Friday, December 23, 2005

திலகவதிக்கு சாகித்ய அகாடமி விருது

தமிழக காவல்துறையின் கூடுதல் டிஜிபி திலகவதிக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.
மாநில அளவில் தலை சிறந்த எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய சாகித்ய அகாடமி விருது வழங்கி கௌரவித்து வருகிறது. சாகித்ய அகாடமி விருது வழங்கும் கமிட்டியின் கூட்டம் கோவாவில் நடந்தது. இதில் விருது பெறுவோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் தமிழில் சிறந்த எழுத்தாளருக்கான சாகித்ய அகாடமி விருது திலகவதிக்குக் கிடைத்துள்ளது. அவர் எழுதிய கல்மரம் என்ற நிõவலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த நாவலை அவர் கடந்த 2001ம் ஆண்டு எழுதியிருந்தார்.
ரூ. 50,000 ரொக்கம், பாராட்டுப் பட்டயம் ஆகியவை அடங்கியது சாகித்ய அகாடமி விருது. விருது கிடைத்திருப்பது குறித்து திலகவதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

thatstamilcom

Read More...

Sunday, December 18, 2005

எந்த நூற்றாண்டு இது?



எத்தனை சிறப்பு தொழில் நுட்பம் வந்தென்ன? மழை பாதி விதி பாதி என்று இந்த மக்களின் வாழ்க்கை முடிந்துவிட்டிருக்கிறது.அரசை குறை கூறமுடியவில்லை.
யாரிடம் நோவார்கள் இந்த மக்கள்?

இறந்த தமிழக உறவுகளுக்காக அஞ்சலிகள்.

Read More...

Wednesday, December 14, 2005

ஓகோ..இதுதான் சிவாஜியா?

ஓகோ..இதுதான் சிவாஜியா? ரஜனியின் சிவாஜி பட கெட்அப் இதுதானா? சும்மா சொல்லக்கூடாது ரஜனி இரசிகர்களுக்கு இனி வரும் காலங்களில் நிறையவே வேலை இருக்கப்போகிறது.அடுத்த வெற்றிப்படம் தயார்.





Read More...

Monday, December 12, 2005

தேவை பாடல் சுட்டி

தமிழ்பட பாட்டாயின் எந்த தூணில் இருந்தாலும் உருவிவிடுவேன்.இது ஈழ தேசிய பாடல் வரிசையை சேர்ந்தது. எனவே தேடி கண்டுபிடிக்கமுடியவில்லை.

எந்த வட்டு எந்த கோம்பை என்று தெரிந்தாலாவது சுழி ஒடிப் பிடிக்கலாம்..

எனவே ஈழ நண்பர்களே சுட்டி தெரிந்தால் தெரியப்படுத்துங்கள்.

மிகுதியை நான் பார்த்துக்கொள்வேன்.

நன்றி

பாடல்கள் இதுதான்

.1. ராஜகோபுரம் எங்கள் தலைவன்

2.நெருப்பாற்றை நீந்தி கடந்து (தேனிசை செல்லப்பா )

3. என்னான்றே அண்ணே என்னான்றே..

Read More...

Sunday, November 27, 2005

மாவீரர் நாள் உரை

உரை தமிழ்நாத தளத்திலிருந்து

மாவீரர் நாள் உரை தமிழ்நாத தளத்திலிருந்து

Read More...

Thursday, November 24, 2005

2 ரூபாக்கு நச்

தமிழ் முரசு எவ்வாறு இவ்வாறு கலக்கலான வண்ணப்படங்களுடன் 2 ரூபாய்க்கு 20 பக்கங்களுடன் விற்க முடிகிறது?..இலாபம் கிடைக்குமா? இல்லையேல் எனக்கு மூக்குப்போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனப்பிழையாக இருந்தால் சரி என்பது போலவா?

என்ன வியாபாரத் தந்திரமோ???

நமக்கு இணையத்தில் ஓசியில் பார்க்க கிடைக்கும் வரை
dont worry mustafa .

Read More...

அவுட்டாக விரும்பாத அம்மையார்

ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடி இனி ஆட்டம் முடிந்தது என மற்றவர்கள் எண்ணும்போது புது யுக்தியுடன் சந்திரிகா அம்மையார் மீண்டும் களத்தில் இறங்குகிறார்.மீண்டும்
ஜளாதிபதியாக போட்டியிட முடியாத நிலையில் பண்டா அரசியல் சகாப்தம் முடிவடைகிறது
என அரசியல் ஆய்வாளர்கள் ஆருடம் கூறிக்கொண்டிருக்கையில் புதிய அவதாரத்துடன்
பாராளமன்ற உறுப்பினராக கதிர்காமரின் இடத்திற்கு வர முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது.





இவரின் கள இறக்கம் தமிழர்களுக்கு நன்மையோ தீமையோ செய்யபபோவதில்லை.ஆனால்
புதிய ஜனாதிபதி ராஜபக்ஸ விற்கு தமிழர் பிரச்சனையை விட பெரிய தலையிடியாகவிருக்கும் என இப்போதே கட்டியம் கூறலாம்.

சந்திரிகாவை இலேசாக மதிப்பிடமுடியாது.பைத்தியங்கள் வரிசையில் சேர்க்கலாம்.
எப்போது எந்த வசனம் கூறுவார் எப்போது அதை மறுதலிப்பார் என கூறமுடியாது.

சந்திரிகாவின் அரசியல் கூற்றுக்களை அறிந்தோர் இதை ஏற்றுக்கொள்வர்.பல முழு நீள
நகைச்சுவை நாடகங்களை இனி பாராளமன்றத்தில் இனி பார்க்கலாம்.. கேட்கலாம்.

Read More...

Saturday, November 19, 2005

அண்ணா அமெரிக்கா வாங்கோ

என்னடா இன்னும் சத்தத்தை காணவில்லையே என்று பார்த்தேன்.முந்தி யாழ்ப்பாணத்தில் அமெரிக்கா நூலகம் எண்டு 3ம் குறுக்குத்தெருவில் இடம் ஒதுக்கி தந்ததுபோல் கிளிநொச்சியிலும் ஒரு இடம் தந்தால் சில வேளை
சும்மா இருப்பியளோ தெரியாது..


அறிக்கை-

US condemns Tigers for "interference" in Sri Lankan democratic process

WASHINGTON (AFP) - The United States has condemned what it called interference by Sri Lanka's Tamil Tiger rebels in the island's democratic process, saying the rebels intimidated voters in just concluded presidential elections.


Congratulating Prime Minister Mahinda Rajapakse on his victory in the polls Thursday, the State Department said the United States "regrets that Tamil voters in the northern and eastern parts of the island did not vote in significant numbers due to a clear campaign of intimidation by the Liberation Tigers of Tamil Eelam (LTTE)."

As a result, "a significant portion of Sri Lanka's people were deprived of the opportunity to make their views known," department spokesman Adam Ereli said.

"The United States condemns this LTTE interference in the democratic process," he said.

Washington regards the Tamil Tigers as terrorists.

Ereli also said that the United States looked forward to working with President Rajapakse as he confronted "many significant and immediate challenges."

They include the need to strengthen a ceasefire agreement and bring renewed vigor to the peace process "so that progress may be made towards a negotiated solution that meets the aspirations of all Sri Lankans," he said.

"We remain committed to maintaining the historically close ties between our two countries," Ereli said.

Rajapakse, a socialist, received 4.88 million votes in the ballot, beating former prime minister Ranil Wickremesinghe who polled 4.69 million votes, final results from the elections commissioner showed.

Peace talks between Colombo and the Tigers have been deadlocked since April 2003 and Sri Lanka is under pressure from the international community to revive the talks in order to qualify for billions of dollars in aid to rebuild tsunami-ravaged coastlines.

Both sides have agreed to abide by a truce that went into effect in 2002 despite accusation of violations from both.

More than 60,000 people were killed between 1972 and 2002, when the truce went into effect.

Two former Norwegian peace brokers said Friday that Rajapakse's victory could lead to deeper divisions and a rocky period in the country.

http://news.yahoo.com/s/afp/20051119/
wl_sthasia_afp/ussrilankapolitics;_
ylt=AmZZjj3sAYVYz5Hy6L_HTbwBxg8F;_ylu
=X3oDMTBjMHVqMTQ4BHNlYwN5bnN1YmNhdA
--

Read More...

Friday, November 18, 2005

Island of Blood 2

பிரபாகரனின் இடத்தில் பெரியதொரு இராஜநாகத்தைக் கண்டேன். கொத்துவதற்கு ஆயத்தமாக அது காணப்பட்டது.

முதல் பகுதி

இந்தியப் படையினருக்கே இந்த அச்சுறுத்தலை பிரபாகரன் விடுத்திருந்தார்.


அவர் விடுத்த செய்தி தெளிவானது. அதாவது, தமிழர்களின் பாதுகாப்பை இந்தியர்கள் உறுதிப்படுத்தாவிடின் புலிகள் மோதலுக்கு திரும்பி வந்துவிடுவார்கள் என்பதே அந்தச் செய்தியாகும்.

விடுதலைப்புலி உறுப்பினர் ஒவ்வொருவரினதும் மரணத்திற்கும், காயத்திற்கும் அவர் பழிவாங்குவார் என்பதே அவரின் செய்தியாகும்.





Anita Pratap




Island of Blood

இந்திய பெண் பத்திரிகையாளர் அனிதா ப்ரதாப்பின் நூலிலிருந்து



அனிதா பிரதாப்பின் இரத்தத்தீவு-20

இலங்கை - இந்திய உடன்படிக்கை வரலாற்றில் குருதி தோய்ந்த அத்தியாயம்
வந்த நோக்கம் எதுவும் நிறைவேறாமல் திரும்பிச் சென்ற அமைதிகாக்கும் படை நாங்கள் இருந்த பெரிய அறையில் நிசப்தம் நிலவியது.

பிரபாகரனின் சீற்றவொலியைத் தவிர வேறொரு சத்தமும் கேட்கவில்லை.
நான் கூச்சலிடவேண்டிய அவசர நிலைக்குத் தள்ளப்பட்டேன். பிரபாகரனின் இடத்தில் பெரியதொரு இராஜநாகத்தைக் கண்டேன். கொத்துவதற்கு ஆயத்தமாக அது காணப்பட்டது.

எனக்கு திகிலூட்டும் விடயங்களில் ஒன்று பாம்பைப் பார்ப்பதாகும். இதுவொரு நினைத்துப் பார்க்கமுடியாத பயம். ஸ்தம்பிதமடைய வைக்கும் பீதி. பாம்புகள் தீங்கற்றவையெனவும் அவற்றைத் தாக்காவிடின் அவை தாக்கமாட்டாது எனவும் சூபினும்,எனது நண்பர்களும் அடிக்கடி கூறுவார்கள். ஆனால், பாம்பைக் கண்டால் அலமலத்துப் போவது வழக்கம். அவை தீங்கு விளைவிப்பவை என்ற ஆழமாக வேரூன்றிய நம்பிக்கையில் நான் ஊறியிருந்தேன்.

எனது சிறிய கண் இமைகளும், சற்றுக் கூர்மையாகப் பார்க்கும் பார்வையும் நான் முற்பிறப்பில் பாம்பாக இருந்திருக்கவேண்டுமென என் சிறிய வயதில் சிலர் என்னிடம் கூறியிருந்தார்கள். எனக்குச் சிறிய கண் இமைகள் இருந்தால் பிரபாகரனுக்கு அது இல்லையெனக் கூறலாம். அப்படிப் பார்த்தால் அவர் முற்பிறப்பில் பாம்பாக இருந்திருக்கலாம்.
இந்த வாழ்விலும் பாம்பு போன்றே பார்ப்பதற்குத் தோன்றினார். உப்பிய தலை, அசைவற்ற தன்மை, கூர்மையான கண்கள் பாம்பைப் போன்று இருந்தன. அவரின் கருமையான முகத்தில் கண்கள் கோபமாக விழித்தன. மிகவும் கீழ் ஸ்தாயில் அபாயகரமான ஒலியை எழுப்பினார்.

பாயவிருந்த பாம்பு போய்விட்டது.

என்னைக் கட்டுப்படுத்துவதற்கு முழுச்சக்தியையும் பயன்படுத்த வேண்டியிருந்தது. நான் வாய்விட்டு வார்த்தைகளை வெளிவிட்டபோது பிரபாகரன் ஆறுதலாக மிக சாவகாசமாகக் காணப்பட்டார். அவரின் கண்கள், மூக்கு, வாய் யாவுமே சாதாரணமான நிலைக்கு வந்தன. நாற்காலியில் சாய்ந்திருந்த அவர் வழமை போன்று மென்மையாகப் பேச ஆரம்பித்தார்.

உடன்படிக்கை முறிவடையும் என்பதை அத்தருணத்தில் நான் உணர்ந்து கொண்டேன்.

ஒரு மாதத்திற்குப் பின்னர் புலிகளின் சினைப்பர் தாக்குதலையடுத்து இந்தியத் துருப்புகள் மேலதிகமாக யாழ்ப்பாணத்தில் இறக்கப்பட்ட சமயம் நான் பிரபாகரனைச் சந்தித்தேன்.

துயரந்தோய்ந்த அந்தத் தேசத்தின் வரலாற்றில் அதுவொரு குருதி தோய்ந்த அத்தியாயமாகும்.

அந்த யுத்தம் ஆயிரக்கணக்கானோரை பலி கொண்டது. பலரை அங்கவீனமாக்கியது, மண்ணை அழித்தது, இந்தியாவின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தியது.

புலிகளை நிலை குலையச் செய்தது. பீதி, வன்செயல் நெருக்கடிக்குள் தமிழரை மேலும் தள்ளியது.

ஆனால், உயிர் தப்பினார். முன்னரை விட மிகவும் வலிமை பெற்றவராக மாற்றம் பெற்றார்.

ஆயினும், மிகவும் மறைவான இடத்தில் வாழ வேண்டி ஏற்பட்டது. அவருக்குரிய தூர நோக்கம், தந்திரோபாய திட்டம் தீட்டுதல் என்பவற்றால் பிரமாண்டமானதும், இரகசியமானதுமான யுத்த அமைப்பொன்றைக் கட்டியெழுப்ப முடிந்தது.

நிலத்தின் கீழ் பல தளங்களைக் கொண்ட பதுங்கு குழிகளை அமைத்தார். பாரிய தாங்கிகளை அமைத்து எரிபொருளை சேமித்தார். மெதுவாகவும், திடமானதாகவும் பாரிய போர் முயற்சிக்கான திட்டங்களை வகுத்தார்.

சகல தேவைகளையும் இறக்குமதி செய்யப்படும் புலிகளின் சீருடை உட்பட மிகக் கவனமாக ஆயத்தப்படுத்த முடிந்தது.

இலங்கையை விட்டு இந்தியத் துருப்புகள் வெளியேறிய பின்பே திரும்பவும் பிரபாகரனை சந்திக்கும் முயற்சியில் நான் வெற்றி காண நேர்ந்தது. 1987-1990 காலப்பகுதியில் இந்திய சமாதானப் படையினருடன் அவர் போரிட்டுக் கொண்டிருந்த தருணத்தில் அவருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தேன். ஒரு தடவை அவரைச் சந்திக்க முடியாமல் போனது.

கடைசி இந்தியப் படைவீரனும் சென்ற பின் அவர் தனது முதல் பேட்டியை எனக்குத் தந்தார்.

இலங்கை அமைச்சரவை உறுப்பினரான ரஞ்சன் விஜயரட்ண மற்றும் சில இந்தியர்களுடன் திருகோணமலை கடற்கரையில் நானும் ஒருத்தியாக நின்று இரண்டாயிரம் வீரர்களைக் கொண்ட கடைசி இந்தியப் படையணி புறப்பட்டுச் சென்றதைக் கண்டேன்.

அதுவொரு துக்ககரமானதும், சங்கடத்துக்குரியதுமாகும். அவர்கள் புறப்பட்டு இலங்கைக்கு வந்து சேர்ந்ததற்கு முற்றிலும் முரண்பட்ட நிகழ்வு அது.

அவர்கள் இலங்கைக்கு வந்த போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் வரிசையாக நின்று அவர்களை வாழ்த்தி மாலை சூட்டினர். 1500 இந்தியப் படையினர் இறந்தும் பலர் முடமாக்கப்பட்டும் தெரிவிக்கப்பட்ட எந்தவொரு நோக்கமும் நிறைவேற்றப்படாமலும் தீவில் அமைதியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக குருதி தோய்ந்த அத்தியாயத்தை உருவாக்கியும் இலங்கையில் இந்தியா மேற்கொண்ட தலையீடு பாரியதொரு தவறான நடவடிக்கையாகும்.


இந்திய சமாதானப் படை இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு முதல்நாள் இந்திய மேஜர் ஜெனரல் ஒருவர் வரலாற்றியலாளர் 'பார்பரா துச்மானின்" நூலின் பிரதியொன்றைப் பற்றிக் குறிப்பிட்டார். 'த மார்ச் ஒவ்ஃபோலி: ட்ரம்ட்ரோய் ரு வியட்நாம்" (வுhந ஆயசஉh ழக குழடடல: குசழஅ வுசழல வழ ஏநைவயெஅ) என்ற நூல் அது. அதில் நாம் இலங்கையையும் சேர்த்துக் கொள்ளமுடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

துறைமுகத்தில் நான் அமர்ந்திருந்து, பார்வையிலிருந்து இந்தியப் படையினர் சென்ற படகு மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். கடந்த காலம் நான் அக்கறை கொள்ளும் கால எல்லையை விட்டு விலகியது. எதிர்காலத்தை நோக்கி நடந்தேன்.

பிரபாகரனைச் சந்திக்க வேண்டியிருந்தது. மூன்று நாட்களுக்குப் பின் அதாவது 26 மார்ச் 1990 இல் அவரைச் சந்திக்க முடிந்தது.

நான் அவரை 24ஆம் திகதி சந்திக்கவேண்டிய நிலையில் இருந்தேன். ஏனெனில் 26இல் கொழும்புக்கு திரும்பிச் சென்று அந்த வாரப்பதிப்பிற்கு எனது செய்தியை அனுப்பவேண்டியிருந்தது.

ஆனால், என்னை 26ஆம் திகதி தான் சந்திக்க முடியுமென பிரபாகரனால் தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன்னர் சந்திக்குமாறு அவரைத் தூண்ட முடியவில்லை. இறுதியாக அவர் எனது பிரச்சினையை விளங்கிக் கொண்டார்.

அதாவது இந்தியப் படையினர் இறுதியாக இலங்கையிலிருந்து வாபஸ் பெற்றமை தொடர்பான எனது கட்டுரையுடன் அவரது பேட்டி இடம்பெறவேண்டியிருந்தது. பேட்டியும் ஒருவாரம் கழித்து பிரசுரிப்பது சிறப்பானதாகத் தோன்றவில்லை. பின்னர் 25ஆம் திகதி நள்ளிரவில் என்னைச் சந்திப்பதற்கு அவர் சம்மதித்தார்.

அது உசிதமென்றால் பகலில் கொழும்புக்குப் பயணத்தை மேற்கொண்டு இரவு கொழும்பை அடையமுடியும். அது நடந்தால் காலக்கெடுவுக்குள் எனது கட்டுரை, பேட்டியை நான் அனுப்பிவிடமுடியும்.

இருபத்தாறாம் இலக்கம் பிரபாகரனுக்கு குறிப்பிடத்தக்க முக்கியமானதொன்று. அவர் நவம்பர் 26ஆம் திகதி பிறந்தவர். இருபத்தாறும் அதனுடன் எந்த இலக்கத்தையாவது கூட்ட எட்டு வருமாயின் அது தமக்கு அதிர்ர்;டமற்றது என்று அவர் கண்டுள்ளார்.

மாதத்தில் வரும் 26ஆம் திகதிகளில் எந்தவொரு யுத்த நடவடிக்கையும் அவர் நடத்துவதில்லை. அந்த நாளில் போர் நடவடிக்கைகளைத் தவிர்த்து வேறு கருமத்தில் ஈடுபடுவதற்கே அவர் முன்னுரிமை கொடுப்பார். பேட்டி கொடுப்பது போன்ற காரியங்களில் ஈடுபடுவார். மற்றைய நாட்களை இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக திட்டமிடுவதிலும் நிறைவேற்றுவதிலுமே செலவிடுவார்.

அவருடைய பிறந்ததினம், வருகின்ற வாரம் இறந்த விடுதலைப் புலிகளை கௌரவிக்கும் மாவீரர் வாரமாக அனுர்;டிக்கப்படுகிறது.

நானும் 'ரைம்" சஞ்சிகையின் புகைப்படப்பிடிப்பாளர் ரொபேர்ட் நிக்கலஸ் பேர்க்கும் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து வன்னிக் காட்டுக்குள் புலி உறுப்பினர்களால் அழைத்துச் செல்லப்பட்டோம்.

'பொப்" என்று நாம் அவரை அழைப்போம். என்னுடன் சேர்ந்து பணியாற்றியவர்களில் அவர் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவரும், திடசிந்தை கொண்டவருமான புகைப்படப்பிடிப்பாளராவார். சிறந்த நிருபர்கள் போன்றே அவருக்கு செய்திகள் பற்றி நன்கு தெரியும். அவரின் கண்களைப் போலவே மூளையும் கூர்மையாக இருந்தது.

எம்முடன் புலிகளின் பேச்சாளர் அன்ரன் பாலசிங்கமும், சிரேர்;ட உறுப்பினர் திலீப் யோகியும் உடன் பயணம் செய்தனர். நாம் எதிர்காலம் குறித்து கலந்துரையாடினோம். பிரபாகரன் சமாதானமாக வருவதற்கு உகந்த நேரம் எனவும், தீர்வுப்பொதி தனிநாடு இல்லாமல் சுயாட்சி, பாதுகாப்பைத் தருவதாக நான் குறிப்பிட்டேன்.


தனித்துவமான சூழ்நிலைகளால் உருவான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பமாக அது காணப்பட்டது. வரலாற்று ரீதியான பகைவர்களான விடுதலைப் புலிகளும், ஜனாதிபதி பிரேமதாசவின் இலங்கை அரசாங்கமும் தமது பொது எதிரியான இந்திய சமாதானப் படையினரை வெளியேற்றுவதற்காக ஐக்கியப்பட்டனர்.

இந்தியர்களை வெளியேற்றுவது இருசாராரைப் பொறுத்தவரையும் தம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்கான தேவையாக இருந்தது.

அதனால், இருசாராரும் இரகசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்தியர்களுடன் மோதலில் ஈடுபடுவதற்காக புலிகளுக்கு பிரேமதாஸ ஆயுதங்கள், தளபாடங்களை வழங்கினார்.

இந்தியப் படையினர் வெளியேறியதால் ஏற்பட்ட வெற்றிடங்கள் துரிதமாக புலிகளால் நிரப்பப்பட்டன.
தனது இராணுவத்தை முகாம்களுக்குள்ளேயே பிரேமதாஸ தொடர்ந்து முடக்கிவைத்தார். இது ஈழத்தை பிரபாகரனிடம் பிரேமதாஸ சரணடையச் செய்ததாகவே காணப்பட்டது. இதைவிட வேறெதனை அதிகமாக அவர் கேட்கக்கூடும்?

அதிகாலை 2 மணியளவில் அடர்ந்த காட்டிற்குள் இருந்த பாதுகாப்பான இல்லத்தை நாம் அடைந்தோம்.

வானிலிருந்து நாம் கால்களை நீட்டி வெளியேற சில நிமிடங்கள் எடுத்தன. யுத்த சீருடை அணிந்திருந்தவாறு விறாந்தையில் எமக்காக பிரபாகரன் காத்திருந்தார்.

தொடரும்..

Read More...

Thursday, November 17, 2005

இனி என்ன ஓய்வு ஜனாதிபதி அய்யா?



சந்திரிகா அம்மையாரால் தமிழினம் பல வரலாற்று சாதனைகளை படைத்தது..உங்களால் தமிழினத்திற்கு அதி சீக்கிரம் தமிழீழம் கிடைக்கட்டும்.

Read More...

பொதுமக்கள் அடித்துக்கொன்றனர்

பிள்ளையார் எறும்பைக்கூட கொன்றால் பாவம் என கூறி வளர்த்தெடுக்கப்பட்ட யாழ் சமூகம் மாறிய மாற்றம்..

செய்தியின் கடுமை கருதி இங்கே மறுபிரசுரம் செய்யவில்லை.உதயனில் பார்த்து அறிக.பொன்பரப்பியில் தமிழரசன் கொல்லப்பட்ட சம்பவம் கூட ஞாபகத்திற்கு வருகிறது.

சிங்களவனுக்கு வெற்றி .வேறென்னத்தை சொல்வது..:(

Read More...

Wednesday, November 16, 2005

செவியின்பம் 2

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் பேச்சு

முதல் பகுதி

இரண்டாம் பகுதி



நன்றி http://www.worldtamilnews.com/

Read More...

Sunday, November 13, 2005

நான் புறக்கணிக்க மாட்டேன்

//நடிகை சுகாசினி மணிரத்தினம், நடிகை குஸ்பு ஆகியோரது திரைப்படங்களை வெளிநாடுகளில் புறக்கணிக்க வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தமிழ்த் திரைப்பட விநியோகத்தர்களும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களும் முடிவு செய்துள்ளனர்.//

திடீரென ஒரு அறிக்கை யார் இவர்கள்?

யார் தலைவர் யார் செயலாளர்? சும்மா அறிக்கை விட்டால் போதுமா?

சுகாசினி படத்தை பகிஸ்கரிப்போம் என்பதை விட்டு தில்லு இருந்தால் நெய்வேலி போராட்டத்தை மழுங்கச்செய்த ரஜனியின் அடுத்த சிவாஜி படத்தை திரையிடாமல் செய்யுங்கள்.அதை விட்டு செத்த பாம்பு அடிக்காதீர்கள்.




கீழே அறிக்கை
http://www.puthinam.com


சுகாசினி மணிரத்னம் திரைப்படங்களை வெளிநாடுகளில் புறக்கணிக்க முடிவு!!
[திங்கட்கிழமை, 14 நவம்பர் 2005, 04:39 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]

தமிழர் பண்பாட்டிற்கும், தமிழர்களுக்கும் எதிராக கருத்துகளைக் கூறி வரும் நடிகை சுகாசினி மணிரத்தினம், நடிகை குஸ்பு ஆகியோரது திரைப்படங்களை வெளிநாடுகளில் புறக்கணிக்க வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தமிழ்த் திரைப்பட விநியோகத்தர்களும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களும் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக ஐரோப்பிய வட-அமெரிக்க தமிழ்த் திரை ரசிகர்கள் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்ப் பெண்களின் கற்புப் பற்றி தவறாக கருத்துக் கூறிய நடிகை குஸ்புவிற்கு எதிராக தமிழ்நாட்டில் பெண்கள் அமைப்புக்கள் மற்றும் சமூக அமைப்புக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குஸ்புவிற்கு எதிராக நீதிமன்றங்களில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. நீதிமன்றிற்குச் சமூகமளிக்கத் தவறியதற்காக நீதிமன்றங்கள் குஸ்புவிற்கு பிடியாணை பிறப்பித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் குஸ்பு தெரிவித்த கருத்துத் தவறானது என தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழர்கள் பற்றிய இழிவான கருத்தொன்றை தமிழரல்லாத சுகாசினி மணிரத்தினம் வெளியிட்டுள்ளார்.
தமிழ்ப் பெண்கள் திருமணம் செய்வதற்கு முன்பே கற்பிழந்து போகிறார்கள் என்று குஸ்பு சொன்ன கருத்தைப் பற்றி எதுவுமே தெரிவிக்காத சுகாசினி, குஸ்புவைக் கண்டிப்பதற்குத் தமிழர்களுக்கு என்ன கொம்பு முளைத்திருக்கிறாதா? என்று தமிழர்களை மிகவும் அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்.
குஸ்புவைக் கண்டித்ததற்காக தமிழர்கள் வெட்கித் தலை குனிய வேண்டும் என்றும் தன்னிடம் தமிழர்கள் இப்படிக் கேட்டிருந்தால் அவர்களைத் தான் கிழித்திருப்பேன் என்றும் சுகாசினி கூறியுள்ளார்.
இதற்கான கண்டனங்கள் சுகாசினியை நோக்கி தமிழகமெங்கும் எழும்ப ஆரம்பித்துள்ளது. சுகாசினி உறுப்பினராக உள்ள தென்னிந்திய நடிகர் சங்கமும் இதனைக் கண்டித்துள்ளது. தன் மீது நடவடிக்கை எடுக்க நினைத்தால் நடப்பதே வேறு என தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தை சுகாசினி மிரட்டியுள்ளார்.
தமிழர்களை அடிமைகளாக நினைக்கும் மனப்பாண்மையில் காட்டுமிராண்டித் தனத்தோடு நடந்து கொண்டிருக்கும் சுகாசினி மணிரத்தினத்திற்கு எதிராக தமிழறிஞர்கள் மற்றும் தமிழக ஊடக உலகம் என்பனவும் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன.
திரை உலகிலும் சுகாசினிக்கு எதிரான கண்டனங்கள் வலுப்பெற ஆரம்பித்துள்ளன. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மூத்த நடிகையான மனோராமா,"முதல்வர் ஜெயலலிதாவே கண்டனம் தெரிவித்த ஒருவிடயத்தில் சுகாசினி இவ்வாறு நடந்து கொண்டது தவறு" எனத் தெரிவித்துள்ளார். வேறு பல நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களும் இதனை முற்றாகக் கண்டித்துள்ளனர்.
ஆறரைக் கோடி தமிழகத் தமிழர்களையும் அவமதிக்கும் விதமாக தமிழர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது? என கேள்வியெழுப்பியுள்ள சுகாசினிக்கு எதிராகத் தமிழகத் தமிழர்களின் போராட்டத்திற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா வாழ் தமிழர்களும் ஆதரவுக் கரம் கொடுக்கிறோம்.
முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட சில அரசியல் தலைவர்களும், தமிழின உணர்வாளர்களும் கண்டித்த குஸ்புவின் கருத்துப் பரிமாற்றத்தை நியாயப்படுத்துவதற்காக, தமிழர்களிற்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது என தமிழரல்லாத மனப்பான்மையுடன் பேசியுள்ள சுகாசினி, தமிழகத் தமிழ் அமைப்புக்கள் வேண்டுகோள் விடுப்பதற்கு அமைய, அனைத்துத் தமிழர்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டுமெனவும்,
இல்லாவிட்டால் இனிவரும் காலங்களில் மணிரத்தினத்தினதோ அல்லது சுகாசினியினதோ, திரைப்படங்கள் ஐரோப்பாக் கண்டம், அவுஸ்திரேலியாக் கண்டம், அமெரிக்கக் கண்டம், மற்றும் சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் திரையிட முடியாதபடி போராடுவோம்.
இது குறித்து மேற்குலக நாடுகளில் திரைப்பட விநியோகங்களில் ஈடுபட்டுள்ள தமிழர்கள் தங்களுக்குள் தொடர்பு கொண்டு அவர்களின் ஆதரவைத் திரட்டும் முதற்கட்ட நடவடிக்கையை இப்போது மேற்கொண்டு வருகிறோம். இதற்கு தாங்களும் பரிபூரண ஆதரவு தருவதாக இதுவரை நாம் தொடர்பு கொண்ட விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத் திரை அரங்கங்களில் திரைப்படங்கள் காண்பிக்கப்படுவதால் மட்டுமே தமிழ்த் திரை உலகத்தில் கோடிக்கணக்கான ரூபாய்கள் கொட்டிவிடுவதில்லை. வெளிநாடுகளில் வாழ்கிற தமிழர்களின் ஆதரவினால்தான் தமிழகத் திரை உலகம் கோடிகளில் புரள்கிறது என்ற உண்மையை தமிழ்த் திரையுலகினர் நன்கறிந்தவர்கள்.
ஏனவே, தமிழ்த் திரை உலகை நம்பிப் பிழைப்பவர்கள் தொடர்ந்தும் தமிழர்களது பண்பாட்டிற்கு எதிராகவும், தமிழர்களை அவமதிக்கும் வகையிலும் கருத்துகளைத் தெரிவிப்பது உண்ட வீட்டுக்கு இண்டகம் செய்கிற பச்சைத் துரோகமாகும். இது தொடர இனியும் அனுமதிக்க முடியாது.
இதுவரை காலம் இந்தத் துரோகச் செயல்களை சகித்துக் கொண்ட தாய்த் தமிழகத் தமிழர்கள் இப்போது வீதிகளில் துடைப்பங்களோடும், செருப்புகளோடும், தீப்பந்தங்களோடும் இறங்கி வந்துள்ளனர். தமிழர்களின் தன்மான உணர்ச்சியை நாம் வரவேற்கிறோம்.
இப் பிரச்சினையின் தார்ப்பரியத்தை உணர்ந்து மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காதவரை, இத்தகைய கருத்துக் கூறுவோர், தமிழ்ப் படங்களுக்கு தமிழில் பெயரிட மறுப்போர் வெளிநாடுகளில் படப்பிடிப்புக்கு வந்தாலோ, தமிழகத்தின் எதிர்ப்பையொத்த எதிர்ப்புக்கு இங்கேயும் முகம் கொடுக்க நேரிடும் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More...

Friday, November 11, 2005

என்னை முதன் முதலாக பார்த்தபோது

இந்தப்பாடலை பாடிக்கொண்டு 70 களில் யாழில் நகைச்சுவை நாடகத்தில் டிங்கிரி சிவகுரு இரட்டையர்கள் இப்படி ஒரு என்றி கொடுப்பார்கள்

என்னை முதன் முதலாக பார்த்தபோது என்ன நினைத்தாய் என்று ஒருவர் பாட

மற்றவர் "இழுத்துப்போட்டு 2 உழக்கு உழக்க நினைத்தேன்" என பாடலை முறித்து இடையில் சொல்லுவார்.

அந்த நேரத்து பகிடி அது.

இப்ப ஏன் இது??

தினமலர் தீபாவளியிலிருந்து முதன் முதலாக பத்திரிகை வடிவில் இ பேப்பர் வெளியிடுகிறதாம்.




அந்த முதன் முதலாக என்பது மட்டும்தான் இடிக்கிறது..என்னத்தை சொல்ல..

தற்சமயம் நான் அறிய ஏற்கனவே வந்துகொண்டிருக்கும் சில மின் பத்திரிகைகள் பத்திரிகை வடிவத்திலேயே பார்க்க

தினக்குரல்
முழக்கம்
தமிழ்முரசு
ஒருபேப்பர்

Read More...

Thursday, November 10, 2005

ஆரம்பிச்சுட்டாங்கையா

‘கற்பு பற்றி துணிச்சலாக பேசிய குஷ்புவை கண்டித்த தமிழர்கள், தலை குனிய வேண்டும்’ என்று கூறிய சுகாசினிக்கு கண்டனம் குவிகிறது.

தமிழர்கள் தலைகுனிய வேண்டுமா? சுகாசினி பேச்சுக்கு கண்டனம் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம்

திருமணம் ஆகும்வரை பெண்கள் கன்னியாகத்தான் இருப்பார்கள் என நம்பும் ஆண்கள் முட்டாள்கள் என்று குஷ்பு கூறியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அவர் மீது பல்வேறு கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திடீரென குஷ்புவுக்கு ஆ த ர வ £ க சுகாசினி கிளம்பியிருக்கிறார். ‘‘குஷ்பு சொன்னது சரியான கருத்து. துணிச்சலாக கருத்து கூறிய அவரை இங்கே இருப்பவர்கள் எதிர்க்கிறார்கள். தமிழருக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது?

குஷ்புவுக்கு எதிராக பேசிய தமிழர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். தமிழக மக்கள் அனைவரின் சார்பிலும் நான் குஷ்புவிடம் மன்னிப்புகேட்கிறேன்’’ என்று சுகாசினி கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த திரைப்பட விழா ஒன்றில் சுகாசினி இவ்வாறு பேசியுள்ளார். இதே விழாவில் பேசிய குஷ்பு, ‘‘நான் சொன்னதில் தப்பு இல்லை. அப்படி சொன்னதற்காக நான் வெட்கப்படவில்லை. இன்னமும் என் கருத்து அதுதான்’’ என்று கூறினார்.

அவரை ஆதரித்து சுகாசினி பேசியதும் குஷ்பு அவரை கட்டிப்பிடித்து முத்தமிட்டு நன்றி தெரிவித்தார்.

சுகாசினி பேசியதற்கு அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள், திரையுலகினர் உட்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:


திருமாவளவன்: ‘என்னை கருத்து கேட்டிருந்தால் கிழித்திருப்பேன்’ என்று சுகாசினி கூ றி யு ள் ள £ ர் . குஷ்புவைகண்டித்தவ ர்களைத்தான் சுகாசினி இப்படி கூறியிருக்கிறார். ஒட்டு மொத்த தமிழர்களின் பிரதிநிதியாக மன்னிப்புகேட்க இவர் யார்? தமிழர்கள் எல்லாரும் வெட்கித் தலைகுனிய « வ ண் டு ம் எ ன் று சு க £ சி னி கூறியிருக்கிறார்.

எந்த செயலுக்கும் வெட்கப் படாதவர்கள் இப்படி சொல்வதில் ஆச்சர்ய மில்லைதான். ஆனாலும், சுகாசினிதான் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். குஷ்பு செய்த சாதனைகளுக்காக அவருக்கு நோபல் பரிசு கிடைக்க சுகாசினி வேண்டுமானால் சிபாரிசு செய்யட்டும். அதில் முதல் ஆளாக கையெழுத்து போட தயாராக உள்ளேன். ஆனால், தமிழ் பெண்களின் கற்பு பற்றி இழிவாக பேசுவதை சுகாசினி ஆதரித்தால், குஷ்புவுக்கு ஏற்பட்ட நிலையை சுகாசினிக்கும் தமிழ் பெண்கள் ஏற்படுத்துவார்கள்.

தி.மு.க.பேச்சாளர் வெற்றிகொண்டான்: கலையை மலிவான விலைக்கு விற்க குஷ்பூ, சுகாசினி ஆகியோர் தயாராகி விட்டனர். இவர்களை திருத்த முடியாது. தமிழர்களுக்கு கொம்பு இருப்பதை காட்டினால் அதை அவர்களால்தாங்கமுடியாது.

பா.ஜ.க. தேசிய செயலாளர் இல.கணேசன்: தமிழர்களை பற்றி தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்து வந்தவர்கள் இழிவாக பேசுவதா என்று ஆவேசப்படுகிற தமிழக மக்களுக்கு சவால்விடும் வகையில் குஷ்பூவுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன் என்று சு க £ சி னி « ப சி யு ள் ள த £ க கருதுகிறேன்.

தமிழருவி மணியன்: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று சர்வதேசசிந்தனையை விதைத்த தமிழர்களுக்கு ª க £ ம் பு மு ¬ ள த் தி ரு ப் ப து உண்மைதான்.

நடிகை மனோரமா: முதல்வரும் ஒரு நடிகைதான். அவரும் குஷ்பு சொன்னது த வ று எ ன க் கூ றி யி ரு க் கி ற £ ர் . முடிந்துபோன விஷயத்தை மீண்டும் பெரிதுபடுத்துகிறார்கள். நான் படித்தவள் கிடையாது. எய்ட்ஸ் பற்றி எல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது. அவர்கள் படித்தவர்கள். அதனால் இப்படித்தான் பேசுவார்கள். அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவர்கள் மன்னிப்பு கேட்பதுதான் சரி.


கவிஞர் மேத்தா: குஷ்பு, விளக்கு பற்ற வைக்க உரசிய தீக்குச்சி, கூரையின் மேல் விழுந்து கொழுந்து விட்டு எரிகிறது... அ ¬ ண க் க ப £ ர் ப் ப து த £ ன் அறிவுடமை. நிதானம் இழந்து நெய் ஊற்றக்கூடாது. இயக்குநர் சீமான்: தமிழர்களுக்கு கொம்பா முளைத்திருக்கிறது, தமிழர்கள் சார்பில் நான் மன்னிப்பு கேட்கிறேன் என்பதெல்லாம் சகிக்க முடியாத விஷயங்கள். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.


இயக்குநர் கேயார்: குஷ்பு பேசியதும் சுகாசினி பேசியதும் துணிச்சலான பேச்சாக தெரியலாம். அவர்கள் கருத்தை வரவேற்க முடியாது. காரணம் கண்ணகி வா-ழ¢ந்த நாடு இது. விளம்பரமே இல்லாமல் இருப்பதைவிட தவறான விஷயங்களை பேசி இப்படிப்பட்ட விளம்பரமாவது கிடைக்கட்டுமே என அவர்கள் விரும்புகிறார்கள்.

http://www.tamilmurasu.in/2005/nov/10/2.pdf

Read More...

Wednesday, November 09, 2005

செல்லெல்லாம் மாணிக்க செல்லாகுமா?

செல்லிடத்தொலைபேசி தொலைந்தால் என்னாகும்? இன்றைய வலைப்பதிவில் பதிவர் ஒருவர் விபரமாக எழுதியுள்ளார்.தமிழக நண்பர்கள் கட்டாயம் படித்து அறிவுறுக..

செல் மலிந்தது போல் வேறொன்றும் இவ்வளவு விரைவாக கெதியாக மலிந்ததில்லை.எனினும் செல் காணாமல்போனால் துலையுது சனி என்று கவலைப்படாமல் இருக்கமுடியாது.இது பற்றி எல்லாளன் ஒரு பதிவு முன்னர் இப்படி எழுதியிருந்தார்.

"கைத்தொலைபேசியில் மட்டும் அனைத்து இலக்கங்களையும் வைத்திருக்காதீர்கள்.

கிட்டத்தட்ட 300பேரின் இலக்கங்களுக்கு நான் இனி எங்கு போவது?
இப்போது தான் மூன்று சேர்ந்திருக்கிறது. இனியும் சேரும் என்று நம்புகிறேன்."

எனவே செல்லும்போது செல் கவனம்.



Read More...

Monday, November 07, 2005

எப்படி? எப்படி?

எரிதங்கள் பின்னூட்டப்பெட்டிகளில் பதிலளிக்க செய்வது எப்படி?

யாராவது இந்த தொழில் நுட்பம் தெரிந்தால் தயை கூர்ந்து அறியத்தாருங்கள்.எனது பதிவும் அடிக்கடி தமிழ்மணத்தில் தொடர்காட்சிகளாக அரங்கேற உதவும்.:)

Read More...

Sunday, November 06, 2005

பசு நேசன்

இலங்கை அதிபர் வேட்பாளர் அதிரடி பிரசாரம் வீட்டுக்கு ஒரு பசு
10 முதல் 16 லிட்டர் வரை பால் கறக்கும் என்று வாக்குறுதியை அள்ளிவிடுகிறார்.

இலங்கையில் வரும் 17-ந்தேதி அதிபர் தேர்தல். பிரசாரம் இப்போதே சூடு பிடித்துவிட்டது. தேர்தல் என்றால் வாக்குறுதி இல்லாமலா?

அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான விக்டர் ஹெட்டிகொட என்பவர் இலங்கை மக்கள் என்னை அதிபராக தேர்ந்தெடுத்தால் வீட்டுக்கு ஒரு பசுவை இலவசமாக தருவேன் என்று பிரசாரம் செய்து கலக்கி வருகிறார்.

அடுக்குமாடி வீடுகளில் வாழ்பவர்கள் நமக்கும் பசு உண்டா? இல்லையா? என்று பயப்படவேண்டாம்.

பசுவை வைத்துக் கொள்ள தொழுவம் ஏற்பாடு செய்து தந்தால் அவர்களுக்கும் பசு உண்டு. நான் தரப்போகும் பசு ஒவ்வொன்றும் நாள் ஒன்றுக்கு 10 முதல் 16 லிட்டர் வரை பால் கறக்கும் என்று வாக்குறுதியை அள்ளிவிடுகிறார் ஹெட்டி கொட. இலங்கை மக்களுக்கு ஊட்டச்சத்து வேண்டும் என்பதற்காகத்தான் வீட்டுக்கு ஒரு பசு தரும் ஐடியாவை கொண்டு வந்திருக்கிறேன்.

மிச்சமாகும் பாலை வெண் ணெயாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்கிறார் இவர். இந்த வேட்பாளர் 3500 பேர் பணிபுரியும் மூலிகை மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர் என்பதுடன் பெரும் பணக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.


தகவல்.http://www.newstamilnet.com/

Read More...

Saturday, November 05, 2005

இடறல்

தலைவர் பிரபாவின் பிறந்த நாளன்று பிறக்கும் சிசுக்களுக்கு வங்கிக்கணக்கு

திருமலை அரசியல்துறையினர் ஏற்பாடு

எதிர்வரும் 26ஆம் திகதி தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் 51ஆவது பிறந்ததினமாகும். இதனையொட்டி திருகோணமலையில் அன்றைய தினம் பிறக் கும் குழந்தைகளுக்கு வங்கிக் கணக்குகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. விடு தலைப் புலிகளின் திருகோணமலை அரசியல்துறையினர் இத்தகவலைத் தெரி வித்தனர்.
தேசியத் தலைவரின் பிறந்த தினமான நவம்பர் 26ஆம் திகதி திருகோண மலையில் பிறக்கும் குழந்தைகளுக்கு நிலையான வைப்புக்கணக்குகளும் நினை வுப் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
அன்றைய நாளில் பிறக்கும் சிசுக்களின் விவரங்களை திருமலை மாவட்ட வைத்தியசாலையிலும், பிரதி மாகாண சுகாதாரப் பணிப்பாளரிடமும் உறுதிப்படுத் துமாறும் பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தகவல்.http://www.uthayan.com

தீவின் கருத்து :-இது போட்டிக்கு திருவிழா செய்யும் கலாச்சாரமாக மாறாவிட்டால் சரி.:(

Read More...

Friday, November 04, 2005

மஜா ஜனங்களே

தீபாவளிக்கு படம் ரிலிஸாகி இத்தனை நாளாகியும் இன்னமும் பட விமர்சனம் நமது வலைப்பதிவாளர்கள் எழுதவில்லையே.என்னாச்சு...எல்லோரும் சந்திரமுகி இன்னொரு தடவை பார்க்க போயிட்டாங்களா???




Read More...

Friday, October 21, 2005

கொல்லவல்ல கொல்லவல்ல!

காசியுடன் முரண்படுபவர்களுக்கான வழிகாட்டல்.

வலை பதியும் ஆனால் தமிழ்மணத்தின் நிபந்தனைகளுடன் ஒத்துப்போகாதவர்களை நாம் விலக்கி வைத்துவிடமுடியாது.




உங்கள் வலைப்பதிவு தமிழ்மணத்தில் திரட்டப்படாமல் ஆனால் மக்கள் பார்வைக்கும் வைக்கப்படவேண்டும்.

அதே நேரம் அங்கே பதியவெண்டும் இங்கே இதை கவனிக்கவேண்டும் என்ற நிபந்தனைகளும் இருக்ககூடாது.

தனிப்பட்ட தலையீடுகளோ அல்லது வேறு 3 மாத அல்லது 4மாத இடைவெளி என்ற பழு இல்லாமல் சுயாதீனமாக இருக்கவேண்டும் என்று விரும்பினால் கீழ்கண்ட முறையின்படி இலகுவாக செய்யலாம்.


உங:கள: ஒவ்வொரு பதிவிலும் ஏதோ ஒரு இடத்தில்(சொல் உதவி Voice on Wings) தமிழ்ப்பதிவுகள் என்ற வார்த்தையை மட்டும் சேர்த்துவிடுங்கள் வேறு ஒன்றுமே பிரத்தியேகமாக பண்ணத்தேவையில்லை. (http://technorati.com/ல் அந்த வலைப்பக்கத்திற்கு போய் புதுப்பிக்கும்போது ஒவ்வொருமுறையும் அறிவிக்கவேண்டும்.இங்கு அது தேவையில்லை.)

தேதி வாரியாக நீங்கள் பதிந்து 20 நிமிடத்திற்கு முன்னதாகவே திரட்டி தரப்படும்.

இதுவே அந்த உரல் :-

http://search.blogger.com/?ui=blg&q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+&scoring=dஇதனை உங்கள் விருப்பு பக்கமாக ஆக்கிகொள்ளுங்கள்.

இந்த உரலை தமிழ்மணத்தில் சேர்த்தாலே வலைப்பதிவிற்கு புண்ணியமுமாச்சு.சுமை இறக்கியதுமாச்சு..

முயன்று பாருங்கள்.

பி.கு அதற்காக இதை தமிழ்மணத்துடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.தமிழ்மணம் ஒரு தனி மனிதனின் மொத்த உழைப்பு.தேடி தேடி புது உத்திகளை கையாண்டு நெறிப்படுத்திய ஒரு வலைப்பதிவனின் தேடல்.எனவே அதற்கென்று சில அனுகூலங்கள் இருக்கும்.

காசியின் முடிவுபற்றி தீவின் கருத்து.-
“நல்ல வல்ல குருநாதன் நம்மை வருத்துவது கொல்லவல்ல கொல்லவல்ல.”

Read More...

Wednesday, October 19, 2005

ஒரு ரதியும் வேண்டாம்

தமிழ்ப்பதிவுகள் ,இது ஒரு சோதனை முயற்சி வராதீங்க,தமிழ்ப்பதிவுகள்..

Read More...

Tuesday, October 18, 2005

ஸ்ரீராம ஜெயம்

தலைக்கவசம் இல்லாத பயணம் யாழ்.நீதிபதி விநோத தீர்ப்பு!

யாழ்.நகரப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணி யாத ஒருவரை ஏற்றிச் சென்ற மோட் டார் சைக்கிள் சாரதிக்கு ஆயிரம் தட வைகள் மோட்டார் சைக்கிளில் வேறு நபரை தலைக்கவசம் அணியாமல் ஏற்றிச்செல்லமாட்டேன் என எழுதி வழங்குமாறு யாழ்.மேலதிக நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் உத்தரவிட்டார்.யாழ்.குடாநாட்டில் மோட்டார் சைக்கிளில் சாரதியுடன் பின்புறம் அமர்ந்து பயணம் செய்பவரும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என நீதிமன்றத்தினால் தெரிவிக்கப்பட்டதற்கமைய பொலி ஸார் யாழ்.குடாநாட்டில் திடீர் வாகனப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கமைய சாரதி அனுமதிப் பத் திரம் இல்லாத நபர் ஒருவரை தனது மோட்டார் சைக்கிளில் அமர்த்தி பய ணம்செய்த மேற்படி மோட்டார் சைக் கிள் சாரதிக்கு எதிராக பொலிஸார் யாழ்.நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்தனர்.மேற்படி வழக்கை விசாரித்த நீதிவான் ரூபா 3500 தண்டம் விதித்த துடன் ஆயிரம் தடவைகள் நான் இனிமேல் தலைக்கவசம் அணியாது எந்த நபரையும் ஏற்றிச் செல்ல மாட் டேன் என்று எழுதி நேற்றைய தினமே சமர்பிக்குமாறு நீதிவான் உத்தரவிட் டார்.

-eelanatham-

Read More...

Monday, October 17, 2005

அந்தப் பெண்ணை விடுங்கய்யா.

நச்சென்று தமிழ்முரசு மீண்டும் ஒரு தலைப்பிட்டு பிரச்சனையை ஊதிப்பெரிசாக்குகிறது.

பல கேள்விகளுடன் வந்த ஒரு கேள்விக்கு தமிழ்முரசு இப்படி தலைப்பிடுகிறது..


கற்பு விவகாரம்
குஷ்புக்குஜெயலலிதாகண்டனம்..
பண்பாட்டுக்குவிரோதமாகபேசுவதா?

தமிழ் பெண்களின் கற்பு பற்றி தவறாக பேசிய குஷ்புக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று கண்டனம் தெரிவித்தார்.


அ.தி.மு.க.வின் 34வது ஆண்டு தொடக்க விழாவுக்காக இன்று காலை 10 மணிக்கு கட்சி அலுவலகத்திற்கு வந்தார் ஜெயலலிதா. அங்கு நிருபர்கள் அவரிடம் பேட்டி கேட்டனர். அவர் கோட்டையில் பேட்டியளிப்பதாக கூறிச் சென்றார். பகல் 12 மணியளவில் கோட்டையில் அவர் அளித்த பேட்டி:

கேள்வி: பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு பேசியது சரியா, தவறா?பதில்:அவர் அப்படி பேசியிருக்கவே கூடாது.
தமிழ் பண்பாட்டுக்கும், கலாசாரத்திற்கும் முரணாக யாரும் கருத்து தெரிவிப்பது நல்லதல்ல.

கேள்வி:துணைமேயர் கராத்தே தியாகராஜனை கட்சியில் நீக்கியது ஏன்?
பதில்:அது பற்றி இப்போது எதுவும் சொல்வதற்கில்லை.
கேள்வி: சென்னை மாநகராட்சி கலைக்கப்படுமா?
பதில்:அதற்கு அவசியமில்லை. மாநகராட்சியில் பணிகள் முழு வீச்சில் ந ¬ ட ª ப ற் று வ ரு கி ன் ற ன .« க ள் வி ..


பல கேள்விகளுடன் வந்த மற்றைய பதில்களை விட்டுவிட்டு குஸ்பு விடயத்தை மட்டும் தூக்கிப்பிடித்து காவடி எடுக்கும் இந்தப் பத்திரிகைகளை என் சொல்வது..

Read More...

Friday, October 14, 2005

தீபாவளிக்கு கிழிஞ்ச சட்டை

த்ரிசா பிராட்டியாரின் தீபாவளி அவதாரம்.பார்க்க படம்



புது நாகரீக மேல்சட்டையால் தையல்காரருக்கு இனி நல்ல எதிர்காலம்.

பட மூலம்:- தமிழ்முரசு

Read More...

Wednesday, October 12, 2005

நானே நானா யாரோதானா?

இதுவும் கொடுமைதானே..உரிமைகள் பாதுகாக்கும் சிறுவர் அமைப்புக்கள் எங்கே? :)
படம் பார்க்க.

விழி வழி பாரீரோ?
திருகோணமலை மலை கல்லடி கிராமத்தில் சிறுவர்களுக்கு சின்னம்மை தடுப்பூசி ஏற்றப்பட்டுபோது..

Read More...

Monday, October 10, 2005

சென்னை டாக்ஸி

சென்னையில் கோல் ரா(டா)க்ஸிக்கான விளம்பரம் தென்பட்டது.சென்னயில் இப்படியான கோல் டாக்ஸிகள் இருப்பது இப்போதுதான் எனக்கு தெரியவருகிறது.திரைப்படங்களிலும் பார்த்ததாக ஞாபகமில்லை

2 கிமீக்கு 30 ருபா எனவும் அதற்கு மேற்பட்ட கிமீ 10 ரூபா எனவும் இருந்தது.






தண்டையார் பேட்டையிலிருந்து விருகம்பாக்கத்திற்கு மினக்கெட்டு வந்து விருகம்பாக்கத்திலிருந்து வடபழனிவரை போய் வர ராக்ஸிகாராகளுக்கு கட்டுபடியாகுமா? அல்லது அதற்கும் மீட்டருக்கு மேல் என்று ஒரு தர்மம் இருக்குமா?

Read More...

Thursday, September 29, 2005

அண்ணை சொல்வதுதான் நடக்கும்

முடிவாக எமது தடுப்புக்காவலை அகற்றி, அவரை தமிழீழம் அனுப்புவதற்கு உடன் ஒழுங்கு செய்வதாக உறுதி அளித்தார் ரஜீவ்.





திரு பாலசிங்கத்தின் விடுதலை நூலிலிருந்து....


1987ம் ஆண்டு ஜீலை மாதம் 29ம் திகதி இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. பாரதப் பிரதமர் ரஜீவ்காந்தியும் இலங்கை அரச அதிபர் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவும் கொழும்பில் நிகழ்ந்த விசேட வைபவ மொன்றின்போது இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இந்த ஒப்பந்தம் கைச்சாத்திட்ட தினத்திற்கு முதல்நாள். அதாவது 1987ம் ஆண்டு ஜீலை மாதம் 28ம் திகதி புதுடில்லியில் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்திக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் மத்தியில் ஒரு இரகசிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

கைச்சாத்து இடப்படாத அந்த இரகசிய உடன்பாடு பற்றி அனேகருக்குத் தெரியாது. அக் காலகட்டங்களில் ரஜீவின் நிர்வாக ஆட்சிபீடம் மூடி மறைந்த உண்கைகளில் இதுவும் ஒன்று ரஜீவ்-பிரபா உடன்பாட்டில் சம்பந்தப்பட்டவர்களில் நானும் ஒருவன் என்பதால் அந்த வரலாற்று நிகழ்வை இங்கு பதிவு செய்வது முக்கியமெனக்கருதுகிறேன்.

தலைவர் பிரபாகரனும், நானும் யோகியும், திலீபனும் புதுடில்லிக்கு அழைத்து வரப்பட்டு அசோக்கா விடுதியில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டது பற்றியும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எம் மீது திணித்து விட எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றியும் முந்திய கட்டுரையில் விபரித்தேன்.

தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் விடுதலைப்புலிகளுக்கு சார்பான நிலை எடுத்துக்கொண்டதால் இந்திய அரசுக்கு சங்கடமான நிலை எழுந்தது. கொழும்பு சென்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முன்பாக எப்படியாவது விடுதலைப் புலிகளை வழிக்கு கொண்டுவர வேண்டும் என ரஜீவ்காந்தி விரும்பினார்.

அவருக்கு ஒரேயொரு மார்க்கம்தான் தென்பட்டது. புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நேரடியாகச் சந்தித்து, ஒப்பந்தம் பற்றி அவரது கருத்துக்களை கேட்டறிந்து, அவருடன் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதுதான் சாலச்சிறந்த வழி என ரஜீவ்காந்தி முடிவு எடுத்தார்.

1987ம் ஆண்டு ஜீலை மாதம் 28ம் திகதி நள்ளிரவு. அசோக்கா விடுதியில் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த என்னையும் பிரபாகரனையும் அவசர அவசரமாக எழுப்பினார்கள் இந்தியப்புலனாய்வு அதிகாரிகள். பிரதமர் ரஜீவ்காந்தி மிகவும் அவசரமாக எம்மைச்சந்திக்க விரும்புவதாகவும் உடனே புறப்படுமாறும் பணித்தார்கள்.

ஆயுதம் தரித்த கரும் ப10னைகளின் வாகன அணி பின் தொடர பிரதமமந்தியிரியின் இருப்பிடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டோம். வீட்டு வாசலில் எமக்காக காத்து நின்றார் பிரதமர். ரஜீவ் காந்தியுடன் உள்ளக புலனாய்வுத் துறையின் அதிபர் திரு.எம்.கே.நாராயணனும் நின்று கொண்டிருந்தார்.

புன்முறுவல் ப10த்தபடி மனமுவந்து எம்மை வரவேற்ற பிரதமர், பிரபாகரனைப்பார்த்து 'உங்களைப் பற்றி நிறையக்கேள்ளிப்பட்டிருக்கிறேன். உங்களை நேரில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார். அங்கு தமிழக அமைச்சர் பண்டுருட்டி இராமச்சந்திரனும் எமக்காக காத்து நிற்றார். கலந்துரையாடல் உடனேயே ஆரம்பித்தது. 'இந்த ஒப்பந்தம் குறித்து நீங்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக அறிந்தேன். ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகள் பற்றி விபரமாக கூறுவீர்களா? என்று கேட்டார் ரஜீவ்காந்தி. எமது கருத்துக்களை விபரமாக விளக்கும்படி பிரபாகரன் என்னைப் பணித்தார். ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளை ஒவ்வொன்றாக விளக்கினேன்.

இனப்பிரச்சினையைப் பொறுத்த வரை தமிழரின் உரிமை மிக முக்கியமானது. இலங்கையில் வட,கிழக்கு மாகாணங்களைக் கொண்ட நிலப்பரப்பில் தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் வரலாற்று hPதியாக வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நிலம் அவர்களது சொந்த நிலம். அவர்களது தாய்நிலம். இந்த தாயக நிலத்தைப் பிரிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. வட-கிழக்கு மாகாணங்களைக் கொண்ட நிலப்பரப்பு தமிழ் பேசும் மக்களின் தாயகமாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டபோதும், இந்த தாயக நிலத்தின் பிரதேச ஒருமைப்பாட்டை கருத்து வாக்கெடுப்பிற்கு விடுவது என்ற தீர்மானத்தை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இது தமிழர் தாயகத்தை கூறுபோட வழிவகுக்கும் என்று விளக்கினேன்.

அடுத்ததாக, மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரபரவலாக்கம் வரையறுக்கப்பட்டது என்றும் அது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ப10ர்த்தி செய்யவில்லை என்பதையும் விளக்கினேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக, வட-கிழக்கு மாகாண சபை கலைத்துவிடும் அதிகாரம் இலங்கையின் அரச அதிபர் ஜெயவர்த்தனாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவர் ஒரு சிங்கள இனவெறியர். தமிழ் மக்களுக்கு விரோதமானவர். இவர் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவாரென நாம் நம்பவில்லை என்று கூறினார் பிரபாகரன்.

அடுத்ததாக ஆயுதக் கையளிப்பு பற்றிய விடயத்தை எடுத்துக் கொண்டோம். ஒப்பந்தம் கைச்சாத்தாகிய 72 மணிநேரத்திற்குள் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு கூறுவது அநீதியானது. எத்தனையோ ஆண்டுகளாக இரத்தம் சிந்திப் போராடிப் பெற்ற ஆயுதங்களை நான்கு நாட்களுக்குள், அதுவும் தமிழரின் தேசியப்பிரச்சினைக்கு இறுதித்தீர்வு கிட்டுவதற்கு முன்பாக கையளிக்கும் படி வற்புறுத்துவது எவ்வகையிலும் நியாயமாகாது என்றார் பிரபாகரன். நாம் சொல்வதையெல்லாம் ஆர்வமாகவும், பொறுமையாகவும் கேட்டபடி குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தார் ரஜீவ்காந்தி.

நாம் எமது நிலைப்பாட்டைக் கூறி முடித்ததும் ரஜீவ்காந்தி சொன்னார். 'உங்களின் மக்களின் பிரச்சினைக்கு ஒரு நீதியான தீர்;வு காண வேண்டும் என்பதில் எனது அரசாங்கம் கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த விடயத்தில் உங்களது ஒத்துழைப்பு எமக்கு அவசியம். நீங்கள் சொல்வது போல இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட மாகாணசபைத் திட்டம் ஒரு தற்காலிக ஒழுங்கு தான். அதிலுள்ள குறைபாடுகளை பின்பு நான் ஜெயவர்த்தனவுடன் பேசி நிவர்த்தி செய்ய முயற்சிப்பேன். தமிழர் தாயகம் பற்றி நீங்கள் எழுப்பிய ஆட்சேபனையை நான் கவனத்தில் எடுத்துள்ளேன். இது பற்றி நான் ஜெயவர்தனவுடன் பேசுவேன். கருத்து வாக்கெடுப்பு நடத்தாமல் அதனை ஒத்திவைக்குமாறு சொல்லுவேன்.

எதற்கும் நீங்கள் இந்திய அரசை நம்பவேண்டும்.

தழிழரின் நலன் மீது தான் நாம் அக்கறை கொண்டு செயல்படுகின்றோம். எனவே உங்களது ஆதரவு எமக்குத்தேவை. தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுத்து, அவர்களது பாதுகாப்பை இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்தும். ஒப்பந்தத்தை நீங்கள் ஆதரித்தால் எமது கையைப்பலப்படுத்துவதாக அமையும்" என்றார்.

இந்தியப் பிரதமர் கூறியவற்றை தமிழில் மொழிபெயர்த்து பிரபாகரனுக்கு விளக்கமளித்தார் அமைச்சர் பண்டுருட்டி. 'இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களின் நலனைப் பேணவில்லை. மாறாக, தழிழ் மக்களின் நலனைப் பாதிக்கிறது. ஆகவே, இந்த உடன்படிக்கையை நாம் ஏற்றுக் கொள்ளமுடியாது." என்றும் அழுத்தம் திருத்தமாகச் சொன்னர் பிரபாகரன்.

ரஜீவ்காந்திக்கு நிலமை புரிந்தது. பிரபாகரன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறார் என்பதையும் அவர் உணர்ந்து கொண்டார். விடுதலைப் புலிகளுடன் முரண்பட்டு காரியத்தைக் கெடுக்க அவர் விரும்பவில்லை. ஆகவே, தனது அணுகுமுறையைத் திடீரென மாற்றிக் கொண்டார்

;;;'உங்கள் நிலைப்பாடு எனக்குப்புரிகிறது நீங்கள் எடுத்த முடிவையோ, கொள்கையையோ மாற்றச்சொல்லி நான் கேட்கவில்லை. நீங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. ஆனால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருத்தால் போதும்." என்றார்
ரஜீவ்காந்தி.

பார்த்திர்களா?: பிரதமமந்திரியே உங்களது வழிக்கு வந்து விட்டார். ஒப்பந்தத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம். அது உங்கள் நிலைப்பாடு அதை நீங்கள் ஏற்கத் தேவையில்லை ஆனால் அதற்குத் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாம் என்று மட்டும் பிரதமர் கேட்கிறார். இந்தச்சிறிய ஒத்துழைப்பையாவது நீங்கள் இந்தி அரசுக்காக செய்யலாம் அல்லவா?" என்று ரஜீவிற்காக வக்காலத்து வாங்கினார் பண்டுருட்டியார்.

இந்தச் சந்திப்பில் அவர் எதற்காக அழைக்கப்பட்டார் என்பது இப்பொழுது புலனாகியது. ரஜீவ் கொடுத்த விளக்கமும் அதற்குப் பண்டுருட்டியார் அளித்த வியாக்கியானமும் பிரபாகரனுக்கும் எனக்கும் திருப்தியை அளிக்கவில்லை. 'ஒரு விடயத்தை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அதனை நாம் எதிர்க்கின்றோம் என்றுதானே அர்த்தம்" என்று எனது காதோடு குசுகுசுத்தார் பிரபாகரன்.

ஏற்றுக்கொள்ளாததற்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும் இடையில் வேறுபாடு காட்டி எம்மைத் திருப்திபடுத்த முடியாது என்பதை ரஜீவ் உணர்ந்து கொண்டார் அதனால் பிரச்சினையை வேறு திசைக்கு எடுத்துச் சென்றார்.



'உங்களது இயக்கத்திற்கும், பொதுவாக தமிழ் மக்களுக்கும் ஜெயவர்த்தனாவில் நம்பிக்கையில்லை என்பது எமக்கும் தெரியும். எமக்கும் அவர் மீது நம்பிக்கையில்லைதான். என்றாலும் அவர் மீது கடும் அழுத்தம் பிரயோகித்து இந்த ஒப்பந்தத்தைச் செய்திருக்கின்றோம். மாகாண சபைத்திட்டத்தில் குறைபாடுகள் இருந்தாலும், பின்பு பேச்சுக்களை நடத்தி தமிழரின் சுயாட்சி அதிகாரங்களைக் கூட்டலாம் அல்லவா? அத்தோடு இந்த மாகாணசபைத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமல்ல. அதற்கு காலம் தேவை. அதற்கு முன்னராக, வட-கிழக்கில் ஒரு இடைக்கால அரசை நிறுவலாம். அதில் உங்களது அமைப்பிற்கு பிரதான பங்கு வழங்கலாம். இந்த இடைக்கால அரசு சம்பந்தமாக நான் உங்களுடன் ஒரு இரகசிய உடன்பாடு செய்து கொள்ளவும் ஆயத்தமாக இருக்கிறேன்." என்றார் ராஜீவ்காந்தி.


இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடவேண்டாம். தமிழர் தாயகத்தில் புலிகளின் நிர்வாக ஆட்சியை நிறுவுவதற்கு இது அருமையான சந்தர்ப்பம். இந்தியப் பிரதமருடன் ஒரு இரகசிய உடன்பாடு. இந்த யோசனையை நிராகரிக்க வேண்டாம். இந்திய-இலங்கை ஒப்பந்தம் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டாம். அதற்கு முன்னராக ரஜீவ் -பிரபா ஒப்பந்தம் வரப்போகிறது. இதனைப் பகிரங்கப்படுத்தத்தேவையில்லை. இரகசியமாகவே வைத்துக்கொள்ளலாம்." என்றார் அமைச்சர் பண்டுருட்டி.

இதெல்லாம் முன்கூட்டியே ஒத்திகை செய்யப்பட்ட நாடகம் போல எமக்குத் தோன்றியது. பிரபாகரனுக்கு எதிலுமே நம்பிக்கையில்லை. எதிலும் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் பண்டுருட்டி மிகவும் ஆர்வத்துடன் ரஜீவ்-பிரபா ஒப்பந்தத்திற்கு ஒரு வடிவம் கொடுக்க முயன்று கொண்டிருந்தார்.


வட-கிழக்கில் ஒரு இடைக்கால நிர்வாக ஆட்சி நிறுவப்பட்டு. அதில் விடுதலைப்புலிகளுக்கு பெரும்பான்மை பிரதிநிதித்துவம் வழங்கப்படுமென முடிவெடுக்கப்பட்டது. ஈழத்திலுள்ள எல்லாப் போராளி அமைப்புக்கும் இடைக்கால ஆட்சியில் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டுமென ரஜீவ் கேட்டுக்கொண்டார்.

பிரபா அதற்கு இணங்கவில்லை. இறுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், ஈரோஸ் அமைப்புக்கும் மட்டும் குறைந்த அளவில் பிரதிநிதித்துவம் வழங்குவதென இணக்கம் காணப்பட்டது. இடைக்கால நிர்வாக ஆட்சியின் கட்டமைப்பு, அதிகாரம், செயற்பாடு பற்றி வாக்குறுதி அளித்தார். தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டுமென்றும், சிங்கள அரசாங்கம் புதிதாக காவல் நிலைகளைத் திறக்க கூடாதென்றும் பிரபாகரன் கேட்டுக் கொண்டார். அதற்கு ரஜீவ்காந்தி இணக்கம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களிடமிருந்து கட்டாய வரி வசூலிப்பு செய்வதாக ஜெயவர்த்தனா அரசு புலிகள் மீது குற்றம் சுமத்துகிறது. வரி வசூலிப்பை நிறுத்தமுடியாதா எனக்கேட்டார் ரஜீவ்காந்தி. அந்த வரிப்பணம் எமது இயக்கத்தின் நிர்வாகச் செலவுக்கே பயன்படுத்தப்படுகிறது. அந்தத்தொகையை இந்திய அரசு தருவதானால் வரி அறவிடுவதை நிறுத்தலாம் என்றார் பிரபாகரன். மாதாந்தம் எவ்வளவு தொகைப்பணத்தை வரியாகப் பெறுகிறீர்கள் என ராஜீவ் கேட்க, இலங்கை நாணயப்படி ஒருகோடி ரூபா வரை திரட்டுகின்றோம் என்றார் பிரபா. 'அப்படியானால் இந்திய நாணப்படி ஜம்பது லட்சம் ரூபா வரை வரும். அந்தப் பணத்தை நான் கொடுக்கிறேன்" என்றார் ரஜீவ்.


இறுதியாக ஆயுதக் கையளிப்பு விவகாரம் எழுந்தது. 'ஆயுதங்கள் முழுவதையும் கையளிக்குமாறு நாம் கேட்கவில்லை. நல்லெண்ண சமிக்ஞையாக சிறுதொகை ஆயுதங்களைக் கையளித்தால் போதும், பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பாக இந்திய அமைதிப்படை வட-கிழக்கில் செயற்படும். சிங்கள ஆயுதப்படைகளுடன் போர்நிறுத்தம் தொடர்ந்தும் இருக்கும்.

இந்த சூழ்நிலையில் உங்களுக்கு பேராயுதங்கள் தேவைப்படாது அல்லவா? என்றார் இந்தியப் பிரதமர். பிரபாகரன் பதிலளிக்கவில்லை. ஆழமாக சிந்தித்தபடி இருந்தார். திடீரெனக் குறுக்கிட்டார் பண்டுருட்டியார். 'எதற்காக யோசிக் வேண்டும். இந்தியா கொடுத்த ஆயுதங்களில் பழைய, பாவிக்க முடியாத துருப்பிடித்த ஆயுதங்கள் சிலவற்றை கொடுத்தால் போச்சு" என்றார். 'இந்தியா கொடுத்த ஆயுதங்கள் எல்லாம் அப்படித்தான்" என்று பிரபாகரன் கிண்டலாக பதிலளித்தார். பிரபா, 'பரவாயில்லையே, அதில் சிலவற்றைக் கொடுங்கள்.

இந்திய அரசு புதிதாக ஆயுதங்களை தரும் அல்லவா?" என்றார் அமைச்சர் பண்டுருட்டியார். தான் கூறியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ரஜீவிடம் சொன்னார். அதை ஆமோதிப்பதுபோல பிரதமரும் தலையசைத்தார்.

அப்பொழுது அதிகாலை இரண்டு மணியிருக்கும். அன்று காலை ஒன்பது மணியளவில் புதுடில்லியிலிருந்து கொழும்பு புறப்பட இருந்தார் ரஜீவ்காந்தி. பிற்பகல் மூன்று மணிக்கு இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாக இருந்தது.






புலிகளின் தலைவர் பிரபாவுடன் ஏதோ ஒரு சுமுகமான இணக்கப்பாட்டிற்கு வந்ததுபோல மகிழ்ச்சியுடன் காணப்பட்டார் ரஜீவ். பிரபாகரனுக்கு மனதில் மகிழ்ச்சி இல்லை. அவரது முகத்தில் அது தெளிவாகத் தெரிந்தது.



ஏதோ பெரிய சாதனை செய்து விட்டது போன்று பண்டுருட்டியார் திருப்தியுடன் தென்பட்டார். தூக்கமின்மையால் எல்லோருமே சோர்ந்து போயிருந்தோம். கூட்டம் முடியும் கட்டத்திற்கு வந்துவிட்டது. அப்பொழுது நான் அமைச்சர் பண்டுருட்டியிடம் கேட்டேன், 'ரஜீவ் -பிரபா இரகசிய ஒப்பந்தம் என பல விடயங்களை கதைத்தோம். பிரதம மந்திரியும் பல வாக்குறுதிகளைத் தந்திருந்தார். இதை எல்லாம் சுருக்கமாக எழுத்தில் இட்டு. அவரிடமிருந்து கைச்சாத்து பெற்றால் என்ன? என்றேன்.


பண்டுருட்டியார் சிறிது நேரம் யோசித்தார். 'இந்த இரகசிய உடன்பாட்டில் சர்ச்சைக்குரிய பல விடயங்கள் இருக்கின்றன அல்லவா? பண விவகாரம் இருக்கிறது. ஆயுதக் கையளிப்புப் பிரச்சினை இருக்கிறது. இதெல்லாம் அம்பலத்திற்கு வந்தால் இந்தியாவிலும் இலங்கையிலும் பெரும் அரசியற் சூறாவளியே ஏற்படும். உங்களுக்கு பிரதமரில் நம்பிக்கையில்லை? இது ஒரு புநவெடநஅநn யுபசநநஅநவெ. இரு பெரும் மனிதர்களின் எழுதப்படாத ஒப்பந்தமாக இருக்கட்டுமே? என்றார் அமைச்சர். ரஜீவ்காந்திக்கும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னார்.


;'நீங்கள் எதற்கும் கவலை கொள்ளத்தேவையில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நான் நிறைவேற்றுவேன். அமைச்சர் சொல்வது போன்று இது ஒரு எழுதப்படாத புநவெடநஅநn யுபசநநஅநவெ ஆக இருக்கட்டும்." என்றார் ரஜீவ்காந்தி. இறுதிக் கட்டத்தில் நான் அவருடன் முரண்பட விரும்பவில்லை. முடிவாக எமது தடுப்புக்காவலை அகற்றி, அவரை தமிழீழம் அனுப்புவதற்கு உடன் ஒழுங்கு செய்வதாக உறுதி அளித்தார் ரஜீவ்.


ரஜீவ் காந்தியின் இல்லத்திலிருந்து அசோக்கா விடுதிக்கு நாம் போய்ச்சேர அதிகாலை மூன்று மணியாகி விட்டது. 'அண்ணா, இருந்து பாருங்கோ. இந்த இரகசிய ஒப்பந்தம் வாக்குறுதிகளும் என்றுமே நிறைவேறப்போவதில்லை. இதெல்லாம் ஒரு ஏமாற்று வித்தை என்று விரக்தியோடு கூறிவிட்டு தனது அறைக்குள் நுழைந்தார் பிரபாகரன்.


எனது அறைக்குள் சென்றபோது, விழித்தபடி காத்திருந்த திலீபன் விடியும் வரை என்னைத் தூங்கவிடவில்லை. ரஜீவ்-பிரபா சந்திப்பு பற்றியும், இருவருக்கும் மத்தியில் செய்து கொள்ளப்பட்ட இரகசிய ஒப்பந்தம் பற்றியும் விபரமாக திலீபனுக்குச் சொன்னேன். மிகவும் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தான். 'அண்ணன் என்ன சொல்கிறார்" என்று கேட்டான். 'பிரபாவுக்கு திருப்தி இல்லை. நிறைவேறப்போவதில்லை என்று உறுதியாகச் சொல்கிறார் என்றேன்.


ஆழமாக சிந்தித்தபடியிருந்த திலீபன் 'அண்ணை சொல்வதுதான் நடக்கும்" என்றான்.

உண்மையில் அப்படியேதான் நடந்தது. ரஜீவ்-பிரபா இரகசிய ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. இடைக்கால நிர்வாகக் அரசும் உருவாக்கப்படவில்லை.

தலைவர் பிரபாகரனுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி நிறைவேற்றவில்லை என்பதை உணர்ந்த திலீபன் ஆத்திரமடைந்தான். இந்திய அரசு செய்த வரலாற்றுத்தவறை உலகிற்கு அம்பலப்படுத்தும் நோக்கத்தோடு சாகும்வரை உண்ணாவிரப் போராட்டத்தைத் தொடங்கினான். இறுதியில் தனது உயிரை அர்ப்பணித்து உலகிற்கு உணர்த்தினான். எழுதப்படாத ரஜீவ்-பிரபா ஒப்பந்தம் பூகம்பமாக வெடித்தது. தமிழீழத்தில் ஒரு பேரெழுச்சியை உண்டு பண்ணியது.

திரு பாலசிங்கத்தின் விடுதலை நூலிலிருந்து....


திரட்டியது தீவு.

Read More...

Tuesday, September 27, 2005

Island of Blood

பிரபாகரனை நான் சந்தித்தமை வழமையான வன்னிக்காடு, பாதுகாப்பு இல்லங்களில் இடம்பெற்ற சந்திப்புக்களை விட முரண்பட்டதாக இருந்தது.





Anita Pratap






1987 இல் புதுடில்லியிலுள்ள ஐந்து நட்சத்திர அசோகா ஹோட்டலில் பிரபாகரனை நான் சந்தித்தமை வழமையான வன்னிக்காடு, பாதுகாப்பு இல்லங்களில் இடம்பெற்ற சந்திப்புக்களை விட முரண்பட்டதாக இருந்தது.

பிரதமர் ராஜீவ் காந்திக்கும் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும் இடையில் இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தான வாரத்தில் அச்சந்திப்பு இடம்பெற்றது. இந்த ஒப்பந்தமே இலங்கைத் தீவின் தமிழ்ப் பகுதிகளுக்கு இந்தியப் படையினர் செல்வதற்கு வழிவகுத்தது. அத்தருணம் பிரபாகரனுக்கு மிக மோசமானதும், இம்சையானதுமான காலப் பகுதியாகும். அவர் இந்தியாவின் கைதியாக இருந்தார்.

ஐந்து நட்சத்திர வசதியுடன் கூடிய ஹோட்டலில் இருந்தாலும் இந்தியத் துருப்புக்களின் காவலுக்கு மத்தியில் வீட்டுக் காவலிலேயே வைக்கப்பட்டிருந்தார்.

பாதுகாப்பின்றி அவர் வெளியே செல்ல முடியாது.

அவருக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் யாவும் அவதானிக்கப்பட்டன.

அவருடன் அரசாங்க அதிகாரிகள் மட்டுமே பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

கொழும்பிலிருந்து இந்திய இராஜதந்திரிகள் புதுடில்லிக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துமாறு பிரபாகரனைத் தூண்டியிருந்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து ஹெலிகொப்டரிலேயே பிரபாகரன் அழைத்துச் செல்லப்பட்டார்.

ஹோட்டலுக்குச் சென்ற பின்பே, தான் தடுத்துவைக்கப்பட்டுள்ளதை அவர் விளங்கிக் கொண்டார்.

அசோகா ஹோட்டலில் தான் பெற்ற அனுபவம் இந்தியாவுடனான தனது பகைமையுணர்வை இறுக்கமடையச் செய்தது என்று பல காலத்திற்குப் பின்பு என்னிடம் அவர் கூறியுள்ளார்.


தான் தந்திரமான முறையில் உதவியின்றி இருந்ததாகக் கருதிய அவர், இந்தியர்களின் கருணையை இனிமேல் ஒருபோதும் நாடிச் செல்வதை அனுமதிக்கக்கூடாது என்று பிரதிக்ஞை எடுத்திருந்தார்.


இந்திய இராஜதந்திரிகள் தம்மை ஒரு சிறு குழந்தையைப் போன்று நடத்தியவிதம் குறித்து அவர் முரண்பாடு கொண்டிருந்தார். நாட்டுப் ப+சணிக்காய், ஏழை ஒன்றுவிட்ட சகோதரன் போன்று அவரை நடத்தினர்.

தங்கள் எண்ணத்திற்கேற்ப நடத்த முயன்றனர். அவர் ஒரு குழுவின் தலைவரென்ற உண்மையை ஏற்றுக்கொண்டு அவர்கள் மரியாதை செலுத்தவில்லையெனவும் அவர் கூறினார்.

அச்சமயம், பங்க@ரில்'இந்தியா ருடே" யில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பிரபாகரனிடம் பேட்டி எடுப்பதற்காக புதுடில்லிக்குச் சென்றேன்.


டில்லிப் பயணத்திற்காக விமானத்தில் ஏறுவதற்கு முன்னமே கடுமையான பாதுகாப்பிற்கு மத்தியில் பிரபாகரனை எப்படியாவது சந்தித்து விடவேண்டும் என்பது தொடர்பாக என் மனதில் திட்டமொன்றைத் தீட்டியிருந்தேன். செய்தி சேகரிக்கச் செல்லும் போது ஒரு போதுமே கொண்டு செல்லாதவற்றை பொதியில் கட்டினேன். அவை பட்டுச்சேலைகள்.

அச்சமயம் புதுடில்லியில் பெரிய அமர்க்களமாக இருந்தது.

ராஜீவ்காந்தி ஒரு வெற்றிகரமான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

இலங்கையுடன் சமாதான உடன்படிக்கை மேற்கொள்ளும் திட்டத்தை உருவாக்கியிருந்தார். பிரபாகரனும், அதற்கு இணங்கியிருந்தார். உருப்பெருப்பிக்கப்பட்ட செய்திகள் காற்றில் பறந்தன.

ராஜீவ் புதிய நட்சத்திரமாக ஜொலித்தார்.

ஆனால், அவரை விமர்சிப்போர் போபர்ஸ் பீரங்கியிலும் பார்க்க உரத்துக் குரல் எழுப்பினர்.
ஆயினும் அந்த முழக்கத்தை இந்த வெற்றி சத்தமிழக்க வைத்துவிட்டது. சுவீடனிடமிருந்து போபர்ஸ் பீரங்கிகள் கொள்வனவு செய்தமை தொடர்பான மோசடிகள் குறித்து இச்சம்பவம் நடந்த சில மாதங்களுக்கு முன்பே பத்திரிகைகளில் பெரிதாக வெளிவந்தன. பீரங்கிக் கொள்வனவு பேரப் பேச்சில் 50 மில்லியன் டொலர்களை ராஜீவ் பெற்றுக் கொண்டதாகக் குற்றச்சாட்டுகள் வெளியாகியிருந்தன.

இந்த அவதூறு ராஜீவின் செல்வாக்கைப் பெரிதும் பாதித்தது. இந்தச் 'சமாதான குண்டு"டன் போபர்ஸ் மோசடிக் குற்றச்சாட்டு மழுங்கடிக்கப்பட்டுவிடும் என்று ராஜீவின் உதவியாளர்கள் கணிப்பீடு செய்தனர்.

இலங்கையின் இனப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம் ராஜீவுக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்பது பற்றிய நோக்கங்களை அவரின் ஆலோசகர்கள் சிந்திக் கசியவிட்டனர்.

பிரபாகரன் ஹோட்டலின் ஐந்தாம் மாடியில் வைக்கப்பட்டிருந்தார்.

நானும் ஐந்தாம் மாடியில் மற்றொரு பகுதியில் தங்கினேன். அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் அசோகா ஹோட்டல் மிகப் பிரமாண்டமானது. பெரிய நீண்ட தாழ்வாரங்களைக் கொண்டது. முதல்நாள் பிரபாகரனைச் சந்திக்க நான் முயற்சிக்கவில்லை. நான் ஒரு பட்டுச்சேலையை அணிந்தேன். பிளாஸ்ரிக் குப்பைக் கூடையை எடுத்து வைத்துக்கொண்டு ஹோட்டல் பணியாள் போன்று பாசாங்கு செய்து கொண்டு ஐந்தாம் மாடி தாழ்வாரமூடாக நடந்து சென்றேன்.

ஹோட்டலின் ஒரு பகுதி நுழைவாசலில் இரு காவலர்கள் நின்றனர். அப்பகுதியில் தான் பிரபாகரன் இருக்கிறார் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொண்டேன்.

அதனால், அந்த மார்க்கமாகச் சென்றேன். காவலர்கள் என்னைத் தடுத்து நிறுத்த முயன்றனர். புன்முறுவலுடன் பராமரிப்பு பணிப்பிரிவிலிருந்து வந்திருப்பதாகச் சொன்னேன். என்னை உள்ளே செல்ல அனுமதித்தனர்.


அந்தச் சந்தர்ப்பத்தில் நான் வேவு பார்க்கும் வேலையை மட்டும் செய்தேன். அதாவது பிரபாகரன் தங்கியிருந்த அறை எங்கிருக்கிறது? பாதுகாப்பு என்ன மாதிரி என்பதையே நோட்டம் விட்டேன். பின்னர் தாழ்வாரத்திற்கு வந்து வலது பக்கமாகச் சென்றேன். இந்தத் தாழ்வாரத்தை அண்டியிருந்த முதலாவது அறையில் சீருடையின்றி பல காவலர்கள் இருந்தனர். அதுதான் பிரபாகரனின் அறை என்பதில் சந்தேகம் இருக்கவில்லை. எனது நடையை மெதுவாக்காமல் சென்றுவிட்டேன்.


பின்னர் தாழ்வாரத்தை அண்டியிருந்த அறைகள் மூடப்பட்டு இருக்கின்றனவா? இல்லையா? என்பதைச் சோதனை செய்வது போலப் பாசாங்கு செய்து கொண்டு வந்தேன். அது எனது அன்றாட வேலையென்று காட்டிக்கொள்ளும் விதத்தில் பாசாங்கு காட்டினேன். ஹோட்டல் பணிப்பெண்கள் போன்று திறம்பட நான் நடித்தேன். அங்கிருந்த காவலர்களின் பார்வை என் பின்பக்கத்தைத் துளைத்துக்கொண்டு செல்லும் என்பது எனக்குத் தெரிந்திருந்தது.

சாதுர்யத்துக்கு அதிர்ர்;டக்காற்று அடித்தது.


ஒரு அறையின் கதவு இலேசாகத் திறந்திருந்தது. தட்டிவிட்டு சில செக்கன்கள் காத்திருந்தேன். பின் தள்ளிக்கொண்டு நம்பிக்கையுடன் உள்ளே சென்றேன். அந்த அறை வெறுமையாக இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தேன். சிறிய ப+ச்சாடியில் வாடிய ப+ விழுந்து கிடந்தது. அதனை எடுத்துக் கொண்டேன்.

கண்காணித்துக் கொண்டிருக்கும் காவலர்கள் நான் எனது கடமையைச் செய்கிறேன் என்று நினைப்பதற்காக இதனைச் செய்தேன். பின்னர் காவலர்களைக் கடந்து சென்றேன்.
அவர்களைப் பார்த்து மிகச் சாந்தமாகப் புன்முறுவல் ப+த்தவாறு சென்றேன். ஏனெனில் பின்னர் அவர்கள் என்னை அடையாளம் கண்டுகொள்ள வேண்டுமென்ற நோக்கத்துடனே அவ்வாறு செய்தேன்.

மறுதினமும் முதல்நாள் மேற்கொண்ட நடைமுறையையே பின்பற்றினேன். புருவங்களை உயர்த்திப் பார்க்காமலேயே வாசலில் நின்ற இரு காவலர்களும் நான் உள்ளே செல்ல அனுமதித்தனர். ஹோட்டல் பணிப்பெண்ணென என்னையும் அடையாளம் கண்டுகொண்டனர்.

ஆனால், இத்தடவை வலது பக்கம் சென்று பிரபாகரனின் அறைக்கதவைத் தட்டினேன். வெளியில் காவலுக்கு நின்ற பொலிஸார் சற்றுச் சோம்பலாக என்னைப் பார்த்தனர்.

கதவைத் திறந்தவர் திலீபன்.

பிரபாகரனின் நம்பிக்கையான உதவியாளர்களில் ஒருவர். சென்னையில் அடிக்கடி அவரைச் சந்தித்துள்ளேன். 25 வயது நிரம்பிய அவர் மிக மென்மையாகப் பேசுபவர். சாந்தமான சுபாவம் கொண்டவர். அவரின் பேச்சிலும், போக்கிலும் கல்வி வாசனை வீசும்.

சில மாதங்களுக்குப் பின்பு யாழ்ப்பாணத்தில் சாகும் வரை உண்ணாவிரதமிருந்து திலீபன் இறந்துவிட்டார். சயனைட் அருந்தி இறக்காமல் காந்தியவழியில் மரணித்த சில விடுதலைப்புலி உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.


திலீபன் என்னை அடையாளம் கண்டுகொள்ள நீண்ட கணப்பொழுது எடுத்தது. எனது உத்தியோக வாழ்வில் என்னைப் பலர் சேலை அணிந்து பார்த்ததில்லை. அவர்களைப் போன்ற ஒருவராகவே திலீபனும் இருந்தார். துப்புரவுபடுத்த வந்திருப்பதாகப் பொலிஸாருக்குக் கேட்கும்படியாக உரத்துக் கூறியபடி அவருக்கு (திலீபனுக்கு) கண்ஜாடை காட்டினேன். அவர் பின்னுக்கு நகர்ந்தார்.

. முதலில் என்னைக் கண்டவுடன் பிரபாகரன் அதிர்ச்சியடைந்தார். பின்னர் திலீபன் மற்றும் அங்கிருந்தோரைப் போலவே பெரிதாக புன்முறுவல் ப+த்தார்.

நான் உடனடியாக வெளியே போகவேண்டுமெனவும் வெளியிலுள்ள பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுவிடக்கூடாது என்றும் நான் அவரிடம் கூறினேன்.

பின்னர் புகைப்படப்பிடிப்பாளருடன் பேட்டிக்காக திரும்பி வருவேன் என்று அவருக்குக் கூறிவிட்டு பாவிக்கப்படாத இரு ஆர்;ட்ரேக்களை எடுத்துக்கொண்டு திரும்பிச் சென்றேன்.


அன்றைய தினமே 'இன்டியா டூடே"யின் பிரபல புகைப்படப்பிடிப்பாளர் பிரமோத் புர்;கர்ணாவுடன் பேட்டியெடுக்கச் சென்றேன். குண்டுவெடிப்பு, படுகொலை நடந்த இடங்களுக்கு முதலாவதாகச் செல்லும் பத்திரிகையாளராக நான் இருந்தால் புர்;கர்ணா முதல் ஆளாக அந்த இடத்தில் நிற்கும் புகைப்படப்பிடிப்பாளராகும்.

பிரபாகரன் தங்கியிருந்த அறைக்கதவை நாம் அடைந்தபோது காவலர்கள் எம்மைத் தடுத்து நிறுத்தினர். அவர்கள் முன்னர் இருந்த காவலர்கள் அல்ல. கடமை நேரம் மாறிவந்த காவலர்கள் அவர்கள். பிரபாகரன் எம்மை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அவர்களுக்குக் கூறினேன். எனது பெயர், எங்கிருந்து வருகிறேன் என்ற விபரங்களைத் தடுத்து நிறுத்திய காவலர் கேட்டார். எனது பெயர் அனிதா பிரதாப். நான் எங்கிருந்து வருகிறேன் என்பது அவருக்கு (பிரபாகரனுக்கு) தெரியும். நான் துரிதமாகத் திரும்பிப் போகவேண்டும். ஆதலால் விரைவாக அனுமதியுங்கள் என்று அதிகாரத்தொனியில் கூறினேன்.


1980களில் பெண் பத்திரிகையாளர்கள் பொதுவாக வெளியாரினால் அடையாளம் கண்டுகொள்ளப்படாத காலகட்டம் அது.

அதிலும் மோதல் நடைபெறும் இடங்கள், இந்த மாதிரியான பகுதிகளில் பெண் பத்திரிகையாளர்கள் செல்வது இல்லை. இதனால், நான் ஒரு பத்திரிகையாளரென காவலர்கள் சிறிதும் சந்தேகிக்கவில்லை. இதனாலேயே தடை செய்யப்பட்ட பல இடங்களில் நான் நுழைந்து விடக்கூடியதாக இருந்தது. எனது குறிப்பேட்டில் ஒரு கடதாசி துண்டைக் கிழித்து எனது பெயரை அதில் எழுதி காவலரிடம் கொடுத்தேன். அவர் அதனை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றார்.


பிரபாகரனின் தொனியிலிருந்து நான் ப+ரணமாக மாறுபட்டிருந்தேன். ராஜீவ்காந்தியின் அலுவலகத்திலிருந்து வெளிக்கிளம்பிய நம்பிக்கையின் செல்வாக்கு பல்வேறு விதத்தில் எம்மை ஆட்கொண்டிருந்தது. ஆனால், பிரபாகரன் நம்பிக்கையிழந்தவராகவே காணப்பட்டார்.
இலங்கை-இந்திய உடன்படிக்கை பிரச்சினைக்குத் தீர்வைக் கொண்டுவரும் என்று அவர் சிந்தித்திருக்கவில்லை.

தமிழ்ப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட அனுப்பப்படவுள்ள இந்தியப்படையினர் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்காவிடின் நான் அவர்களுடன் போராட வேண்டியிருக்கும் என்று பிரபாகரன் கூறினார்.

அபாயமணி என் செவிகளில் கிணுகிணுக்க ஆரம்பித்தது.

உடன்படிக்கை தமிழ் மக்களின் பிரச்சினைக்கான முடிவல்ல. அதுவொரு அத்தியாயம். இலங்கையில் ஒரு தீர்வொன்று எட்டப்படப் போகிறது என்று நீங்கள் நினைக்கும் ஒவ்வொரு தடவையும் அந்தச் சிந்தனை தவறு என்பது நிரூபணமாகி விடுகிறது.

நிலைமை மேலும் மோசமடைந்து விடுகிறது. இது அந்நாட்டின் சாபக்கேடாக உள்ளது. நீண்ட சுரங்கப் பாதையின் முடிவில் வெளிச்சம் தெரிவது போல் தோன்றினாலும் அது பயணித்துக் கொண்டிருக்கும் ரயிலின் முன்பக்க வெளிச்சம் போன்றுதான் உள்ளது.

பிரபாகரன் பேசியபோது அவரின் முகபாவத்தை அவதானித்தபோது அவர் இந்தியர்களுடன் போரிடுவாரென்பது குறித்து எனக்கு சந்தேகமில்லாலே இருந்தது.

அவர் ஒரு போதும் வெற்று வேட்டான அச்சுறுத்தலை விடுபவரல்ல. நான் அலுவலகத்துக்குத் திரும்பிச் சென்று பேட்டியைத் தயாரித்தேன்,
'உடன்படிக்கை" உறுதியான சமாதானத்தைக் கொண்டு வரப்போவதில்லை என்ற பிரபாகரனின் நம்பிக்கையீனமான முன்கூட்டித் தெரிவித்த கருத்தையே பேட்டியின் இறுதியில் குறிப்பிட்டு அதனைப் ப+ர்த்தி செய்தேன்.



மூன்று மாதத்திற்குள்ளேயே அந்த உடன்படிக்கை முடிவுக்கு வந்தது. உடன்படிக்கை முறிவடைவதற்கு ஒரு மாத காலத்திற்கு முன்பாக யாழ்ப்பாணத்தில் பிரபாகரனை நான் சந்தித்தேன்.


அந்தப் பேட்டி நேரம் முழுவதும் தனது சிறுத்தைக் குட்டியான சீதாவை வருடியவாறு பிரபாகரன் இருந்தார். அது மேசையின் மீது படுத்துக் கிடந்தது. அதுவொரு கவர்ந்திழுக்கக்கூடிய சிறுத்தைக்குட்டி. சில மாதங்களுக்குப் பின்னர் அது இறந்து விட்டது. அதனை இந்தியப் படையினர் கொன்று விட்டனர்.


கிட்டத்தட்ட பிரபாகரனை இந்தியப் படையினர் பிடித்து விடக்கூடிய தருணமாக அது இருந்தது. பிரபாகரனின் மறைவிடத்தைத் தாங்கள் சூழ்ந்துக் கொண்டிருந்ததாக இந்தியப்படையினர் தெரிவித்திருந்தனர். ஆனால், அதற்கு சில கணங்கள் முன்பாக பிரபாகரன் சமாளித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார்.


அவர் துரிதமாகச் சென்றதால் அவரின் செல்லப்பிராணியை விட்டுச் செல்ல நேரிட்டது.

அதனைப் புகைப்படங்கள் எடுத்து இந்தியர்கள் தாங்கள் உண்மையாகவே பிரபாகரனை நெருங்கிவிட்டதாக நிரூபிப்பதற்கு இறந்துகிடந்த சிறுத்தையைக் காட்டினார்கள்.


1987 இல் பிரபாகரனை நான் பேட்டி கண்டபோது குறிப்பிடத்தக்க முக்கியமான மாற்றம் அந்தக் கெரில்லாத் தலைவர் உடல் ரீதியாக அடைந்திருந்த மாற்றமாகும்.

ஆஜானுபாகுவான தோற்றம், அடர்த்தியான கத்தரித்த தலை மயிர் என்பவற்றுடன் அவர் காணப்பட்டார்.


பேட்டியின் போது மிக சாவகாசமாக காணப்பட்டார். பேட்டி மணிக்கணக்கில் நீடித்தது. நான் ஆங்கில மொழியில் கேள்வி கேட்டேன். அக்கேள்விகள் தமிழில் மொழி பெயர்க்கப்படும். அவர் அதற்குத் தமிழில் பதிலளிப்பார். எனக்கு தமிழ்மொழி விளங்கும். ஆயினும், அவர் கூறுவதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொல்லுமாறு கேட்டுக் கொண்டேன். ஏனெனில், நான் புரிந்து கொண்டவை மிகச்சரியானதாக இருக்கவேண்டும் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காகவே அவ்வாறு கேட்டுக் கொண்டேன். இது நேரமெடுக்கும் விவகாரமாகும்.


ஆனாலும், எப்போதுமே பிரபாகரன் பொறுமையைக் கடைப்பிடித்தார்.


பேட்டி அரைவாசியில் சென்று கொண்டிருந்த சமயம் பிரபாகரனின் திருகோணமலைப் பகுதி தளபதி அங்கு வந்தார். சிறிய கண்களுடன் வேறுபட்ட தோற்றத்துடன் காணப்பட்ட அவரைப் பார்த்தால் இரை தேடும் புலியைப் போன்று காணப்பட்டார்.

ஏதோவொன்று நடத்திருக்க வேண்டும். பிரபாகரனின் காதுக்குள் தமிழில் குசுகுசுத்தார்.
காதுகொடுத்துக் கேட்க முயற்சித்தேன். ஆனால், அவர் என்ன கூறினார் என்பதை என்னால் கிரகித்துக் கொள்ளமுடியவில்லை. ஆனால், அவர் ஒரு கவலையான செய்தியைத்தான் கூறினார் என்பது நிச்சயமாகத் தெரிந்தது.


ஒருவருடைய முகம் சடுதியாக மாறுதலடைவதை நான் ஒருபோதும் கண்டதில்லை. புலேந்திரன் கூறுவதைப் பிரபாகரன் செவிமடுக்க ஆரம்பித்த போதும் அவருடைய முகம் மாற்றமடையாமல் இருந்தது. தான் கொண்டுவந்த செய்தியை விபரமாக புலேந்திரன் தொடர்ந்து கூறியபோது, பிரபாகரனின் முகம் மாறுதலடைய ஆரம்பித்தது.

அவர் கூறிமுடிக்க சுமார் 5 நிமிடங்கள் எடுத்தன.

பிரபாகரனின் முகத்தில் இருண்டு சோக ரேகைகள் படிந்தன.
அவரின் கண்ணிமைகள் சிலிர்த்து கரிப்படைந்தது.
அறுபது பாகை கோணத்தில் புருவங்கள் உயர்ந்தன. கண்கள் இகழ்ச்சியாகச் சரிந்தன. வாய் இறுகமூடியது. குழம்பிப் போன தன்மை தெரிந்தது. அவர் சற்றுக் கருமையான நிறமுடையவர். ஆனால், பச்சோந்தி போன்று மாறுபட்ட தோற்றத்தில் என் கண்பார்வைக்குத் தென்பட்டார். முகம் இறுகிக் கருமையாகியது. கிட்டத்தட்ட அவரின் தலைமயிரையொத்த நிறமாகத் தென்பட்டார்.

எனக்கு மயிர் கூச்சல் ஏற்பட்டதை உணர்ந்தேன்.

முழுமையான மாற்றத்தை அவரில் அவதானித்தேன். இடி இடிப்பதற்கு முன்னராக காணப்படும் மேக மூட்டம் போன்று அவர் காணப்பட்டார்.
ஆனால், அவர் எதனையும் வெளிப்படுத்தவில்லை. உணர்ச்சியை வெளிக்காட்டாதவராக அமர்ந்தார். மென்மையாகப் பேசினார். அவரின் உதடுகளிலிருந்து தப்பியோடிய வார்த்தைகள் சீறொலியாக எழுந்தன.


எனது ஒரு பையன் காயமடைந்தால் அவர்களில் பத்துப் பேரைக் கொல்வேன் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். எனது ஆட்கள் மீண்டும் தாக்கப்பட்டால் நாம் ஆயுதங்களை மீண்டும் எடுக்க நேரிடும் என்று அவர் கூறினார்.

கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் சில தமிழ்ப் பொதுமக்களும், புலி உறுப்பினர்களும் காயமடைந்திருந்தனர்.

இந்தியப் படையினருக்கே இந்த அச்சுறுத்தலை பிரபாகரன் விடுத்திருந்தார்.


அவர் விடுத்த செய்தி தெளிவானது. அதாவது, தமிழர்களின் பாதுகாப்பை இந்தியர்கள் உறுதிப்படுத்தாவிடின் புலிகள் மோதலுக்கு திரும்பி வந்துவிடுவார்கள் என்பதே அந்தச் செய்தியாகும்.

விடுதலைப்புலி உறுப்பினர் ஒவ்வொருவரினதும் மரணத்திற்கும், காயத்திற்கும் அவர் பழிவாங்குவார் என்பதே அவரின் செய்தியாகும்.

தொடரும்..

Read More...

Monday, September 26, 2005

திலீபன் ஆற்றிய உரை.1987

தமிழ் மக்கள் எழுச்சியை மழுங்கடிக்கவே காலாகாலமாக சமாதான ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது.தமிழ் மக்கள விழிப்பாக இருக்கவேண்டும்.1987 ம் ஆண்டு கோட்டை முன்றலில் நடாந்த மறியல் போராட்டத்தில் திலீபன் ஆற்றிய உரை..

Read More...

Friday, September 23, 2005

வாலு போயி கத்தி வந்தது..

பெண்கள் கல்யாணம் ஆவதற்கு முன்பு வேறு ஆண்களுடன் உறவுகொள்வது சகஜம் என்று நடிகை குஷ்பு சொல்லியிருப்பதற்கு பல தரப்பிலிருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது.

சென்னை, செப். 23 குஷ்புக்கு சரமாரி கண்டனம்!http://www.tamilmurasu.in/(மாலைப்பத்திரிகை)

‘’தமிழ்ப் பெண்களை குஷ்பு அவமானப்படுத்திவிட்டார். தனது சொந்த வாழ்க்கையைப் போல மொத்த சமுதாயமும் இருக்க வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார். தனது, கொச்சையான கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும்‘’ என்றும் எதிர்ப்புக் குரல் கிளம்பி இருக்கிறது.

சமீபத்தில் வெளியான இந்தியா டுடே இதழில் செக்ஸ் பற்றி குஷ்பு கூறிய கருத்து இதுதான்:‘’பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பதுபோன்ற எண்ணங்களிலிருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் போகிறவள் கன்னித்தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால் திருமணத்துக்கு மு ன் பு ª ச க் ஸ் வைத்துக்கொள்ளும்போது கர்ப்பம் ஆகாமலும். பால்வினை நோய் வராமலும் பெண் தன்னை
தற்காத்துக்கொள்ள வேண்டும்‘’

குஷபுவின் இக்கருத்துக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அதன் விவரம்:

நாஞ்சில் சம்பத் (ம.தி.மு.க. கொள்கைப்பரப்பு செயலாளர்): தமிழையும் தமிழ் கலாசாரத்தையும் கொச்சைப்படுத்துகிற விஷயம் இது. நடிகை குஷ்பு, தன்னுடைய நீதியை பொது நீதியாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் உயிரைவிடவும், கற்பை மேலாக மதிப்பது தமிழ்க்கலாசாரம். எப்படி வேண்டுமானாலும் வாழலாம்,ஒழுக்கம் தேவையே இல்லை என்பது சிலரின் வாழ்க்கை முறையாக இருக்கலாம். மொத்த சமுதாயமும் அப்படி இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பது சுத்த அபத்தம். பெண், எல்லா வகையிலும் உரிமை பெற்றவளாக மாற வேண்டும், வாழ வேண்டுமென்பதே எங்களின் லட்சியம். அது ஒழுங்கீனத்தில் போய் விட்டுவிடக்கூடாது. இது பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் சேர்த்துதான்.

பிரவீன்காந்த் (இயக்குநர்): குஷ்பு தமிழ்நாட்டுக்கு தெரியாத நடிகையே இல்லை. அவருக்கு இங்கே கோயில் கட்டி கும்பிட்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர் இப்படி ஒரு கேவலமான, கலாசார சீரழிவான கருத்தை சொல்லி இருப்பதால் கழிவறையில் ஆண் பெண் என்று வித்தியாசம் காட்டும் படமாக இவர் படத்தை ஒட்ட வேண்டும். அந்த அளவுக்கு இந்தக் கருத்தின் மூலம் தரம் தாழ்ந்துவிட்டார். நடிகை என்பதால்தான் அவர் இப்படி « ப சு கி றார் . அ வ ¬ ர பொறுத்தவரை இது பெரிய விஷயமே இல்லை. தனது கருத்துக்கு குஷ்பு நிச்சயம் ம ன் னி ப் பு க் « க ட் க வேண்டும்.

இல.கணேசன் (பா.ஜ.க. அகில இந்திய செயலாளர்): குஷ்புவின் கருத்து கவலை அளிக்கிறது. ஒட்டுமொத்த ச மு தாய « ம இ த ற் கு கவலைப்பட வேண்டும்.

தேன்மொழி (ஐகோர்ட் முன்னாள் அரசு வழக்கறிஞர்): கு ஷ் பு த ன் ன ¬ வ த் து க் ª க £ ண் டு எல்லோரையும் மட்டமாக « ப ச க் கூ ட £ து .

இ ந் து கலாச்சாரத்தை சீர்குலைக்கும் கருத்து இது. குஷ்பு எல்லா ª ப ண் க ¬ ள யு ம் இழிவுபடுத்துகிறார்.

உமா மகேஸ்வரி (கவிஞர்): படித்தவனோ படிக்காதவனோ த ன் ம ¬ ன வி யி ட ம் க ன் னி த் த ன் ¬ ம ¬ ய எதிர்பார்க்காமல் இருப்பான் எ ன் ப ¬ த எ ன் ன £ ல் ஏ ற் று க் ª க £ ள் ள முடியவில்லை.

சினேகன் (பாடலாசிரியர்): தமிழச்சிகளுக்கு தனி வரலாறு உண்டு. அதை ஓடி வந்தவர்கள் அசிங்கப்படுத்த வேண்டாம்.

சுந்தர்.சி. (குஷ்புவின் கணவர்): குஷ்புவின் பேட்டியை படித்தேன். இதெல்லாம் சின்ன விஷயம். இதைப் போய் ஏன் பெரிது படுத்துகிறீர்கள்? அசிங்கமான விஷயத்தைப் பற்றி நான் பேசுவதே இல்லை-. இ ¬ த வி ட் டு « வ று விஷயத்தைக் கேளுங்கள்.

http://www.tamilmurasu.in/

Read More...

Thursday, September 22, 2005

காரை.சுந்தரம்பிள்ளைகாலமானார்

கலாநிதி (கவிஞர்) காரை.சுந்தரம்பிள்ளை நேற்றுமுன்தினம் இரவு லண்டனில் காலமா னார். சிறுநீரகக் கோளாறினால் சிலகாலம் பாதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை இந்தமாதம் முற்பகுதியில் மோசமடையத் தொடங்கியது.இறக்கும் போது அவருக்கு வயது 66.லண்டன் பல்கலைக்கழகத்தின் பட்டமும் நாடகவியல் டிப்ளோமாவும் இரண்டு முது மாணிப்பட்டங்களும் நாடக ஆய்வுக்கான கலாநிதிப் பட்டமும் பெற்ற இக்கல்விமான் நான்குமுறை சாகித்திய மண்டலத்தின் இலக் கியப் பரிசுபெற்றார்.பலாலி ஆசிரிய கலாசாலையின் விரி வுரையாளராகவும் கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபராகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற சுந்தரம்பிள்ளை "சங்கிலியம்' , "தேனாறு', "வள்ளி', "பாதைமாறியபோது' முதலிய கவிதை நூல்களையும் "ஈழத்து இசை நாடக வரலாறு'"நடிகமணி வி.வி வைரமுத்து வாழ்வும் அரங்கும்', "இந்து நாக ரிகத்தில்கலை', "சிங்களப் பாரம்பரிய அரங்கு', "மலையகத்துக் காமன் கூத்து' ஆகிய ஆய்வு களையும் செய்தவர்.கலாநிதிப் பட்டத்துக்காக அவர் செய்த "வட இலங்கையின் பாரம்பரிய அரங்கு ' என்ற ஆய்வு பாராட்டுப் பெற்றது; தமிழ் நாட்டில் வெளியிடப்பட்டது.அறுபது, எழுபதுகளில் கவியரங்கு என்ற இலக்கிய வடிவத்தை யாழ்ப்பாணத் தில் மக்களிடையே கொண்டு சென்ற முன் னோடிகளில் காரை. சுந்தரம்பிள்ளை குறிப் பிடத்தக்கவர்
-uthayan-

Read More...

Monday, September 19, 2005

குருபார்வை

குரு பெயர்ச்சி வந்தாலும் வந்தது.பத்திரிகைகள் பலனைப்போட்டுகுழப்பி விட்டன.ஒரு இராசிக்கு இரு பெரும் பிரபல பத்திரிகைகள் எழுதியஇராசி பலன் கீழ்வருமாறு.

உதாரணம் விருச்சிகராசி

தினத்தந்தியின் பலன் பணம் கொட்டும் என்கிறது.

தினமணிப்பலன்பிச்சைக்காரன் ஆவாய் என்கிறது..

தினத்தந்தி:-
குரு பகவான் இப்போது பனிரெண்டாம் இடத்தில் சஞ்சரித்துப் பார்வை பலத்தால் பல வழிகளிலும் பணம் வந்து பையை நிரப்பும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கப் போகிறார். மன்னவன் பனிரெண்டில் சஞ்சரிக்கும் பொழுது மங்கல ஓசையும் இல்லத்தில் கேட்கும். மழலையின் ஓசையும் இடையறாது ஒலிக்கும். தங்கமும், வெள்ளியும் தானே வந்து சேரும். தைரிய மும், தன்னம்பிக்கையும் கூடும். உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு உலகத்தாரே ஆச்சரியப்படுவர்! குருப்பெயர்ச்சிக்கு முன்னதாகவே குருவை வழிபட்டு கூடுதலான நன்மையைக் காணுங்கள்.

தினமணி:-
கடந்த வருடம் முழுவதும் லாபத்திலிருந்து விருச்சிக ராசி அன்பர்களுக்கு நன்மைகளையே வழங்கிக் கொண்டிருந்த குரு பகவான், தற்போது விரய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் உங்களுக்கு சங்கடங்களும், தடைகளும் ஏற்படும். சேமிப்பெல்லாம் கரைந்துவிடும் சாத்தியக்கூறு உண்டு. சம்பாத்தியத்திலும் தடை ஏற்படலாம். பொருளாதார நிலை மிகவும் மந்தமாக இருக்கும். கடன்பாக்கி வசூலாகாது. கேட்ட இடத்தில் கடனுதவியும் கிடைக்காது. அரசாங்க உதவி, உற்றார் உறவினர்களின் உதவி ஏதும் தற்போது இருக்காது. எனவே சிக்கனம் மிகவும் அவசியம். வாங்கிய கடன்களையே சரிவர திருப்பிக் கொடுக்க முடியாமல் அவமானத்திற்கும் மனச்சங்கடத்திற்கும் ஆளாகாமல் இருக்கும் பொருட்டு, மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். சுபகாரியங்களையும் தள்ளிப்போடுங்கள்.

மொத்தத்தில் கோள் என் செய்யும் நாளென் செய்யும் என்று ஆறுதலடையவேண்டியதுதான்.


Read More...

Sunday, September 18, 2005

செவியின்பம் 1

என்னைப்போல் மேடைபபேச்சை தமிழை இரசிக்கும் வலைப்பதிவர்களுக்காக திருவாசகம், வெரித்தாஸ் புகழ் கஸ்பர் அடிகளாரின் நோர்வே உரை.

நன்றி தமிழ்நாதம்.

Read More...

Wednesday, September 14, 2005

வாறாரு வாறாரு வந்துட்டாரு

மதுரை திருநகரிலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்.கப்டன் கட்சியின் புதிய பெயர் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்.




விஜயகாந்த் புதிய கட்சி தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்: ரசிகர்கள் முன்னிலையில் அறிவித்தார்

தமிழ் திரை உலகின் முன்னணி நடி கர்களில் ஒருவர் விஜயகாந்த். கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் குதிக்க போவதாக கூறி வந்தார். இதனை தனது ரசிகர் மன்ற மாநில மாநாட்டில் வெளியிடபோவதாகவும் அறிவித்தார்.

அதன்படி விஜயகாந்த் ரசிகர் மன்ற மாநில மாநாடு மதுரை திருநகரில் செப்டம்பர் 14-ந்தேதி (இன்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக திருநகர் தோப்பூரில் பிரமாண்ட பந்தலும், தஞ்சை தோரணவாயிலும் அமைக்கப்பட்டன. பந்தலுக்கு முன்பு கொடிக்கம்பமும் நடப்பட்டது.






மாநாட்டு பணிகளை பார்வையிட விஜயகாந்த் 2 நாட்களுக்கு முன்பே மதுரைக்கு வந்தார். பசுமலை ஓட்டலில் தங்கி இருந்த அவர் குடும்பத்துடன் வந்து மாநாட்டு பணிகளை முடுக்கி விட்டார்.

இன்று காலை மாநாடு தொடங்கியது. நடிகர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் குடும்பத்தினர் பசுமலை ஓட்டலில் இருந்து தனி பிரசார வேனில் மாநாட்டு பந்தலுக்கு வந்தனர். அவர்களை மன்ற நிர்வாகிகளும், ரசிகர்களும் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.



பின்னர் விஜயகாந்த் கொடி கம்பம் அமைக்கப்பட்டு இருந்த பகுதிக்கு சென்றார். அங்கு ரசிகர்களின் உற்சாக கோஷங்களுக்கு இடையே காலை 7.20 மணிக்கு கொடி ஏற்றி வைத்தார். உடனே 14 வென்புறாக்களை வானில் பறக்க விட்டார்.

அதன் பின்னர் ரசிகர் மன்ற தொண்டர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்துடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கியது.

மாநில அமைப்பு செயலாளரும், மதுரை மாவட்ட தலைவருமான முத்து வரவேற்று பேசினார். நிகழ்ச்சிக்கு மாநில பொதுச் செயலாளர் ராமுவசந்தன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சுந்தர்ராஜன், இணை செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து பஸ், வேன், கார்களில் லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்து குவிந்தனர். காலை 9 மணி வரை சுமார் 1 லட்சம் தொண்டர்கள் வந்திருந்தனர்.

பலத்த கரகோஷத்துக்கு இடையே நடிகர் விஜயகாந்த் 9.35 மணி அளவில் "தேசிய முற்போக்கு திராவிடக்கழகம்'' என்ற தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்தார்.

புதிய கட்சியின் பெயரை மாநாட்டு மேடையில் அவர் அறிவித்ததும் தொண்டர்கள் `தலைவர் கேப்டன் வாழ்க' என்று கோஷம் எழுப்பி உற்சாகமாக கை தட்டினர்.

மாநாட்டு நிகழ்ச்சிகளை கண்டு களிக்க முன்வரிசையில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, அவரது மகன்கள் பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோர் அமர்ந்து இருந்தனர்.

வேட்டி துண்டு வாங்க போட்டா போட்டி

விஜயகாந்த் கட்சி கரை போட்ட வேட்டி, துண்டுகள் விற்பனை மாநாட்டு பந்தலில் `களை' கட்டியது. தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த ரசிகர்கள் அதனை வாங்க போட்டா போட்டி போட்டனர்.

ராட்சத பலூன்

மாநாட்டு பந்தலில் விஜயகாந்த் கட்சி கலரு டன் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டு இருந்தது. அது வழக்காக பார்க்கும் பலூன்களை விட மிக பெரியதாக இருந்தது. மாநாட்டுக்கு வந்தவர்கள் அந்த பலூனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

டிக்கெட் வாங்க குவிந்த கூட்டம்

மாநாட்டில் பங்கேற்க ரசிகர்கள் ரூ.5 கொடுத்து நுழைவு சீட்டு வாங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக மாநாட்டு பந்தல் முன்பு 4 டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் நுழைவு சீட்டு வாங்குவதற்காக ரசிகர்கள் நீண்ட கிï வரிசையில் காத்து நின்றனர்.

முதல்வர்கள் பட்டியலில் விஜயகாந்த் பெயர்

தமிழ்நாட்டில் இதுவரை ஆட்சி செய்த முதல்வர்களின் பெயர் பட்டியல் மாநாட்டு பந்தலில் வைக்கப்பட்டு இருந்தது. இதில் கடைசியாக 2006 என்று எழுதப்பட்டு அதற்கு நேராக உள்ள கட்டத்தில் விஜயகாந்தின் படம் ஒட்டப்பட்டு இருந்தது.

பிரசார வேனின் முன்னும், பின்னும் எம்.ஜி.ஆர். படம்

மாநாடு முடிந்ததும் விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக விசேஷ பிரசார வேன் தயாரிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை அந்த வேனில் தான் விஜயகாந்த் மாநாட்டு பந்தலுக்கு வந்தார். வேனின் முன்புறம் எம்.ஜி.ஆரின் பிரமாண்ட படம் ஒட்டப்பட்டு இருந்தது. வேனின் பின்புறம் எம்.ஜி.ஆரும், ஜானகி அம்மாளும் இணைந்து இருக்கும் படம் ஒட்டப்பட்டு இருந்தது.

அலங்கார நாற்காலியை மறுத்த விஜயகாந்த்

மாநாட்டு மேடையில் தலைவர்கள் இருக்க பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. விஜயகாந்துக்கு மட்டும் விசேஷ அலங்காரங்களுடன் கூடிய பெரிய நாற்காலி போடப்பட்டு இருந்தது. இதை கண்ட விஜயகாந்த் அந்த நாற்காலியில் இருக்க மறுத்து விட்டார். தனக்கும் எல்லோரையும் போல பிளாஸ்டிக் நாற்காலியே போதும் என்று கூறினார். உடனே அலங்கார நாற்காலி அகற்றப்பட்டு அதற்கு பதிலாக பிளாஸ்டிக் நாற்காலி போடப்பட்டது. அதில் விஜயகாந்த் அமர்ந்தார்.

எல்லோரும் நம்மை திரும்பி பார்க்க வேண்டும்: பெண்களை நம்பிதான் கட்சி தொடங்கினேன்- மாநாட்டில் விஜயகாந்த் பேச்சு

மதுரை, செப். 14-





கட்சி பெயரை அறிவித்து விஜயகாந்த் பேசியதாவது:-

எனது இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் உயிரினும் மேலான அன்புத் தமிழ் நெஞ்சங்களே உங்கள் அனைவருக்கும் இந்த மாநாடு ஒரு சவால்.

இந்த சவாலை நீங்கள் எப்படி முறியடிப்பீர்கள் எப்படி அமைதி காப்பீர்கள் என்பதில்தான் எனது முழு எண்ணமும் இருக்கிறது. நமக்கு பிடித்தவர்கள், பிடிக்காதவர்களும் இங்கு இருப்பார்கள். அவர்கள் தப்புத்தப்பாக வெளியே போய் சொல்ல காரணம் ஏற்பட்டு விடக்கூடாது.

இன்னும் சிறிது நேரம்தான் நீங்கள் ரசிகர்கள். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து இங்கு வந்து கூடி இருக்கிறீர்கள். எல்லோரும் நம்மை திருப்பி பார்க்க வேண்டும் என்று ஏற்கனவே கூறி இருந்தேன். அப்படி எல்லோரும் திரும்பி பார்க்கும் அளவுக்கு இங்கே கூடி இருக்கிறீர்கள்.

நான் மாலை 5 மணிக்குத்தான் கட்சியின் கொள்கைகளை விளக்கி பேச இருக்கிறேன். உள்ளே ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறீர்கள். வெளியேயும் ஏராளமான ரசிகர்கள் நிற்கிறார்கள். எல்லோரும் மாநாட்டுக்கு உள்ளே வந்து அமர வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

வெளியே நிற்கிற ரசிகர்களும் மாலையில் உள்ளே வந்து அமரும் வகையில் போலீஸ் உதவியுடன் ஏற்பாடு செய்வேன். நாம் யார் எப்படிபட்டவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிய வேண்டும்.

தமிழ்நாடு மட்டும் அல்ல இந்தியா முழுவதும் தெரிய வேண்டும். இதற்குதான் இந்த மாநாடு.

கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று நானும், என் மனைவியும் அடிக்கடி சிந்திப்போம். எனது நண்பர் பாலசுப்பிரமணியமும் இது பற்றி கடந்த 2 மாதங்களாக எழுதி, எழுதி பார்த்தார். ஆனாலும் சிலர் விஜயகாந்த் கட்சி பெயர் முடிவு செய்து விட்டு அதை அறிவிக்காமல் இருப்பதாக கூறினார்கள்.

உண்மையிலேயே நேற்று இரவுதான் இந்த பெயர் முடிவு செய்யப்பட்டது. மேலே உள்ள தெய்வம், உங்களது ஆசி ஆகியவற்றால்தான் இது முடிந்தது.

உண்மையிலேயே எனக்கும் குழப்பமாகத்தான் இருந்தது. மாநாட்டிற்கு இன்னும் சில நாட்களே இருக்கிறது. இதுவரை பெயர் முடிவு செய்யாமல் இருக்கிறோமே என்று குழம்பிதான் போனேன்.

ஆனாலும் எல்லாம் வல்ல சிவபெருமான், மீனாட்சி அம்மன், எனது குலதெய்வம், திருப்பரங்குன்றம் முருகன் ஆகியோரின் கருணையினால் நம் கட்சிக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.

அந்த பெயரை இதோ அறிவிக்கிறேன். (இவ்வாறு கூறியப்படி `தேசிய முற்போக்கு திராவிடக்கழகம்' என்று விஜயகாந்த் `மைக்'கில் மும்முறை உரக்க சத்தமிட்டு கூறினார்)

எத்தனையோ பெயர்களை வைத்து பார்த்தேன். ஆனாலும் இதுதான் சிறப்பாக இருந்தது. நான் தமிழக மக்களை நம்பி இருக்கிறேன். 90 சதவீதம் மக்கள் என்னை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். அதிலும் 50 சதவீத ஓட்டுகள் பெண்களிடம்தான் உள்ளது.

அந்த நம்பிக்கையில்தான் கட்சியின் பெயரை அறிவித்து இருக்கிறேன். மாநாட்டை 2 நாட்கள் நடத்த வேண்டியதுதானே என்று சிலர் கேட்டனர். எனது ரசிகர்கள் பணக்காரர்கள் அல்ல, ஏழைகள். அதனால்தான் ஒரு நாள் மாநாட்டை கூட்டி இருக்கிறேன் என்று அவர்களுக்கு பதில் கூறினேன்.

நாள் முழுவதும் மாநாட்டில் அவர்கள் இருப்பார்களா? என்று கேட்டனர். அவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன், எனது ரசிகர்கள் நிச்சயம் என்னோடு இருப்பார்கள். அவர்கள் ராணுவம் போன்றவர்கள். எப்போதும் நான் சொல்வதை கேட்பவர்கள்.

"வீழ்வதும் நாமாக இருப்பினும் வாழ்வது தமிழகாக இருக்கட்டும்.''

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

மதுரையிலிருந்து நேரடி ரிப்போர்ட் மாலைமலர்.:)

வந்துட்டோம்ல

Read More...

Monday, September 12, 2005

நந்தவனத்திலோர் ஆண்டி

ஆனையிறவில் நிமிர்ந்த நெஞ்சு
நந்தவனத்தில் குறுகியது.

-நொந்தான்-

Read More...

Sunday, September 11, 2005

1984 லிருந்து...

விடுதலைப்புலிகளின் மாதாந்த பத்திரிகையான விடுதலைப்புலிகள் இணையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமையிலிருந்து தளமேற்றப்பட்டுள்ளது.இதில் விசேடம் என்னவெனில்..இதுவரை வெளிவந்த 20 வருடத்து இதழ்களும் (1984-...)இணையத்தில் பெறக்கூடியதாகவுள்ளது.

Image Hosted by ImageShack.us

இந்திய இராணுவ ஆக்கிரமிப்பாகவிருந்தாலென்ன சமாதான துருப்புகளாகவிருந்தாலென்னஅந்த அந்த அந்த காலத்தில் நடந்த சம்பவங்கள், முற்றுகைகள், கால வாரியான குறிப்புக்கள் யாவற்றையும் ஒரே இடத்திலேயே தரவுகளை எடுத்து கொள்ள கூடியதாகவுள்ளது.

இனி புலிசார் இணையம் என்று யாரும் வழங்கும் கோமாளித்தனமான குறிப்புகளை கருத்திலெடுக்கவேண்டிய தேவையும் வராது.

அனைத்து பத்திரிகைகளும் pdf வடிவில் இருப்பதால் இந்த செயலியை(foxit) இறக்கி பத்திரிகையை படித்துக்கொள்ளலாம்.acrobatreader ஐ விட மிக வேகமாக பக்கங்களை எடுத்துவரும். நிறையும் குறைவு.முயற்சித்துப்பாருங்கள்.

Read More...

Tuesday, September 06, 2005

முற்றுப்புள்ளி பிழை

கரும்புள்ளி செம்புள்ளி குத்துவதுபோல் தற்சமயம் வலைப்பூக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பண்ணுவதுகூடஒரு வீரதீரச்செயலாகிவிட்டது.

இந்த பின்னூட்ட வீரர்களின் திருவிளையாடல்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றன.. பினாமிகள் போல் ஒருவர் பெயரில் இன்னொருவர் அசரீரி பொழிகிறார்.இவர்கள் பேசும் தேவபாசை எந்த வட்டார வழக்கு என்றும் புரிவதில்லை..தமது அரிப்பிற்கு மற்றவர்களை சொறிந்துவிடுகிறார்கள்.

தலித், பார்ப்பான், சிலோன்காரன், இந்தியாக்காரன் ,என்ற வட்டத்தை உடைத்து ஒரு நெருக்கத்தை உண்டு பண்ணிய வலைப்பதிவை, அதன் வளர்ச்சியை ஒரு சில கக்கூஸ் சுவர் கிறுக்கிகள் மீண்டும் பாழாக்குவது வருத்தத்தைவிட கோபத்தையே ஏற்படுகிறது.
வலைப்பதிவுகள் இன்னும் வளர் நிலையிலேயே நிற்கிறது. சுடுநீரை ஊற்றி கருக்கிவிடாதீர்கள்.

வலைப்பதிவர்களுக்கு உற்சாகத்தை கொடுப்பதற்குப் பதில் மன உளைச்சலை கொடுக்காதீர்கள்.

எங்கள் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்..

"வைக்கோல் பட்டடை நாய் தானும் தின்னாது மற்றவர்களையும் தின்னவிடாது "

பி.கு எழுதத்தூண்டிய பதிவு

Read More...

Wednesday, August 31, 2005

ஒழுக்கமற்றவர் இறைவன்

ஒழுக்கமற்றவர் இறைவனானால் என்றதொரு பதிவு யாழிலிருந்து வெளிவந்துள்ளது.எப்படி இப்படி ஒரு சிந்தனை வலைப்பதிவாளருக்கு எழுந்தது?அதுவும் யாழிலிருந்து..அந்தளவிற்கு அங்கு எல்லாரும் சிந்தனை மழுங்கியா இருக்கிறார்கள்? அல்லது வலைப்பதிவின் பின்னூட்டத்தை கூட்டிவலைப்பதிவை விளம்பரம் செய்ய இப்படி ஒரு உத்தியா?..
என்னவோ மற்றவனுக்கு "பேப்பட்டம் "கட்டாதீர்கள்.

Read More...

Tuesday, August 30, 2005

தங்கருக்கு சனி மாற்றம் நல்லதல்ல..


சிலருக்கு வாயில் சனி தேவையான நேரம் வந்து அமர்ந்துவிடுகிறது.தங்கபச்சான் அந்த இரகம்.
என்னவோ சொல்ல நினைத்து என்னவோ சொல்லி எல்லோரிடமும் வாங்கி கட்டுகிறார்.லொஜிக்காக நினைத்துப்பார்த்தால் கூடதங்கர் அப்படி பேசியிருக்கமாட்டார்.அப்படி பேசியிருந்தாலும்கூட அந்த அர்த்தத்தில் பேசியிருக்கமாட்டார்.

யார் பேசியிருந்தாலும் ஒரு திரைப்படத்துறையில் இருப்பவர் அதுவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கலைஞன் அப்படி அர்த்தத்தில் பேசியிருக்க வாய்ப்பு குறைவு.

மொத்தத்தில் தங்கருக்கு சனி மாற்றம் நல்லதல்ல..

Read More...

Tuesday, August 23, 2005

பத்திரிகையாளன்

செய்தி சேகரிக்க சென்ற ஒரு சாதாரண பத்திரிகையாளனே ஒரு படித்தவர்கள் என்று சொல்லப்படும் ஒரு இனவாத அரசியல் கட்சியினரால் இப்படி தாக்கப்படும்போது தமிழரின் அரசியல் எதிர்காலம் பற்றிய ஒரு கணிப்பு தேவையற்றதாகிவிடுகின்றது.

Read More...

Monday, August 22, 2005

test

test

Read More...