Thursday, October 11, 2007

தமிழ்மணம் உதவிசெய்யவேண்டும்.

சரி வெட்கம் பார்த்தால் சுற்றமில்லை.எனவே கேட்டுவிடுவது என முடிவெடுத்துள்ளேன்

கனம் தமிழ்மணம் நிர்வாகத்திற்கு

உங்களது சேவை மிகப்பெரிய சேவை.இந்திய வரலாற்றிலேயே கொரியா தொடங்கி குற்றாலம் வரைக்கும் உங்கள் ஆட்சிதான் நீண்டுகிடக்கிறது.
இது தமிழுக்கு கிடைத்த தனிப்பெருமை.

இப்பொழுது எனது தாழ்மையான விண்ணப்பமென்னவெனில் தமிழ்மண முகப்பு பக்கத்தில் பலவிதமாக
கூரை போட்டு ஒவ்வொருத்தருக்கும் பல இடங்கள் ஒதுக்கியுள்ளீர்கள்.
காலத்துக்கு காலம் நிலமைக்கு ஏற்ப சண்டித்தனம் செய்வோரை(இடுகைகள்) பின்னுக்கு தூக்கியும் வயது முதிந்ந்தோரை(பரண்) முன்னுக்குமாக இடுகிறீர்கள்.


காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற திராவிட பழமொழிக்கேற்ப தமிழனது திரவியம் தேடும் வணிகப்புத்தி முந்து முந்து என்கிறது.

எனவே

அதே போல ஏதாவது ஒரு கூரையிலுள்ள ஒரு இடத்தை காலி பண்ணி எனக்கு கொடுத்தீர்களானால் நான் அதில் ஒரு டெய்லர் கடை போட்டு தமிழ்மணத்தில் அடிக்கடி கிழிக்கப்படும் டவுஸர்களை தைத்து வணிகம் செய்வேன்.

உதவுவீர்களா?


லேபிள் :-மதன்,டெய்லர்,ஆதித்த கரிகாலன் டவுசர்

14 comments:

theevu said...

பின்னூட்ட கடமை

ரவி said...

ஏனிந்த கொலைவெறி ?

கடந்த வாரம் முதல் கும்மி வாசனை தீய்ந்த வாடைபோல் இந்த பதிவில் அடிக்கிறதே ?

கொரியாவுக்கும் குற்றாலத்துக்கும் முடிச்சு போட்டது ஏனோ ??

ரவி said...

ஆழியூரானையும் லக்கிலூக்கையும் வருந்தி அழைக்கவும்...

அவர்கள் கிழித்துதைத்தது...ச்சே ஆரம்பித்து வைத்ததுதான் இந்த டவுஸர் கிழியும் பழக்கம்...

Anonymous said...

நானாவது சாவகம் சுமத்திரா வரைக்கும் தான் படையெடுத்தேன்...தமிழ்மணம் கொரியாவரை படையெடுத்து வெற்றிபெற்றிருக்கிறதே?

Anonymous said...

கும்மிக்கு நானும் வரட்டா அம்பி ?

theevu said...

//கொரியாவுக்கும் குற்றாலத்துக்கும் முடிச்சு போட்டது ஏனோ ??//

பாதி சொல்லடை உதவி நமது பெயரிலி அண்ணை.அவர்து பதிவை கடைசியாகப்படித்துவிட்டு பத்திந்ததால் ஏற்பட்ட பாதிப்பு.

அண்ணை சொல்லுரார்

தஞ்சாவூரின் குக்கிராமத்திலும் துபாய் ஆப்பக்கடையிலும் பங்களூர் பீர்பாரிலும் கொரியாவின் சக்கூரா மரத்துக்குக் கீழும் என் பெயர்ப்புகள் வாசிக்கப் பட்டு விவாதிக்கப்படுவது சிவாஜி மேக்கப் உரு மாற்றமெற்றா மோர் போஸிஸ் போல டிஜிட்டல் ட்ரீமாகவிரிகிறது.

ரவி said...

அதனை படித்து மீண்டும் என் டவுசர் கிழிந்தது...

கண்டிப்பாக தமிழ்மணத்துக்கு ஒரு டெய்லர் தேவை...

இந்த பதிவு ஒரு வரலாற்றுத்தேவை என உணர்ந்தேன்...

Anonymous said...

இந்த டெய்லர் போதுமா? இன்னும் ட்ரெய்லர் வேணுமா?

என்ன வெச்சு அரசியல் ஒண்ணும் நடத்தலையே?

Anonymous said...

//எலி சபேத்தி said...
இந்த டெய்லர் போதுமா? இன்னும் ட்ரெய்லர் வேணுமா?

என்ன வெச்சு அரசியல் ஒண்ணும் நடத்தலையே?//

நீயே ஒரு காமடி. ஒன்ன வைச்சு அரசியலா? நல்ல காமெடிதான் :)))

Anonymous said...

attaagaasam . sema timing.

Anonymous said...

ஏம்பா என் பொழப்ப கெடுக்கிற???

கிழிஞ்சிது டவுசரு said...

என்னோட டவுசர் கிய்ஞ்சி ஒரு வருசம் ஆவுது. அதுக்கு பதில் சொல்லிட்டு அப்புறது மத்த டவுசர் பத்தி பேசலாம்.

Anonymous said...

நேத்திக்கு பனியன்
இன்னிக்கு டவுசர்
ஏனுங்கன்ன நீங்க முதலாளித்துவ பனியன்கம்பெனிபினாமிமாபியாங்களா?

Anonymous said...

கசமாலம் said
கடை போட இடம் தரப்படும் ஆனால், நாத்தம் அடிக்க கூடாது. கட்டாயம் லெதர் க்ளவுஸ் யூஸ் பன்னவேண்டும். ஓ.கேவா?