதாகவும் ராய்டர் செய்திகள் தெரிவிக்கிறது.
//

வைகோ இப்போதெல்லாம் நடப்பதில்லை.பாதயாத்திரைக்கு பதிலாக
பிரதமருக்கு கடிதம் எழுதுவதோடு சரி.

அதிமுகவை கழட்டிக்கொண்டு வெளியில் வர இந்த சேதுசமுத்திரம் நல்ல சந்தர்ப்பம்.

வைகோ வின் அமைதி புரியவில்லை.

-/பெயரிலி. said...

ஆதித்த கரிகாலனை ஆர் கொண்டதெண்டு கண்ணன் பிரசுரம் வெளியிட்ட "சுவடிகள் சொன்னதில்லை" ஆணைக்குழு ரிப்போட்டைத்தான் நம்புவன்.

theevu said...

//கண்ணன் பிரசுரம் வெளியிட்ட //

கண்ணன் பிரசுரம் எண்டால் ஆர்? காலச்சுவடோ?

வெற்றி said...

தீவு,
நல்ல சுவாரசியமான பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

/* கூடவேஇருந்து குழி பறிப்பவர்களைத்தானே? இரவிதாஸனும், அவன் கூட்டாளிகளும் சோழ நாட்டிலேயே மிக உயர்ந்த பதவிகளில் இருந்தவர்கள் தான் */

அப்ப, இப்பிடிக் கூட இருந்து குழி பறிக்கிறது, காட்டிக் கொடுக்கிறதெல்லாம் அந்தக்காலத்தில இருந்தே வருகுது, இல்லையா? அது எங்கடை இரத்தத்திலை ஊறினது போல இருக்கு.

Anonymous said...

அடிச்சுச்சொல்லுவன்.
ஆதித்தகரிகாலனை கொன்றது அரு. ராமநாதன்.

theevu said...

வெற்றி
//காட்டிக் கொடுக்கிறதெல்லாம் அந்தக்காலத்தில இருந்தே வருகுது, இல்லையா? அது எங்கடை இரத்தத்திலை ஊறினது போல இருக்கு.//

அப்படியல்ல எல்லா இனங்களிலும் இந்த காட்டிகொடுக்கும் சுபாவிகள் இருக்கின்றார்கள்.

நாம் எம்மை தாழ்த்திகொள்வதுதான் எம்மினத்தின் இரத்தத்தில் ஊறிய விடயம்.

theevu said...

//வீரபாண்டியன் மனைவி அடிச்சுச்சொல்லுவன்.
ஆதித்தகரிகாலனை கொன்றது அரு. ராமநாதன்.//


வீரபாண்டியன் நாவல் மிக விறுவிறுப்பாக போகும் நாவல்.நல்லதொரு எழுத்து நடை எழுதியவர் பெயரை காலப்போக்கில் மறந்துவிட்டேன்.

அந்த நாவல் படிக்கும்போது வீரபாண்டியன்தான் நாயகன். இப்போது
ஆதித்த கரிகாலனுக்காக ஒரு இப்படி பதிவு
காலம் செய்யும் கோலம்.

ஞாபகமூட்டியதற்கு நன்றி

Anonymous said...

/அப்படியல்ல எல்லா இனங்களிலும் இந்த காட்டிகொடுக்கும் சுபாவிகள் இருக்கின்றார்கள்.

நாம் எம்மை தாழ்த்திகொள்வதுதான் எம்மினத்தின் இரத்தத்தில் ஊறிய விடயம்./

அப்படியல்ல அப்படியல்ல எல்லா இனங்களிலும் இப்படியாகத் தாழ்த்திகொள்ளும் கபாலிகள் இருக்கின்றார்கள்.

நாம் எம்மை மனித இனத்திலிருந்து விலத்திச் சொல்வதுதான் எம்மினத்தின் இரத்தத்தில் ஊறிய விடயம்.